• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்

15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்

Chennai TVK Functionary Murder: சென்னையில் தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 07, 2026, 11:08 IST|Updated: Sep 07, 2026, 11:25 IST
joinshare
15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai TVK Functionary Murder: சென்னையில்  தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.  கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தவெக நிர்வாகி கொலை

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணான் துறை ராமசாமி அவென்யுவில்  பகுதியில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் என்பவர் மர்ம நபர்களால் செப்டம்பர் 5ஆம் தேதி இரவு ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் கொலை செய்யப்பட்ட தவெக நிர்வாகி கண்ணன், பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கில் கண்ணன் தொடர்புடையவராக இருந்து வருகிறார்.  அரசியலுக்கு வந்த பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருவதால், தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா, அல்லது பழைய கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் படிக்க: நீண்ட நாளுக்கு பிறகு ரெட் தக்காளி... பள்ளி விடுமுறையா...? சென்னை வானிலை அப்டேட்ஸ்
 

15 ஆண்டுகள் பகை

இந்த சம்பவம் தொடர்பாக அடையார் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்டோர் அடங்கிய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கண்ணன் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுக வட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: சென்னையில் நாளை மின்தடை.. இந்த பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது!

இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக பரணி, கார்த்திக், ஹரிகரன், மணி, நரேஷ் ஆகிய ஐந்து பேரை சாஸ்திரி நகர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் கைது செய்யப்பட்டார் ஐந்து பேரிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் சாஸ்திரி நகர் தனிப்பட்ட போலீசார் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு சிவா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக இருந்த கண்ணன் என்பவரை பள்ளிக்கு பழிவாங்க இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக தற்பொழுது காவல்துறை தரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அடையார் பகுதியில் பரணியின் பெரியப்பா சிவா, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பரணியின் தந்தை வேலு கடந்த 2016ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டார்

மேலும் படிக்க: பயணிகளே ஷாக்! எழும்பூரில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த முன்விரோதம் காரணமாகவே பரணி தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் தற்பொழுது இந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்த சிசிடிவி காட்சியில் தனது அலுவலகத்தில் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்த கண்ணனை இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த  கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் கண்ணனின் ஆதரவாளர்கள் அவரைக் காப்பாற்றும் நோக்கில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கற்களை வீசி அவரை காப்பாற்ற முற்பட்ட பொழுதும் கொலையாளிகள் அவர்களையும் மிரட்டி தமிழக வெற்றி கழக நிர்வாகி கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்வது போன்ற காட்சிகள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவில் பெற்றுள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime