நம்மில் பலருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கலாம். இவை வளர்ந்ததற்கு முக்கிய காரணம், ஒரு விஷயம் விளாவாரியாக தெரிந்து கொள்ள, அவை குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை, பார்த்து படித்து தெரிந்து வந்தோம். அப்படி சிறு வயதில் எடுத்துக்கொண்ட கற்றல் மற்றும் வாசிப்பு ஆர்வம்தான் பின்னாளில் அந்த நபர் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கும் உதவும். ஆனால், இப்போது காலம் அப்படியல்ல. நொடிப்பொழுதில் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளக்கூடிய வலிமை கொண்ட செல்போன் நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தை பொருமையாக அமர்ந்து படிக்கவும் கற்றுக்கொள்வதற்கான பொறுமையும்தான், நம்மில் பல பேருக்கு இல்லாமல் போயுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில், புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.
வாசிப்பு பழக்கம் என்பது, படிப்பறிவு கிடையாது. இதுதான், அனைத்து கற்றல் வழிமுறைகளுக்கும் அடித்தளமாக அமைகிறது. ஒரு குழந்தை வரலாறு, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள சிரமப்பட்டால், அவர்கள் எதிர்காலத்தில் கல்லூரி படிப்பின் போதோ, வேலைக்கு சென்ற பிறகோ அதில் தன் பங்கு என்னவென்பதை தெரிந்து கொள்ளாமலேயே செயல்பட வாய்ப்புள்ளது.
இதனால்தான், அதிகரித்து வரும் எழுத்தறிவு பற்றாக்குறையானது அடிப்படையில் ஒரு வாய்ப்பு நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது, அவர்களின் எழுத்தறிவு மற்றும் படிப்பறிவை வைத்துதான் இருக்கிறது.
கருப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க பள்ளி மாணவர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக National Urban league வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கல்விமுறை குறித்து பேசுகிறோம் என்றால், எழுத்தறிவு அதன் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக, பல பள்ளிகள் பள்ளிப்படிப்பு மற்றும் வாசிப்பு பழக்கத்தை சரிசமமாக நடத்தும் கல்வி முறையை செய்து வந்தது. இது, குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தையும் தூண்டியது. இந்த அணுகுமுறை நல்ல நோக்கத்துடன் இருந்தபோதிலும், பல சமயங்களில் அடிப்படைத் திறன்களுக்கான கற்பித்தல், குறிப்பாக ஒலியியல் மற்றும் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை பாதிக்கப்பட்டன.
தற்போது 9-11ஆம் வகுப்பு படிக்கும் பல்வேறு மாணவர்கள் இலக்கியம், வரலாறு அல்லது சிக்கலான தகவல் சார்ந்த நூல்களை படிகக் சிரமப்படுகின்றனர். கல்லூரி ஆசிரியர்கள், இப்போதுள்ள தலைமுறை மாணவர்கள், பெரிய கல்வி வழிமுறைகளை (Assignments) பின்பற்ற முந்தைய தலைமுறையை விட சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
அதிகரிக்கும் ஸ்க்ரீன் டைம், டிஜிட்டல் முறையில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் கவனச்சிதறல், குறைக்கப்பட்ட கவனக் காலங்கள், சமூக வலைதளத்தின் அல்காரிதம் உள்ளிட்ட பல வாசிப்பு பழக்கம் ஏற்படாமல் போவதற்கும், கற்றல் திறன் மேம்படாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகள்தான் அப்படி என்று பார்த்தால், இந்தியாவிலும் இதே நிலைதான் நிலவுகிறது. சமீபத்தில் முக்கிய நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் தகவல்களை படி, 2019உடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் 4 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களில், 37% பேர் தங்களின் மன மகிழ்ச்சிக்காக புத்தகம் படிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி வீட்டுப்பாடம், பள்ளிக்கு தேவையானதை பூர்த்தி செய்வதை தாண்டி, அவர்களுக்கு புத்தகம் படிப்பதை மகிழ்ச்சியாக கருதுகின்றனராம்.
மலேசிய அமைச்சர் Datuk Seri Fahmi, சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே படிக்க்உம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுதான், அவர்களின் எழுத்தறிவை வளர்க்கும் என கூறிய அவர், அது அவர்கள் சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களிடம் இருந்து தள்ளி வைக்க உதவும் என கூறியிருந்தார்.
வாசிக்கும் பழக்கம் இல்லாமல், இளைமையில் இருக்கும் பலர் சமூக வலைதளங்களிலும், டிக் டாக் போன்ற செயலிகளிலும் தங்கள் நேரங்களை செலவழிப்பதாகவும், இதனால் அவர்களின் அறிவாற்றல் வளர்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
“ஒரு நல்ல வாசிப்பு அடித்தளமும், வாசிப்பின் மீது நீடித்த ஆர்வமும் இல்லாவிட்டால், நம் குழந்தைகள் டிக்டாக்கில் நேரத்தைச் செலவிட மட்டுமே விரும்பக்கூடும் அல்லது கதைப் புத்தகங்களை ஆராய்வதில் ஆர்வத்தை இழக்கக்கூடும் என்பதால், நான் இந்தக் கவலையை எழுப்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து, புத்தகம் படிப்பதால் சொற்களஞ்சியத்தை வளர்ப்பது மட்டுமின்றி, நமக்கு மிகவும் பரந்த அனுபவத்தையும் வழங்குகிறது” என கூறியிருக்கிறார்.