SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: உண்ணி காய்ச்சல் என்றால் என்ன? சென்னை மாணவர் பலி.. அறிகுறிகளே கவனிங்க!

Scrub Typhus Explained: உண்ணிக் காய்ச்சலால் அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உண்ணிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன, இதனை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 22, 2026, 17:32 IST | Updated: Sep 22, 2026, 17:47 IST
Image Credit: Image Source: Chatgpt AI
Join

Scrub Typhus Explained: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்தனர் 20 வயதான ஹரிஷ். இவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டதை  அடுத்து, ஆரம்பத்தில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால், Scrub Typhus எனும் உண்ணிக் காய்ச்சலால் அவர் உயிரிழந்தார் என்பது கண்டறியப்பட்டது.  அவருக்கு கடுமையாக சவாசக் குறைபாடு, பல உறுப்பு செயலிழப்பு ஆகியவை கண்டறியப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: Explainer: பீகார் டு டோக்கியோ.. யார் இந்த அபிஷேக் ஆனந்த்! ஜப்பான் கிரிக்கெட்டில் கால் பதித்தது எப்படி?

சென்னையில் 173 பேருக்கு பாதிப்பு

இந்த ஆண்டு சென்னையில் பதிவான முதல் உண்ணி காய்ச்சல் மரணம் இதுவே ஆகும். இதுவரை 173 பேர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை சென்னையில் உள்ள 3,103 கல்வி நிறுவனங்களில் 1,635 நிறுவனங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  கடந்த வாரம் பள்ளிகள்,  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட 231 நிறுவனங்களில் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது. 

அன்றைய தினம், 90 பள்ளிகள் மற்றும் 159 விடுதிகள் உட்பட சுமார் 1,976 வளாகங்களில் பெருமளவிலான பூச்சி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி நகரின் 15 மண்டலங்களில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 3,597 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்ணி காய்ச்சல் என்றால் என்ன?

Scrub Typhus எனும் உண்ணிக் காய்ச்சல் தற்போது அதிகம் பரவி வருகிறது. உண்ணிக் காய்ச்சல் என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் காணப்படும் Orientia tsutsugamushi என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றாகும். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போலல்லலாமலும், கொசுக்களால் பரவுவதில்லை. மாறாக, சிக்ரஸ் என்று அழைக்கப்படும் லார்வா (Larva) உண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது. 

இந்த உண்ணிகள் பொதுவாக அடர்ந்து வளர்ந்த புற்கள், புதர்கள், முட்புதர் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அடர்த்தியான தாவரங்கள் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. தாவரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று பரவலாம். இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் Scrub Typhus எனும் உண்ணிக் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இது பருவமழை காலத்தில் அதிகம் பரவும்.

மேலும் படிக்க: Explained: ஐஐடி பாம்பே மாணவர் மரணம்: தேர்வு முறைகேடா? சாதிய துன்புறுத்தலா? - நடந்தது என்ன?
 

அறிகுறிகள் என்ன?

உண்ணி கடித்த பிறகு, பொதுவாக ஒன்று முதல் மூன்று வாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றும்.  அதன்படி,

 

 

உண்ணி காய்ச்சலை கண்டறிவது ஏன் கடினமாக உள்ளது?

குறிப்பாகப் பருவமழைக் காலத்தில், காய்ச்சலை உண்டாக்கும் பல பிற நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளுடன் உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகளும்  இருக்கின்றன. இதனால், உண்ணிக் காய்ச்சல் கண்டறியப்படாமல் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில், நோயாளிகளுக்கு டெங்கு, மலேரியா அல்லது வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றன. 

ரத்த பரிசோதனை, பிசிஆர் போன்ற பரிசோதனைகள் மூலம் உண்ணிக் காய்ச்சல் இருப்பதை கண்டறிய முடியும். தீவிர அறிகுறிகள் இருந்தால், பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருக்காமல், சிகிச்சை தொடங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்ணிக் காய்ச்சலுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது முக்கியம். இல்லையெனில் உறுப்பு செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உண்ணி காய்ச்சலுக்கான தடுப்பு வழிகள்

உண்ணிக் காய்ச்சலை தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும்  இல்லை. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள், காடுகள், வனப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, செடி, கொடிகள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வோர்,  ட்ரெக்கிங் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த பகுதிகளுக்கு செல்லும் போது, முழுக்கை ஆடைகள், நீண்ட கால்சட்டைகள் மற்றும் மூடிய காலணிகளை அணிய வேண்டும்.  

பூச்சி கடிக்காமல் இருக்க உடல்களை மறைக்கும் வகையில், ஆடை அணிந்து செல்ல வேண்டும். பூச்சி கடிப்பதை தடுக்கும் மருந்துகளை கை, கால்களுக்கு போட வேண்டும். வீடுகளைச் சுற்றியுள்ள புல்வெளிகளையும் தாவரங்களையும் ஒழுங்காக வெட்டி வைக்க வேண்டும். 

சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.  செடி, கொடி, மரங்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு, ஆடைக துவைக்க வேண்டும். உடலில் எங்கேனும் பூச்சி கடித்த தடம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: மின் கட்டண பிரச்சனைக்கு தீர்வு! ரூ.1 லட்சம் மானியம்: தமிழ்நாடு அரசின் குட் நியூஸ் Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES