வெற்றிப் பயண திட்டம் : தவறாக புரிந்து கொள்ளும் பெண்கள்! தெளிவாக விளக்கிய நடத்துனர்!
வெற்றிப்பயணம் குறித்து இப்போதும் பல பேருக்கு பல்வேறு வகையிலான சந்தேகங்கள் இரக்கின்றன. இந்த சமயத்தில், கோவையில் ஒரு நடத்துனர் எந்தெந்த பஸ்ஸில் எல்லாம் மகளிருக்கு இலவசம் என்பது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவெக அரசின் வெற்றிப்பயண திட்டம், சில நாட்களுக்கு முன்பாக, முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பில், அரசு விரிஅவு போக்குவரத்துகழக பேருந்துகளான SETC தவிர்த்து, Mofussil, LSS, Deluxe மற்றும் சாதாரண பேருந்துகள் என அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம், இது குறித்த புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லாமல் இருப்பதுதான்.
நடத்துனரின் வைரலாகும் வீடியோ!
கோவையை சேர்ந்த நடத்துனர் ஒருவர், இந்த வெற்றிப்பயண திட்டம் குறித்து பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பின்வருமாறு பேசியிருக்கிறார்.
“நம்முடைய அரசு, மக்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த திட்டம் குறித்து முழுமையாக தெரியாமல் பல பேருந்துகளில் நடத்துநர்களிடம் பயணிகள் தேவையின்றி வாக்குவாதம் செய்கின்றனர். நாம் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
Town Bus என்பது, என்பது, ஊருக்குள் செல்லும் பேருந்து; புறநகர் பேருந்து அதாவது Mofussil என்பது மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லும் பேருந்து.
நகரப்பேருந்துகள் அனைத்திலும், மகளிர் இப்போது கட்டணமின்றி பயணிக்கலாம். அது, LSS, Deluxe என எதுவாக இருந்தாலும் நகரப்பேருந்து என்றால் இலவசம். அந்த இலவச பயணத்தை உறுதி செய்ய, அந்த பேருந்துகளில் கண்டிப்பாக‘வெற்றிப்பயணம்’ என ஒட்டப்பட்டிருக்கும்.
புறநகர் பேருந்துகள்:
புறநகர் பேருந்துகளை பொறுத்தவரை, சாதாரண கட்டணம் என்றும், ‘வெற்றிப்பயணம்’ என்றும் பலகை வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளில் மட்டுமே மகளிர் கட்டணமின்றி பயணம் செய்ய இயலும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
எதில் எல்லாம் இலவசம்?
முன்பு, நகர பேருந்துகளில் சாதாரண கட்டண பேருந்துகளுக்கு மட்டுமே இலவசம் அனுமதிக்கப்பட்டிருந்தது. எல் எஸ்.எஸ் அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் அனுமதி கிடையாது. ஆனால், இப்போது நகர பேருந்துகள் அனைத்திலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.
மொஃபால் பேருந்துகளில், சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டுமே இலவசம் பொருந்தும். இந்த சாதாரண கட்டண பேருந்துகள் என்பது, ஒரு மாவட்டத்திலிருந்து, பக்கத்து மாவட்டத்தின் நகரங்களை இணைப்பவையாக இருக்கின்றன. அந்த பேருந்துகளில், ‘வெற்றிப்பயணம்’ என்று போடப்பட்டிருந்தால் மட்டுமே, இலவசமாக பயணிக்க முடியும். இதில், வெற்றிப்பயணம் என்று போட்டும், நடத்துநர் டிக்கெட் எடுக்க சொன்னால் மட்டும் நாம் நியாயம் கேட்கலாம் என்று அந்த நடத்துனர் கூறியிருந்தார்.
தவறாக புரிந்து கொள்ளும் மக்கள்!
இந்த வெற்றிப்பயண திட்டத்தின் கீழ் கொண்டு வந்த பஸ்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத பெண்கல், இலவச பேருந்துகள் அனைத்தும் மகளிருக்கான ஸ்பெஷலான பஸ்கள் என்று நினைத்துக்கொண்டனர்.
இதன் விளைவாகத்தான், தங்களுடன் பஸ்ஸில் பயணிக்கும் ஆண்களிடம் வாக்குவாதம் செய்வதும், வண்டியை விட்டு கீழே இறங்க சொல்வதும் நடந்து வருகிறது.