• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : ராகுல் காந்தி பேரணியால் பரபரப்பு; டெல்லியில் கட்டடம் இடிந்தது, ரெப்போ விகிதம் உயர்வு
Live Now

Tamil News LIVE : ராகுல் காந்தி பேரணியால் பரபரப்பு; டெல்லியில் கட்டடம் இடிந்தது, ரெப்போ விகிதம் உயர்வு

உள்ளூர் முதல் உலகம் வரை, எங்கெங்கு, என்னென்ன முக்கிய செய்திகள் என்பதை இங்கு லைவ் அப்டேட்டாக பார்க்கலாம்; இதோ முழு விவரம்

Written ByYuvashree M
Published: Oct 07, 2026, 09:34 IST|Updated: Oct 07, 2026, 22:26 IST
joinshare
Tamil News LIVE : ராகுல் காந்தி பேரணியால் பரபரப்பு; டெல்லியில் கட்டடம் இடிந்தது, ரெப்போ விகிதம் உயர்வு
Image Credit: LIVE News | X Page
07 Oct 2026 20:37 IST
share

Tamil News Live : தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - விதியில் மாற்றம்

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் விதி தளர்த்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

07 Oct 2026 18:57 IST

Rahul Gandhi Live : ராகுல் காந்தி, பிரியங்கா கைது

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மதந்ரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக கைது செய்தது. மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியை போலீசார் வேனில் ஏற்றினர்.

கைதாவதற்கு முன்னர் பேசிய அவர், "ஒவ்வொரு FIR-ம் எனது நெஞ்சில் பதிக்கும் பதக்கம் போன்றது. இப்போதைக்கு 45 உள்ளது, 100 வர வேண்டும் என்பது குறிக்கோள். அதற்கு பிறகும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து சண்டையிடுவோம்" என்றார்.

We are not going to stop protesting till Gyanesh Kumar resigns. This is a fight to protect the most sacred thing in this country. There is nothing that Narendra Modi and Amit Shah can do that will stop us. https://t.co/MgvabcQPPR

— Rahul Gandhi (@RahulGandhi) October 7, 2026

கைதானதற்கு பின்னர் ராகுல் காந்தி X தளத்தில் வெளியிட்ட வீடியோவில், "ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. நமது நாட்டில் மிக புனிதமானதை பாதுகாப்பதற்கான போராட்டம். நரேந்திர மோடி, அமித்ஷா யாராலும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது" என பதிவிட்டுள்ளார்.

07 Oct 2026 18:48 IST

Tamil News Live : 2 ரயில் சேவைகள் மாற்றம்

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு (மேலும் படிக்க)

07 Oct 2026 18:19 IST

Delhi Protest: மாணவர் அமைப்புகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஜந்தர் மந்தரை நோக்கி நாடு முழுவதும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் பெரிய போராட்டம் நடைபெறுமா? முழு விவரங்களை அறிய.. (மேலும் படிக்க)

07 Oct 2026 17:46 IST

மாணவியிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்எல்ஏ

தெலங்கானா அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் காங்கிரஸ் எம்எல்ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். (மேலும் படிக்க)
 

07 Oct 2026 17:39 IST

ரெப்போ விகிதத்தை அதிகரித்து ஷாக் கொடுத்த RBI

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று அடிப்படை வட்டி விகிதமான 'ரெப்போ விகிதத்தை' (Repo Rate) 25 அடிப்படை புள்ளிகள் (basis points) உயர்த்தி, அதனை 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து கார் கடன், வீட்டுக் கடன் போன்ற கடன்களின் வட்டி விகிதங்கள், EMI ஆகியவற்றில் வரக்கூடிய உயர்வு மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது... (மேலும் படிக்க)

07 Oct 2026 17:21 IST

Tamil News Live: ராகுல் காந்தி பேரணியை தடுத்த காவல்துறை

டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாக சென்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், டெல்லியில் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இடையேவும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

07 Oct 2026 17:19 IST

Tamil News Live: ஜெம் வீரமணி அக். 21 வரை நீதிமன்ற காவல்

ஜெம் வீரமணிக்கு வரும் அக். 21ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா உத்தரவிட்டார். மேலும், ஜெம் வீரமணியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரிய காவல் துறையின் மனு மீதான விசாரணை நாளை (அக். 8) நடைபெறும்.

07 Oct 2026 17:01 IST

Delhi Building Collapse Live : டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து

டெல்லியின் சீமாபுரி பகுதியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் பலரும் சிக்கியிருக்கலாம் என அச்சம் (மேலும் படிக்க)

07 Oct 2026 16:31 IST

Tamil News LIVE : தமிழகத்தில் நாளை மின்தடை

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (மேலும் படிக்க)

07 Oct 2026 16:29 IST

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்

ஓய்வூதியதாரர்கள் எந்த வித தடையும் இல்லாமல் மாதா மாதம் ஓய்வூதியம் பெற ஆண்டுக்கு ஒரு முறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதை எப்போது சமர்ப்பிப்பது? அக்டோபர் 1-ஆம் தேதி முதல் யாரெல்லாம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்? யார் நவம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்?.. (மேலும் படிக்க)

07 Oct 2026 16:06 IST

Virat Kohli Latest News : விராட் கோலி மறுப்பு

2023ஆம் ஆண்டில் முதல்முறையாக  பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு செல்வதற்கு விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக குற்றச்சாட்டுக்கு மறுப்பு (மேலும் படிக்க)

07 Oct 2026 15:55 IST

Tamil News LIVE : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்காக அறிவிப்பை நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டது. குரூப் 4 மூலம் இந்தாண்டு மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

 

07 Oct 2026 15:53 IST

Puducherry Power Cut News: புதுச்சேரி மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

குருமாம்பேட் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அக்டோபர் 8-ம் தேதி காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. உங்கள் பகுதி பட்டியலில் உள்ளதா என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். (மேலும் படிக்க)

07 Oct 2026 15:44 IST

Nobel Prize for Chemistry: வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2026ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஹென்றி பி.காகன் மற்றும் கென்சோ சோய் ஆகிய இருவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

07 Oct 2026 15:24 IST

Puducherry News: புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் லாஸ்பேட்டை மோத்திலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பலத்த 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டன. இதனிடையே, புதுச்சேரியில் டெங்கு நிலவரம், டெல்லி மாநாட்டில் அமைச்சர் பங்கேற்பு, ராக் பீச்சில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உலா மற்றும் அக்டோபர் 8 மின்தடை அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் முழு விவரங்கள்... (மேலும் படிக்க)

07 Oct 2026 15:22 IST

திரிபுரா மாநில அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு

அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு குறித்த அறிவிப்பை திரிபுரா அரசு வெளியிட்டது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வரும், அதாவது அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும்... (மேலும் படிக்க)

07 Oct 2026 14:35 IST

Tamil News: மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாதம் ரூ.1,000 பெறும் பெண்கள் கவனத்திற்கு! ஆதார்-வங்கி இணைப்பு, ரேஷன் e-KYC, வங்கி கணக்கு நிலை உள்ளிட்ட காரணங்களால் உரிமைத் தொகை பாதிக்கப்படலாம். ரூ.2,500 உயர்வு குறித்த உண்மை என்ன? முழு தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்... (மேலும் படிக்க)

07 Oct 2026 13:59 IST

Tamil News Live : ஆவின் பால் தட்டுப்பாடா...?

ஆவின் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ள நிலையில், பால் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

07 Oct 2026 13:34 IST

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், Wealth Executive மற்றும் credit analyst பணியிடங்களுக்கு மொட்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எப்படி அப்ளை செய்வது? இதோ இங்கு தெரிந்துகொள்வோம். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 5 ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்

2

திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

3

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

5

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முதல்வர் விஜய், இன்று மாதவரத்தை அடுத்துள்ள பால்பண்ணையில் ஆய்வு செய்கிறார்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இண்டியா கூட்டணியினருடன் தேர்தல் ஆணையத்துக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டார். பின்னர், நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார்.