• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /கோயம்புத்தூர்
  • /உறவினரிடமே கைவரிசை காட்டிய பெண்.. கோவையில் 15 பவுன் திருட்டு! தூக்கிய போலீஸ்

உறவினரிடமே கைவரிசை காட்டிய பெண்.. கோவையில் 15 பவுன் திருட்டு! தூக்கிய போலீஸ்

Covai Crime News: கோவை ஜோதிபுரத்தில் வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை, புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

Written ByR Balaji
Published: Nov 11, 2026, 06:13 PM IST|Updated: Nov 11, 2026, 06:17 PM IST
joinshare
உறவினரிடமே கைவரிசை காட்டிய பெண்.. கோவையில் 15 பவுன் திருட்டு! தூக்கிய போலீஸ்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்தி 15 சவரன் தங்க நகைகளை திருடிய பெண்ணை, புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

கோவை ஜோதிபுரம் கார்ப்பூரா நகரை சேர்ந்தவர் தினேஷ் பாபு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்னூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் வீட்டிற்கு திரும்பியபோது, பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவு அல்லது பீரோவில் எந்தவித உடைப்பும் இல்லாததால், மர்மமான முறையில் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது, தினேஷ் பாபுவின் பெற்றோர் அருகிலுள்ள நாயக்கனூரில் வசிக்கும் தங்களது உறவினரான சுசீலா என்பவரின் வீட்டிற்குச் சென்றிருந்தது தெரியவந்தது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சுசீலா, அதிகாலை நேரத்தில் தினேஷ் பாபுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வழக்கமாக சாவியை மறைத்து வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்த அவர், வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் பீரோவையும் திறந்து அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் சுசீலாவை கண்டறிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 15 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுசீலா, கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime