• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

Villupuram Gingee Girl Missing: விழுப்புரம் அருகே மீண்டும் 7 வயது சிறுமியை கடத்த முயற்சித்துள்ளனர். 7 வயது சிறுமியின் வாயை பொத்தி கடத்திய நிலையில், சிறுமி கையை கடித்து தப்பித்துள்ளது. 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் இருவர் தற்போது கைதாகி உள்ளனர். ஏற்கனவே செஞ்சியில் 7 வயது காணாமல் போய் 32 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காத நிலையில், மற்றொது சிறுமியை கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 12, 2026, 05:32 PM IST|Updated: Nov 12, 2026, 05:44 PM IST
joinshare
செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

2

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

3

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

4

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

5

ரூ.7 கோடி கேட்டு.. லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Villupuram Gingee Girl Missing: செஞ்சி அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதே பகுதியில் மற்றொரு சிறுமியை கடத்த முயன்றுள்ளனர்.

சிறுமியை கடத்த முயன்ற இருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி  தனியாக நடந்து சென்ற 7 வயது சிறுமியை கடத்த முயன்றதாக செஞ்சி காவல் நிலையத்தில் ஜெயங்கொண்டம் கிராமத்தை சேர்ந்த சிறுமியின் தந்தை அசோக்குமார்  புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் செஞ்சி போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சென்னையில் ஆட்டோ ஓட்டி வரும் செஞ்சி அருகே உள்ள வடதாரம் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (23) மற்றும் பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவா (26) ஆகியோர் சிறுமியை ஆட்டோவில்  குடிபோதையில் கடத்தியது தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து இருவரையும் செஞ்சி போலீசார் பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: கனிமொழி சொன்னது நடக்கவில்லை - அமைச்சர் நிர்மல் குமார்

சிறுமியை கடத்த முயன்றது எப்படி?

விழுப்புரம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 7 வயது சிறுமியை வாயை பொத்தி கடத்த முயற்சி செய்துள்ளனர். கையை கடித்து விட்டு குழந்தை கத்தியதால் குழந்தையை இறக்கிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விழுப்புரத்தில் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் அருகில் உள்ள கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்(42). அரசு பேருந்து நடனத்துனராக உள்ளார். இவருடைய மனைவி விஜியகுமாரி(32) விழுப்புரத்தில் உள்ள அரசு மருந்து குடோனில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அருஷ்(10), தாட்சியாயினி (7) இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் குழந்தை தாட்சியாயினி வீட்டின் அருகிலுள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) வந்த இருவர் குழந்தையை வாயை பொத்தி கடத்தி சென்றுள்ளனர். மாரியம்மன் கோயில் வரை சென்றவர்கள் அப்பகுதியில் ஆட்கள் இருந்ததால் மீண்டும் திரும்பி அஞ்சல் அலுவகம் அமைந்துள்ள சாலை வரை சென்றுள்ளனர். அப்போது குழந்தை விரலை கடித்துவிட்டு கத்தியவுடன் குழந்தையை இறக்கிவிட்டு அரியலூர் கிராமம் வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை..CM விஜய் பாதுகாப்பது ஏன்? திமுக சுறுக் கேள்வி..!

இந்த சம்பவம்  குறித்து விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி குழந்தையை கடத்த முயன்வர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர்.  யார் கடத்தினார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் இன்றோடு 32 நாட்கள் ஆகியும் இதுவரை துப்பு துலங்காத நிலையில் விழுப்புரம் அருகே மேலும் ஒரு குழந்தை கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் இடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிறுமியை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க; திருச்செந்தூருக்கு ஈஸியா போகலாம்.. 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை இதோ

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime