SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கோவை செல்லும் ஸ்டாலின்.. திமுகவின் நீண்ட நாள் கனவு! நாளை நிறைவேற்றம்

தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை (நவம்பர் 04) கோவை செல்ல உள்ளார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கின்றன. மேலும், அங்கு கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

Written By R Balaji
Published: Nov 03, 2026, 02:30 PM IST | Updated: Nov 03, 2026, 02:34 PM IST
Join

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்தன. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மாநில அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் தீவிரமாக செயல்பட்டு வந்த திமுக தற்போது தவெக அரசை எதிர்த்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அதேபோல், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தவெக கூட்டணியில் இணைந்து தற்போது திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர்.

தேர்தல் தோல்விக்கு பிறகு ஸ்டாலின் கோவை பயணம்

சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியை சந்தித்தார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களிலும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இதற்கிடையில், திமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ரெய்டு, வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், தவெக அரசுக்கு எதிராக வலுவான அரசியல் எதிர்ப்பை உருவாக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை (நவம்பர் 04) கோவை வருகிறார். தற்போதுள்ள அரசியல் சூழலில், ஸ்டாலின் கோவை பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

பெரியார் அறிவுலகத்தை பார்வையிடும் ஸ்டாலின்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த திட்டத்தை திறக்க முடியவில்லை.

இதற்கிடையில், தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் தமிழக முதலமைஅச்சர் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுவதால் என்ன பயன் என்ற விமர்சனங்களும் எழுந்தன.  

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட உள்ளார். இந்த கட்டிடத்தை உருவாகியதற்காக திராவிட கழகம் சாரிபில் கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை மாலை பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

திமுகவின் நீண்ட நாள் கனவு

கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒருங்கிணைந்த கட்சி அலுவலகம் இல்லாத நிலை உள்ளது. மாநகர், தெற்கு, வடக்கு என தனித்தனி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்கள் சிறிய அளவில் இருப்பதால், பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் உருவானது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பாளராக இருந்தபோது, இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீலாம்பூரில் புதிய அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளுக்கான திட்டமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அலுவலகம் கட்டும் பணி தாமதமாகி வந்தது. தற்போது நீலாம்பூரில் திமுகவின் புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை திமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்பார்வையில், ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்திற்கான பாராட்டு விழா மற்றும் புதிய கட்சி அலுவலக அடிக்கல் நாட்டு விழா என இரு நிகழ்ச்சிகள் நாளை நடைபெற உள்ளதால், கோவை திமுக நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES