• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

NAFED நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட இருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரம் குறைவாகவும், அழுகிய நிலையிலும் இருந்ததால் கொள்முதல் ஆணையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Written BySudharsan G
Published: Nov 03, 2026, 03:43 PM IST|Updated: Nov 03, 2026, 03:56 PM IST
joinshare
ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? வானரப்பேட்டையில் ரத்தக் களரி

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? வானரப்பேட்டையில் ரத்தக் களரி

2

8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

3

ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

4

தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத தமிழக கிராமங்கள்! ஏன் தெரியுமா? இதோ விவரம்..

5

சமஸ்கிருத மந்திரங்களுடன் திருமணமா... துரைமுருகனை கிழித்தெடுத்த வீரமணி.. திமுகவில் சலசலப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) நிறுவனத்திடம் இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் பிறக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாக கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும்; அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! இலவச மளிகை தொகுப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட்

நியாய விலைக் கடையில் வெங்காய விற்பனை

அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்று வெங்காயம் . வெங்காயத்தின் விலை தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்ந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தைக் குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்தது.

கொள்முதல் செய்த வெங்காயத்தை கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இதை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள TUCS நியாய விலைக் கடையில் இத்திட்டத்தினை அமைச்சர் காந்திராஜ் செப். 3 அன்று தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத் துறையின் 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட கொள்முதல்

வெங்காயம் கொள்முதல் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், வெங்காயத்தை முதற்கட்டமாக, NAFED நிறுவனத்தின் மூலம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடம் இருந்து (NCCF) 65 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 949.44 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 922.92 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 97 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கொள்முதல்

NAFED மூலம் 1,414.33 மெட்ரிக் டன்னும், NCCF மூலம் 460 மெட்ரிக் டன்னும் இரண்டாம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 848.31 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 811.26 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 96 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டமும், பின்னணியும்? Explained

மூன்றாம் கட்ட கொள்முதல்

தொடர்ந்து வெங்காயத்திற்கு பொதுமக்களிடையே நிலவும் தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக சுமார் 700 மெட்ரிக் டன் வெங்காயம் NCCF நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700.19 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. வரப்பெற்ற அளவில் 646.14 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சதவீதம் 92 ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

மூன்று கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாய விலைக் கடைகள் மூலம் இதுவரை வெங்காயம் அனைத்தும் 25 நாட்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டது என்றும் ரேசன் கடைகள் மூலம் வெங்காய விற்பனை தற்போது நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அரசு கேட்ட A தரத்திலான வெங்காயம்

தொடர்ந்து, NAFED நிறுவனத்திடம் இருந்து கிலோ 29 ரூபாய் வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை வழங்கியிருந்தாகவும், இக்கொள்முதலுக்கான வெங்காயம் 'A' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, 'A' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கழிவாக இருந்த 26% வெங்காயம்

மேலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை அக்.31ஆம் தேதி அன்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவு குறைந்த வெங்காயம்

மொத்தத்தில் 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தாகவும், இதனால், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) அக். 31ஆம் தேதி அன்றே NAFED நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்ததாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகர்வோர் நலனையும், கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | TASMAC ஊழியர்கள் போராட்டம்: 245 பேர் சஸ்பெண்ட், 1729 பேருக்கு நோட்டீஸ்... என்ன நடக்குது?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu