SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? அரசியல் மூவ்க்கான அறிகுறியா? தகவல் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தன்னுடைய நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து இருக்கும் விஷயம் குறித்து இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 05, 2026, 10:41 AM IST | Updated: Oct 05, 2026, 10:52 AM IST
Join

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது ‘சேயோன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிவடைவதற்குள்ளாகவே, ’பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த சமயத்தில், அவர் தன்னுடைய நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்திருப்பது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரைக்கு வந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், இப்போது முக்கிய ஹீரோக்களின் ரேஸில் முதலிடம் பிடித்தவராக இருக்கிறார். போதாக்குறைக்கு, தான் திரையுலகில் இருந்து விலகும் போது ‘துப்பாக்கிய புடிங்க சிவா’ என்று விஜய் வேறு அவரிடத்தில் கோலிவுட்டை ஒப்படைத்து சென்று விட்டார். இதனால், இவரது வளர்ச்சி குறித்த மிகுந்த எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கிறது.

எப்போதோ ஹிட் ஹீரோவாக மாறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு தென்னிந்திய முழுக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போது சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளியானாலும் அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆதரவும் இருக்கும். இதனாலேயே இவர் படங்களை தியேட்டர்களில் பார்க்க குடும்பமாக ரசிகர்கள் குவிந்து விடுவர்.

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன், பெரிய அளவில் சென்னையில் உள்ள பிரம்மாண்டமான மண்டபத்தில் நடந்திருக்கிறது. இதில், கிட்டத்தட்ட 4000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை சந்தித்து, ஒவ்வொருவருடனும் சிவகார்த்திகேயன் போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும், தன்னுடைய ரசிகர்களுக்கு புத்தகம் படிக்க சொல்லியும், வாழ்க்கையில் முன்னேற சில அட்வைஸ்களையும்  கொடுத்தார். இதையடுத்து, அவர் ரசிகர்களிடம் பேசிய ஒரு சில விஷயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | ஜான்வி கபூர் Deep Fake வீடியோவால் அதிர்ச்சி! ஜூனியர் என்டிஆர் கண்டனம்..

சிவகார்த்திகேயன் பேச்சு:

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் பேசிய போது, தான் ஒரு ஸ்டாராக உருவானது ரசிகர்களால்தான் என்றும், நான் மக்களால் உருவானவன் என்றும் கூறியிருக்கிறார். மேலும், நம்முடைய நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, அதில் உறுதி மற்றும் தெளிவுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார். சென்னை மட்டுமன்றி, தமிழ்நாடு முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களை வரவைத்து அவர்களுக்கு பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களை கொடுத்திருக்கிறார். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பின்புலம் இல்லாமல் வந்தவர்கள்..

மேடையில் தன்னைபற்றி பேசிய சிவகார்த்திகேயன், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தானும் விஜய் சேதுபதியும் நடிகராக வந்திருப்பதாகவும், மிமிக்கிரி கலைஞராகவும், ஆங்கராகவும் இருந்து, நடிகராக வர முடியாது என சொன்னவர்கள் மத்தியில் தானும் நடிகராக வந்திருப்பதாகவும் ரசிகர் மன்ற கூட்டத்தில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

அரசியல் மூவ்-ஆ?

வழக்கமாக எந்த நடிகர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அவர்கள் முதலில் செய்யும் வேலை, நற்பணி மன்றம் தொடங்குவதும், அதை கட்டிக்காப்பதும்தான். நடிகர் ரஜினியின் ரசிகர் மன்றம், மக்களுக்கு தொண்டு செய்யும் மக்கள் மன்றமாக மாறியது. இதன் வழியே அவர் அரசியலுக்கு வந்தாலும், அது வர்க் அவுட் ஆகாததால் களைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக அவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து இதே போல கூட்டம் கூட்டினார்.

அதே சமயத்தில், விஜய்யும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒன்றை தொடங்கினார். இதன் மூலமாக அவருடைய ரசிகர்கள், மக்களுக்கு நற்பணிகள் செய்து வந்தனர். இது அவர் அரசியலுக்கு வரும் போது, அடித்தளமாக இருக்க உதவியது. தற்போது அதே பாதையை சிவகார்த்திகேயனும் தொடர்கிறாரோ, எனும் சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | அக்டோபர் 2026 ஓடிடி ரிலீஸ்: இந்த மாதம் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் லிஸ்ட் இதோ!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES