பிக்பாஸ் 10 : ஜேசன் - சாந்தினி ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது ஏன்? இதுதான் மேட்டர்!
கடந்த சில நாட்களாக, ஜேசன் மற்றும் சாந்தினியின் வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் சமீபத்தில் தொடங்கி, பல வார எபிசோடுகளை கடந்து விட்டது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்குள் இருக்கும் இரண்டு பேர் குறித்து அடிக்கடி ரசிகர்கள் பேசி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
சாந்தினி - ஜேசன் : பிக்பாஸ் 10 போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனில், யாரும் எதிர்பாராத வண்ணம் காமன் மேன் ஷோவிலிருந்து செலக்ட் செய்யப்பட்ட 3 பேர் முதலில் உள்நுழைந்தனர். அவர்கள் மூன்று பேரும் இப்போது வரை தாக்குப்பிடித்து விளையாடி வருகின்றனர். அதில் ஒருவர்தான் ஜேசன். பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது வாரத்தை கடந்த பிறகு, இந்த ஜேசனுக்கும் அவரது சக போட்டியாளரும் நடிகையுமான சாந்தினிக்கும் நெருக்கம் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த வாரத்தின் ஆளும் அணி தலைவராக இருக்கிறார், அடாவடி அன்சர். எதிர் அணியின் தலைவராக தான்யா இருக்கிறார். கிச்சன் அணியில் ஜேசன் இருப்பதால், அவருடன் அதிக நேரத்தை செலவிடும் பொருட்டு சாந்தினி சமையலறையிலேயே இருப்பதாக ரசிகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
ஏன் இப்படி செய்கிறார்?
ஜேசன், பல சமயங்களில் தனக்கான கோடுகளை சரியாக போடுவதாகவும் ஆனால் சாந்தினி அதனை பல சமயங்களில் மீறுவதாகவும் பல ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். “ஒரு சக போட்டியாளரை போல இரு” என்று ஜேசன் கூறினால், “நான் ஒரு பெண்ணாக இருக்கிறேன்” என்று ஜேசனிடம் பதில் தெரிவிக்கிறார் சாந்தினி. இதனாலேயே அடிக்கடி இவர்களை எபிசோடிலும் காண்பித்து வருகின்றனர்.
சக போட்டியாளரான ராகவ், சாந்தினியிடம் ஜேசனிடம் நீ அதிகம் பேசுவது போல இருப்பதாக கூறினார். ஆனால், சாந்தினி அதற்கு தான் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுவதாகவும், அது தவறாக இருந்தால் நான் அதை கத்தரித்து விடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சாந்தினி, பல நாட்களாக கேமில் இருந்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பது வெளியில் தெரியாமலேயே இருந்தது. ஆனால் ஜேசனுடன் பேச ஆரம்பித்த பிறகு அவருக்கு நிறைய ஸ்கிரீன் டைம் கிடைத்திருக்கிறது என்பதும் உண்மைதான். இருப்பினும், அவர் உண்மையில் எந்த நோக்கத்துடன் ஜேசனிடம் பழகுகிறார் என்பது போகப்போகத்தான் தெரியும்.
ஏற்கனவே திருமணம் ஆனவர்கள்!
நடிகை சாந்தினி, 2018ஆம் ஆண்டு நடன இயக்குநரும் சீரியல் நடிகருமான நந்தாவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். 9 வருட காதலுக்கு பிறகு, தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸில் இடம்பெற்றிருக்கும் ஜேசனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது. இந்த சமயத்தில்தான் இவர்கள் இருவருக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தை பற்றி நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | அண்ணன் கட்டுப்பாட்டில் மமிதா? ‘என்னங்க சொல்றீங்க?’ அவரே கொடுத்த ரியாக்ஷன்!