• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 11 லட்சத்திற்கும் மேலான போனஸ் பெற தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Written BySudharsan G
Published: Oct 14, 2026, 04:31 PM IST|Updated: Oct 14, 2026, 05:33 PM IST
joinshare
தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்
Image Credit: Diwali Bonus | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

2

PF தொகையை எடுக்கணுமா? எவ்வளவு எடுக்க முடியும்? EPFO அளித்த முக்கிய விளக்கம் இதோ

3

மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

4

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. Kwala Intel இந்தியாவில் அறிமுகம்! ரூ.199-ல் AI வசதி

5

பிக்பாஸ் 10 : ஜேசன் - சாந்தினி ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது ஏன்? இதுதான் மேட்டர்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Diwali Bonus 2026: 11 லட்சத்து 40 ஆயிரத்து 770 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் தொகையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

#Cabinet approves payment of Productivity Linked Bonus of 78 days for 11,40,770 railway employees The maximum amount payable per eligible railway employee is ₹ 17,951/- for 78 days #CabinetDecisions https://t.co/MiWycoAabY

— Dhirendra Ojha (@DG_PIB) October 14, 2026

இதற்கு தகுதிவாய்ந்த ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் 78 நாட்களுக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச போனஸ் தொகை 17,951 ரூபாய் ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ரூ.2,0009.61 கோடி தொகை மொத்தமாக 11,40,770 ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

non-gazetted ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே இந்த போனஸ் வழங்கப்படும். அதாவது, தண்டவாளப் பணியாளர்கள், எஞ்சின் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (Guards), ரயில் நிலையப் பொறுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள், வழிகாட்டிப் பணியாளர்கள், பிற 'C' பிரிவு பணியாளர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்படும்.

2025-26 நிதியாண்டில் ரயில்வே துறை மிகச் சிறப்பாக செயலாற்றியது. மொத்தம் 1,670 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றிருக்கிறது. 741 கோடி பயணிகளுக்கு சேவையாற்றி உள்ளது.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வேயின் செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு ஊழியர்களை ஊக்கமளிக்கும் வகையில் இந்த போனஸ் வழங்கப்டப்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்தாண்டும், 2025 செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 78 நாட்கள் போனஸ் ரயில்வே ஊழியர்களுக்கு 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரயில்வே ஊழியர்களுக்கு 1,865.68 கோடி மதிப்பில் போனஸ் மொத்தமாக வழங்கப்பட்டது.

அந்த வகையில், இந்தாண்டு ரூ.143.93 கோடி உயர்ந்துள்ளது, அதாவது 7.7% அளவுக்கு உயர்ந்துள்ளது. 49 ஆயிரத்து 600 ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது, அதாவது 4.5% அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், அதேநேரத்தில் போனஸ் தொகை உயரவில்லை. கடந்தாண்டும் அதிகபட்ச போனஸ் தொகை 17,951 ரூபாய் தான்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Central Government