SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கைதாகும் பிக்பாஸ் முத்துக்குமரன்? 5 நாட்களாக தலைமறைவு..பாலியல் புகார் எதிரொலி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் மீது, இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவரை போலீஸார் 5 நாட்களாக தேடி வருகின்றனர்.

Written By Yuvashree M
Published: Nov 23, 2026, 15:15 IST | Updated: Nov 23, 2026, 16:32 IST
Image Credit: Muthukumaran Controversy | Source Social Media Page
Join

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், முத்துக்குமரன். ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்துள்ள இவர், சமீபத்தில் ஒரு பாலியல் புகாரில் சிக்கினார். இதில் என்ன ஆனது என்பதையும், அவர் மீது ஏன் புகார் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

முத்துக்குமரன் மீது புகார்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றியதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒரு பெண் சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதற்கு முன்னதாக, தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் காப்பாற்றப்பட்டு, முத்துக்குமரனுக்கு எதிரான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

தான் முத்துக்குமரனை 3 முறை பார்த்திருப்பதாகவும், அவர் “நாளைக்கு காலைல கூட தாலி கட்றேன்..” என்று கூறி தன்னை ஏமாற்றி தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதாகவும் தன் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

முத்துக்குமரனை தேடும் போலீசார்..!

அந்த இன்ஸ்டா பிரபலம், முத்துக்குமரனால் தான் பாதிக்கப்பட்டதாக கூறி, இன்ஸ்டா முழுவதும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கூடவே, சில சேனல்களுக்கும் நேர்காணல் அளித்து வந்தார். இத்தனைக்கும் வாய் திறக்காமல் இருந்த முத்துக்குமரன், தீபாவளியன்று இட்லி சாப்பிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. அதே போல், அவர் இதை கேஷுவலாக கடந்து செல்ல முயல்கிறாரோ..? என்கிற சந்தேகமும் எழுந்தது.

மேலும் படிக்க | அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

தற்போது, அந்த இன்ஸ்டா பிரபலம் முத்துக்குமரன் மீது அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை விசாரணைக்காக தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அவர் வீடும் கடந்த 5 நாட்களாக பூட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், முத்துக்குமரன் போலீஸாரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டா பெண் பிரபலம் சொல்வது என்ன..?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் மேடை பேச்சுக்களுக்கும், செலிப்ரிட்டிகளுடனான நிகழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றவராக இருந்தவர்தான் முத்துக்குமரன். இவருக்கும் தனக்கும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம், பழக்கம் ஏற்பட்டதாக சொல்லும் அந்த பெண், தான் ஏற்கனவே ஒரு பிரேக் அப்பில் இருந்த போது அவரை சந்தித்ததாகவும் அவர் தன்னை மரியாதையாக நடத்திய விதமும், தன்னிடம் பேசிய விதமும் புதிதாக இருந்ததோடு, தனக்கு அது பிடித்திருந்ததாக கூறினார்.

தொடர்ந்து, தன் முந்தைய உறவுகள் குறித்து முத்துக்குமரனுக்கு தெரியும் என தெரிவித்த அவர் தான் பீரியட்ஸில் இருக்கும் போதே தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டதாக பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

முத்துக்குமரன் அளித்திருந்த புகார்..!

முத்துக்குமரன், சில நாட்களுக்கு முன்பு தன்னை பற்றி சமூக வலைதளங்களில் இன்ஸ்டா பிரபலமான அந்த பெண் பதிவிட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், இதில் வழக்குப்பதிவு செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று காவல்துரை தரப்பில் கைவிரித்துள்ளனர். இதையடுத்துதான், அந்த பெண், முத்துக்குமரன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 69வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இவரிடம் விசாரணை நடத்த சம்மன் வழங்கவும் போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர்.

முத்துக்குமரனை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்ற போது அது ஸ்விட்ச் ஆஃபில் இருந்துள்ளது. இதனால், அவரை எப்படியாவது அழைத்து விசாரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | “இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை” நெல்லையில் தொடக்கம்! அரசியல் எண்ட்ரி கன்ஃபார்ம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES