சமீபத்தில், நடிகை த்ரிஷாவின் பெயரில், திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு, ‘இளமை புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ எனும் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில் திருநெல்வேலியில், ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ எனும் பெயரில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான லோகோவும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
த்ரிஷா பெயரில் நற்பணி மன்றம்
நவம்பர் 23ஆம் தேதியான இன்று, தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜகோபால் த்ரிஷாவிற்கான பேரவையை தொடங்கி இருக்கிறார். இது குறித்து தற்போது ஊரே பரபரப்பாக பேசி வருகிறது.
2/5
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி மன்றம்
திருநெல்வேலியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு சாமி திரைப்படத்தில், த்ரிஷா நடித்திருந்தார். இவருடைய கதாப்பாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இதையடுத்து, இவர் கதாப்பாத்திரம் அவ்வூர் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி, மக்கள் நலப்பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
3/5
சாமி படத்தால் ஈர்ப்பு
சாமி படத்தில் இருந்து தனக்கு த்ரிஷா மீதும் அவர் நடிக்கும் படங்களின் மீதும் ஈர்ப்பு வந்ததாக கூறும் ராஜகோபால், அவர் பெயரில் நற்பணி இயக்கத்தை தொடங்கியிருப்பதோடு, மக்கள் நலப்பணிகளில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கின்றார்.
4/5
பதவிக்காக அல்ல என வாசகம்
இது, ரசிகர் மன்றமாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நலப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், அந்த இலச்சியில், “பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!” எனும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
5/5
அடுத்த ஜெயலலிதாவா
த்ரிஷாவிற்கு இப்படியொரு நற்பணி மன்றம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவருக்கு இந்த விஷயம் தெரியுமா..? என அனைவரும் கேட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் த்ரிஷா அடுத்த ஜெயலலிதாவாக ஆக முயற்சிக்கிறாரா..? என்று பலரும் கேட்டு வருகின்றனர். இதனால், அவர் அரசியல் எண்ட்ரி கன்ஃபார்ம் ஆகியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.