முகமெல்லாம் வீங்கிய நிலையில் செஃப் தாமு! இறந்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம்..
Chef Dhamu : குக் வித் கோமாளி பிரபலமும், சமையல் கலை நிபுனருமான செஃப் தாமு இறந்ததாக சில தகவல்கள் பரவியதை அடுத்து, அவர் தான் நலமுடன் இருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Chef Dhamu : சின்னத்திரையில் ‘தாமு அப்பா’வாக அறியப்படுபவர்தான், செஃப் தாமு. இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து பலரை கவர்ந்தவர் ஆவார். சில நாட்களாக அவர் அந்த நிகழ்ச்சியில் தலைக்காட்டாததை தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து சில தகவல்கள் இணையத்தில் வலம் வர தொடங்கின. அதற்கு தாமு விளக்கம் கொடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி:
தமிழ் மக்களால் அதிகம் பாராட்டப்பட்ட மற்றும் அதிகம் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி. செம ஹிட் ஆன இந்த நிகழ்ச்சியில், செஃப் தாமு, வெங்கடேஷ் பட், உள்ளிட்டோர் முக்கிய நடுவர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட 4 சீசன்கள் வரை தொடர்ந்த இவர்களின் பயணம், ஏதோ ஒரு காரணத்தால் அத்துடன் நின்று விட்டது. அதன் பிறகு புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட்டர். நிகழ்ச்சியின் பல்வேறு மாற்றங்கள் தற்போது மாறிய பிறகும், அதே ஜட்ஜ் ஆக தொடர்ந்து வருகிறார், செஃப் தாமு. இவர் ஜட்ஜ் மட்டும் கிடையாது, இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சமையல் கலை நிபுணராகவும் இருக்கிறார்.
செஃப் தாமு இறந்ததாக வதந்தி..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சில எபிசோடுகளாக வராமல் இருந்தார், செஃப் தாமு. இவருக்கு என்ன ஆச்சு என அனைவரும் தேடிய நிலையில், அவர் இறந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் செஃப் தாமு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் முகம் வீங்கி, தோற்றமே வேறாக மாறி இருந்தது.
தன் உடல்நிலை குறித்து விளக்கமளித்த தாமு, காலில் ஊசி போட்டிருப்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், அது மட்டுமன்றி தான் இறந்து விட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சை..!
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அது மட்டுமன்றி அவருக்கு முழங்காலிலும் ஒரு அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது. இதனால் அவர் சில நாட்களுக்கு சக்கர நாற்காலியை பயன்படுத்தியதால் அதை அடிப்படையாக கொண்டு தற்போது தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. செஃப் தாமு, தற்போது நேரடியாக இந்த விளக்கத்தை கொடுத்திருப்பதை அடுத்து, அவர் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் யார்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆடியன்ஸே வேறு. ஆனால், நிகழ்ச்சியில் நடந்த சில குளறுபிடிகளால், அந்த நிகழ்ச்சி மீது தற்போது ஆடியன்ஸிற்கு விமர்சனங்கள்தான் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, புகழ் பிற போட்டியாளர்களிடம் நடந்து கொள்வது, மாதம்பட்டி ரங்கராஜின் தனி வாழ்க்கை என்று எக்கச்சக்க விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக கடந்த சீசனில் மணிமேகலை-பிரியங்காவிற்குள் நடந்த சண்டை இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியது. தற்போது, இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் நடைப்பெற்று வருகிறது. இதில், பழைய போட்டியாளர்களை மீண்டும் இந்த சீசனில் கொண்டு வருவது, அவர்களுடன் புது போட்டியாளர்களை போட்டியிட வைப்பது போன்ற பல விஷயங்கள் நடந்தது. தற்போது இறுதிப்போட்டி நடக்கும் சமயத்தில், இதில் டைட்டில் வின்னராக அனிருதா ஸ்ரீகாந்த், சம்யுக்தா ஜோடி வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.