SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருநங்கைகளுக்கு எதிரான கருத்து…மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்! என்ன கூறினார்?

சமீபத்தில் இயக்குநர் மோகன்.ஜி, திருநங்கையான நேஹா என்பவருடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் பேசிய பல விஷயங்கள் மரியாதை குறைவாகவும், இன்னொரு மனிதரை இழிவாகவும் பேசுவதாக இருப்பதாக கூறி கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Written By Yuvashree M
Published: Oct 14, 2026, 12:07 PM IST | Updated: Oct 14, 2026, 12:22 PM IST
Join

தமிழ் திரையுலகில், சர்ச்சைக்குரிய இயக்குநராக பார்க்கப்படுபவர், மோகன்.ஜி. தன்னுடைய படங்கள் வாயிலாக சாதிய அடையாளங்களை  காண்பிப்பதிலும், பெண்கள் குறித்து அவ்வப்போது அவதூறான கருத்து சொல்வதிலும் பெயர் பெற்றவர். இவர்தான், தற்போது தான் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சி மூலம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதற்குதான் ‘டோரதி’ பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவாதத்தை கிளப்பிய ‘டோரதி’ திரைப்படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டோரதி திரைப்படம் சமூகத்தில் பலரையும் விவாதத்தை கிளப்பிவிட்ட படமாக இருக்கிறது. ஒரு தரப்பினர், இந்த படம் திருநங்கைகளுக்காகவோ LGBTQ மக்களுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, மனிதத்தை பேசும் படம் என்று கூற, இன்னொரு தரப்பினர், படத்தின் க்ளைமேக்ஸில் ஆணும் ஆணும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சியை வைத்து இன்றைய தலைமுறையை இது போன்ற படம் கெடுப்பதாக கூறி வருகின்றனர். இருப்பினும், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

டோரதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில், முக்கியமான இடத்தை பெற்றவர் இயக்குநர் மோகன்.ஜி. திரெளபதி, பகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய சாதிய ரீதியிலான கருத்துகளை இவர் திணிப்பதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இருப்பினும், இவர் படங்களை ஆதரிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர், டோரதி திரைப்படம் வந்த போது அதற்கு எதிராக ஓபனாகவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், LGBTQ சம்பந்தமான படங்களை எடுப்பது சமூகத்திற்கு அச்சுறுத்தலை விளைவிப்பது என்றே கூறியிருந்தார்.

சமீபத்தில் சமூக ஆர்வலரும் திருநங்கையுமான நேஹாவுடன் மோகன்.ஜி ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார். அப்போது, “டோரதி படத்தின் இறுதியில் சுப்புவும் கார்த்தியும் முத்தமிட்டுக்கொண்டார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எடுத்தால் அது என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று திருநங்கையிடம் கேட்டார். அதற்கு அவர் “ சந்தோஷமாக வாழ்வார்கள்” என்று கூறினார், அதற்கு மோகன் “சந்தோஷமா வாழ்வாங்கன்னா எப்படி?” என்று கேட்க, அந்த திருநங்கை “என்னவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதற்கு மோகன்.ஜியிடம் சரியான பதில் இல்லை. இதற்குதான் திருநங்கையிடம் பேசிய சில விஷயங்கள் மனிதத்தன்மை அற்றதாக இருந்ததாக கூறி கார்த்திக் சுப்புராஜ் மோகன்.ஜிக்கு கண்டனம் தெரிவிததுள்ளார்.

மேலும் படிக்க | Ex மனைவியை..வேறு ஒருவருக்கு மனம் முடித்து வைத்த ‘ஸ்பைடர் மேன்’ ஹீரோ! நெட்டிசன்கள் ஷாக்..

கார்த்திக் சுப்புராஜ் வீடியோ :

கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “மோகன்.ஜி, திருமணம் செய்துகொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? திருமணத்திற்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள்? என்று திரும்ப திரும்ப கேள்வி எழுப்பிகிறீர்கள். அதற்கு பதிலளித்த அந்த திருநங்கை ஒரு ஆண் தன்னை விரும்பி திருமணம் செய்துகொண்டால், இருவரும் அன்போடும் மகிழ்ச்சியோடும் ஒன்றாக வாழ்வார்கள் என்றும், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான் திருமண வாழ்க்கையின் முக்கிய அம்சம் என்று தெளிவாக விளக்கியிருக்கிறார். ஆனால், மோகன்.ஜி மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு இறுதியில் திருநங்கையால் முறையான உடலுறவு கொண்டு, குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்கிற கேள்வியையும் கேட்டிருக்கிறார்.

இதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிய கார்த்திக் சுப்புராஜ், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் போன்ற ஊடகங்களில் இப்படியொரு கருத்தை முன்வைப்பது, அவர்களை அவமதிப்பதுதான் என்று கூறியிருக்கிறார். இது, அவர்களின் உளவியல் ரீதியான வன்முறையாக தான் பார்ப்பதாக கூறிய கார்த்திக் சுப்புராஜ், திருநங்கைகளையும் மற்றவர்களை போன்றவர் என சமமான மனிதர்களாக பார்க்க வேண்டும், அதுதான் அடிப்படை மனிதநேயம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருமணம் செய்துகொள்வதன் நோக்கமே உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும்தானா? அதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்றால், நாய், பன்னி கூடத்தான் குட்டி போடுகிறது. மனிதர்களின் வாழ்க்கையை குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் வைத்து மட்டும் மதிப்பிட முடியுமா? திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் பல காரணங்களால் குழந்தை பிறக்காமல் போகலாம், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ தகுதியற்றவர்களா? அவர்கள் அன்பு செலுத்தி வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள முடியாதா? என்று பேசினார். கார்த்திக் சுப்புராஜின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | பாக்கெட்டில் எப்போதும் பேனா வைத்திருக்கும் வெற்றிமாறன் - இதுதான் காரணம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES