பிரபல இயக்குநர் வெற்றிமாறன், தன்னுடைய பாக்கெட்டில் எப்போதும் பேனா வைத்திருப்பது ஏன் என்பது குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இயக்குநர் வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விடுதலை உள்ளிட்ட பல படங்களை எடுத்து மக்களை கவர்ந்திருக்கிறார். இந்த சமயத்தில் அவரிடம், ஏன் உங்கள் பாக்கெட்டில் எப்போதும் பேனா இல்லை எனும் கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து இங்கு தெரிந்து கொள்வொம்.
1/5
வெற்றிமாறன் படங்கள்
தமிழ் திரையுலகில், முக்கிய இயக்குநராக இருக்கிறார், வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தில் ஆரம்பித்து, ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை 2 பாகங்கள் உள்ளிட்ட படங்களை எடுத்து மக்களை ஈர்த்திருக்கிறார் வெற்றி. தன் பெயருக்கு ஏற்றார் போலவே தன் படங்களையும் வெற்றி படிக்கட்டில் ஏறியிருக்கிறார்.
2/5
வெற்றிமாறன் சிம்பு இணையும் அரசன் படம்
வெற்றிமாறன், தற்போது அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து, ‘ராஜன் வகையறா’ படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில், அவருடைய பேட்டி ஒன்று வைரலாகிறது.
3/5
வெற்றிமாறன் பாக்கெட்டில் பேனா
வெற்றிமாறன் தற்போது எப்போதும் பாக்கெட்டில் பேனா வைக்க காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட பலர் அப்படியே ஆடிப்போய் இருக்கின்றனர். அப்படி என்ன சொன்னார் அவர்?
4/5
பேனா எடுத்துச்செல்ல காரணம்
“போர்க்களத்துக்கு வாள் இல்லாமல் போற வீரனும், வகுப்பறைக்கு எழுதுகோல் இல்லாமல் போற மாணவனும் ஒன்னுதான்; ரெண்டு பேருமே அங்க தோற்றுதான் போவாங்க; அன்னைக்கு என் தமிழ் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடம் இது. அன்றைக்கு ஆரம்பித்து இன்னைக்கு வரைக்கும் என் பாக்கெட்டில் பேனா இல்லாத நாட்களே இல்லை” என்று கூறியிருக்கிறார்.
5/5
அரசன் அப்டேட்
வெற்றிமாறன், அரசன் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அரசன் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வரை ஷூட் செய்த போர்ஷனை தொகுத்து, அதிலிருந்து 60 நிமிட காட்சிகளை எடிட் செய்திருக்கிறார் வெற்றிமாறன். விரைவில் அரசன் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.