SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மெலிந்து போன உடல்..படமே இல்லை! இயக்குநர் சிறுத்தை சிவாவின் தற்போதை நிலை..

கடைசியாக ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அதன் பிறகு ஆள் அட்ரஸெ இல்லாமல் அமைதியாகி விட்டார். தற்போது அவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written By Yuvashree M
Published: Oct 05, 2026, 12:15 PM IST | Updated: Oct 05, 2026, 12:22 PM IST
Join

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக கருதப்பட்டவர், சிறுத்தை சிவா. இவர், கங்குவா படத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார்.

சிறுத்தை சிவா!

தமிழில் ‘சிறுத்தை’ படத்தை எடுத்து ஹிட் ஆக்கி, முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தார், சிவா. அதிலிருந்து அவர் பெயர் சிறுத்தை சிவா என்றானது. அஜித்திற்கு மிகவும் பிடித்த இயக்குநர்களுள் டாப் இடத்தில் இருக்கிறார். அதனால்தான் அஜித்தை வைத்து தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட ‘வ’ வரிசையில் நான்கு படங்களை அவரால் எடுக்க முடிந்தது.

இதையடுத்து, ரஜினிகாந்தை வைத்தும் ‘அண்ணாத்த’ படத்தை எடுத்தார். இந்த படத்திற்கு பிறகுதான், சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கங்குவா திரைப்படம்:

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கால அளவில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான், கங்குவா. இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் திஷா பதானி நாயகியாக நடித்திருந்தார். பாபி டியோல் வில்லனாக நடிக்க, கருணாஸ், போஸ் வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வந்தனர். அது மட்டுமன்றி, இந்த படத்தில் கார்த்திக்கும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

கங்குவா திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.300 கோடி என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான ரிசல்ட், படத்தை எடுத்தவர்களுக்கும் சரி, படத்தை பாரத்தவர்களுக்கும் சரி, திருப்திகரமாக அமையவில்லை.

மேலும் படிக்க | ஜான்வி கபூர் Deep Fake வீடியோவால் அதிர்ச்சி! ஜூனியர் என்டிஆர் கண்டனம்..

ஏன் இந்த தோல்வி?

கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. காரணம், இந்த படத்திற்கு அப்பேற்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக, ஞானவேல் ராஜா, படத்தின் ப்ரீ ரிலீஸ் இவண்டிற்கு வந்தவர்களிடம், “இந்த பாஸை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள், வெற்றி விழாவிற்கு இதே பாஸ் வைத்திருந்தால் நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்” என்று சவால் விட்டார். கடைசியில், அந்த படமும் வெற்றி பெறவில்லை, வெற்றிவிழாவும் நடைபெறவில்லை.

படம் வெளியாவதற்கு முன்பே இப்படம், பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் அதிகப்படியான பில்ட் அப் கொடுத்தனர். இது, ரசிகர்களிடையே மிக உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தியேட்டரில் பார்க்கும் போது படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.

படத்தின் பின்னணி இசையும், ரசிகர்களுக்கு இரைச்சல் உணர்வை ஏற்படுத்தியது. படத்தின் பின்ன்ணி இசையும் கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புகளும் அளவுக்கு அதிகமான சத்தத்துடனும், இரைச்சலுடனும் இருந்ததாக முதல் நாளே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களுக்கு இந்த இசையே ஒரு பெரிய தலைவலி ஏற்பட்டதாக ட்ரோல் செய்யப்பட்டது. பின்னர், படக்குழுவினர் இந்த ஒலியை குறைத்து, சில காட்சிகளை நீக்கினர்.

இந்த கங்குவா திரைப்படமானது, 1070ஆம் ஆண்டின் வரலாற்று பகுதிக்கும், 2024ஆம் ஆண்டின் தற்கால பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை விவரிக்கும் திரைக்கதை வலுவாக இல்லை என்றும், தற்கால பகுதிகளை கதையோடு ஒட்டாமல் சுவாரசியமற்று இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது.

சிறுத்தை சிவாவின் தற்போதைய நிலை..!

இயக்கநர் சிறுத்தை சிவா, ‘கங்குவா’ திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு எங்கும் வெளியில் பார்க்க முடிவதில்லை. தற்போது ஒரு செய்தியாளர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது ஆளே மாறிப்பாேய், உடல் எடை குறைந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு என்ன ஆனது என்று கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | CM விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? அரசியல் மூவ்க்கான அறிகுறியா? தகவல் இதோ!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES