76 வயதிலும், நடிகர் ரஜினிகாந்த் Aurakanth என்று அழைக்கப்படுவது இதனால்தான் என்று, ஜெயிலர் 2 திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் கேமியோவில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜெயிலர் 2 படத்தை பார்த்த ஒரு ரசிகர், இதனை பைசா வசூல் எண்டர்டெயினர் என்று அழைத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கிறது என்றும், இரண்டாம் பாதி டீசண்டாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசையையும் புகழ்ந்துள்ள இவர், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் தங்களின் பர்ஃபாமன்ஸ் மூலம் படத்திற்கு உயிரூட்டுவதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இது தலைவர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தை ஏன் இந்த 76 வயதிலும் Aurakanth என அழைக்கிறோம் என்றால், அதற்கு காரணம் இதுதான் என்று ஒரு ரசிகர் படத்தின் காட்சி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
ட்விட்டர் தளத்தில் பிரபலமான விமர்சகரான வெங்கி ரிவ்யூஸ் ஒரு விமர்சனத்தை ஜெயிலர் 2 குறித்து வைத்துள்ளார்.

படத்தின் முதல் பாதி எப்போதும் போல கமர்ஷியல் எண்டர்டெயினர் என்றும், இரண்டாம் பாதி, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்; மேலும், முதல் பாதி வர்க் அவுட் ஆனதற்கு காரணமே நெல்சனின் ட்ரேட்மார்க் காமெடிதான் என்றும், சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சில காட்சிகள்தான் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனிருத்தின் இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், படத்தின் ரைட்டிங் கொஞ்சம் வீக் ஆக இருப்பதால் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலனின் கதாப்பாத்திரங்கள் தேவையற்றதாக தோன்றுவதாக கூறியிருக்கின்றனர்.
ரஜினிகாந்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் இன்னும் உயிரூட்டுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், கேமியோஸ் அனைத்தும் சும்மா கதைக்காக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 திரைப்படம், ரஜினியின் ஒன்-மேன் ஷோவாக இருப்பதாகவும், படத்தில் அவருக்கென சில மாஸ் தருணங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்; ரித்திக் ரோஷனின் இண்ட்ரோ மற்றும் க்ளைமேக்ஸ் குறித்தும் குறிப்பிட்டுள்ள அவர், கேமியோக்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்; இந்த படத்தை விசில் பறக்க தியேட்டரில் பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் பாகத்தை விட இது வித்தியாசமாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்; நெல்சன் இதை புதிதாக கையாண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாதியின் முதல் 20 நிமிட காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், படம் உங்களுக்கு பிடிக்கும் என்றும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.

ஜெயிலர் 2 குறித்து ஒரு ரசிகர் வெளியிட்டிருக்கும் ரிவ்யூவில், “ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய ஒரு ஆக்ஷன் காமெடி பொழுதுபோக்குத் திரைப்படம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக வேலை செய்தன. அந்த இணைப்புக் காட்சி, செமா இடைவேளைக் காட்சி, பிரம்மாண்டமான சிறப்புத் தோற்றங்கள் என அனைத்தும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.
அனிருத்தின் பின்னணி இசை. இரண்டாம் பாதி நன்றாகத் தொடங்கியது, ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு முரண்பாடுகள் மங்கிவிட்டன. எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். வித்யா பாலன் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான காட்சிகள் வேடிக்கையாக இருந்தன. இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும், கிளைமாக்ஸ் நன்றாக இருந்தது. இது மிகவும் பொழுதுபோக்குத் திரைப்படம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு ரசிகர், ஜெயிலர் 2 திரைப்படம் ஜெயித்ததற்கு காரணமே அதன் ரன்-டைம்தான் என்றும், அது 3 மணி நேரத்தை தாண்டியதாக இருந்திருந்தால் படம் ரொம்பவே ட்ராக் ஆவது போல ஃபீல் ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளார்;

படத்தை 2 மணி நேரம் 45 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டுமென நெல்சன் முடிவெடுத்தது ரொம்ப நல்லது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதர ரசிகர்கள், படத்தின் இசையை பாராட்டுவதோடு இதை ரசிகர்களுக்கான படம் என்றும் இதனை ரஜினியின் க்ளாசிக் படங்களுள் ஒன்று என்றும் கூறி வருகின்றனர்.