மூக்குத்தி அம்மன் 2 vs சீன் vs ராமாயணா : தீபாவளி வின்னர் யார்? மக்களுக்கு பிடித்த படம் எது?
பெங்களூருவில், மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால், அதை தீர்த்து வைக்க வந்த 6 பேரை ஒருவர் கொடூரமாக கொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தீபாவளி என்றாலே, அதை முன்னிட்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதுதான் வழக்கம். அந்த வகையில், இந்த 2026ஆம் ஆண்டின் தீபாவளியை முன்னிட்டு மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த படங்களில், எது ரசிகர்களின் மனங்களை கவர்ந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
மூக்குத்தி அம்மன் 2:
நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்தான், மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தில் நயன்தாரா அம்மனாகவும், ஊர்வசி அவருக்கு தாயராகவும் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் வில்லன்களாக சுமன், துனியா விஜய், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் கதையே, நல்லது vs கெட்டது.
2000 வருடங்களுக்கு முன்பு, மூக்குத்தி அம்மனை பழி தீர்ப்பேன் என்று சபதம் எடுக்கிறார், ரெஜினா. அம்மனாக அவதாரம் எடுத்துள்ள சக்தி எனும் நயன்தாரா அவரால் வீழந்தாரா வென்றாரா என்பதே மீதிக்கதை.
ரசிகர்கள் கொடுத்த விமர்சனம் என்ன?
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பார்த்த சிலர், படத்திற்கு கலவையான விமர்சனத்தை வழங்கி வருகின்றனர். பலவீனமான திரைக்கதை மற்றும் மிகவும் வசதியான வசனங்களைக் கொண்ட ஒரு காலாவதியான கற்பனைத் திரைப்படம். கண்ணைப் பறிக்கும் சிஜிஐ மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை உரத்த பின்னணி இசை. கதாநாயகன் மற்றும் வில்லன் அறிமுகக் காட்சியும், நாகம் காட்சிகளும் பார்க்கும்படி இருந்தன, ஆனால் அதைத் தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மிகவும் ஏமாற்றமளித்தன.. எங்கள் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஒரு காட்சி கூட சுவாரஸ்யமாக இல்லை.. படத்தில் எந்தக் கதாபாத்திரத்துடனும் உணர்வுப்பூர்வமான தொடர்பு ஏற்படவில்லை.. இறுதிக் கட்டம் சகிக்க முடியாததாக இருந்தது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | தீய சக்தி vs அம்மன் சக்தி..இறுதியில் வென்றது யார்? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்!
ராமாயணா:
இந்தியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் ராமாயணா. இந்த கதையை பல்வேறு இயக்குநர்கள் இயக்கி இருந்தாலும், “நான் புது வகையில் எடுக்கிறேன்..” என்று கங்கனம் கட்டிக்கொண்டு எடுத்திருக்கிறார் நிதேஷ் திவாரி. இந்த படத்தில் ராமனை மட்டும் மெயினாக காட்டாமல், ராவணனின் கதையை நன்றாகவே காண்பித்திருக்கின்றனர். இது ரசிகர்களிடையே வொர்க்கும் ஆகி இருக்கிறது.
இந்த படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் இசைக்கு ரசிகர்கள் பலர் பூங்கொத்துகளை நீட்டி வருகின்றனர். இதைத்தாண்டி, ராவணனாக வந்துள்ள யாஷின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், ஹேன்ஸ் சிம்மர் உள்ளிட்டோரின் இசை அய்யோத்தியாவிற்கே தங்களை அழைத்து சென்றிருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
சீன் :
நடிகர் சூர்யா, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவனுடன் இணைந்து பணியாற்றியிருக்கும் படம்தான், சீன். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா பல நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
சீன் திரைப்படத்தை பொறுத்தவரை ஒரு ஸ்மார்ட் ஆன பாேலீஸ் அதிகாரி, ஒரு ஸ்மார்ட் ஆன கில்லருக்கு இடையே நடக்கும் கதையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் இறுதியில் வென்றது யார் என்பதுதான் கதை.
ரசிகர்கள் கூறுவது என்ன?
இதை பார்த்த ரசிகர்கள், தனது வழக்கத்திற்கு மாறான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் கணிக்க முடியாத திரைக்கதையால் வெற்றி பெற்ற ஒரு முழுமையான கலகலப்பான குற்ற நகைச்சுவைப் படம். ஜித்து மாதவன் இந்த வகைப் படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையைக் கொண்டு வருகிறார், மேலும் சூர்யா தனது வழக்கமான பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளார். நஸ்லனும் அதே அளவு ஈர்க்கிறார், மேலும் துணை நடிகர்களும் இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றனர். இரண்டாம் பாதி பொழுதுபோக்கு நிறைந்த காட்சிகளால் நிரம்பி, ஒரு அற்புதமான உச்சக்கட்டத்தில் முடிகிறது. சுஷின் ஷியாமின் இசை இந்த வேடிக்கைக்கு அழகாக மெருகூட்டுகிறது. ஒரு வேடிக்கை நிறைந்த திரையரங்க அனுபவம் என்று ரிவ்யூக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தீபாவளி வின்னர் யார்?
காலை முதல், ரசிகர்கள் பலரும் ‘சீன்’ திரைப்படத்தைதான் தீபாவளி வின்னர் என்று கூறி வருகின்றனர். படத்திற்கான விமர்சனமும் பாசிடிவாகவே வந்துள்ளது. இதைத்தாண்டி, விமர்சகர்களும், சீன் படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர். ராமாயணா படமும் நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் என கூறி வருகின்றனர். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்குதான் கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Vijay Sethupathi : Emmy விருதுகளை வழங்கும்..முதல் இந்தியர் ஆகிறார் விஜய் சேதுபதி!