Vijay Sethupathi Emmy Awards : நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் சர்வதேச விருதுகளை வழங்க இருக்கும் முதல் இந்திய நடிகராக மாறி இருக்கிறார்.
Vijay Sethupathi Emmy Awards : இன்னும் சில நாட்களில், அமெரிக்காவில், எம்மி விருதுகள் (Emmy Awards) வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து, இந்த விருதினை, முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி வழங்க இருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
சர்வதேச எம்மி விருதுகள்
சர்வதேச எம்மி விருதுகள், அமெரிக்கவில் நடைபெற இருக்கிறது. உலகளவில், சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் இந்த விருதில், முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்க இருக்கிறார்.
2/5
நியூயார்கில் நடக்கும் விருது விழா
54வது சர்வதேச எம்மி விருதுகள் விழா, அமெரிக்காவின் நியூயார்க் ந்கரில், வரும் 23ஆம் தேதி (நவம்பர்) நடக்கிறது. இதில்தான் விருது வழங்கும் முதல் இந்தியராக விஜய் சேதுபதி விருது வழங்க இருக்கிறார்.
3/5
விஜய் சேதுபதியின் வளர்ச்சி
இதையடுத்து, விஜய் சேதுபதி திரைத்துரைக்கு துணை நடிகராக வந்த காலம் முதல், அவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்ததை நினைவு கூர்ந்து, இப்போது அவர் இருகும் உச்சத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
4/5
குவியும் வாழ்த்துகள்
விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சிக்கு அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருவதோடு, அவரை வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
5/5
விஜய் சேதுபதி இப்போது என்ன செய்கிறார்
விஜய் சேதுபதி, தற்போது பிக்பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து, தமிழிலும் பாக்கெட் நாவல் உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.