OM Movie X Review Tamil: தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஓம் (O.M. Operation Mole) படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஓம்'. ‘அமரன்’ படப் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் செம்மரக் கடத்தல் தொடர்பாக இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 6 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் வெளியான இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
ஓம் திரைப்படத்தை பார்த்த ஒருவர், இப்படத்திற்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், படத்தின் முதல் பாதியை அட்டகாசமாகக் கட்டமைத்துள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியும் ஓரளவுக்கு நிறைவாகவே அமைந்துள்ளது என குறிப்பிட்டார். தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது என்று கூறிய அவர், கடத்தல் பின்னணி குறித்து இயக்குநர் ராஜ்குமார் போதிய ஆய்வுகளை மேற்கொண்டு, படத்தை மிகத் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
#OM: [3.5/5] A well-packed crime action thriller! Dhanush delivers a terrific performance with his intense screen presence and impressive portrayal of his character👏🏾 Mammootty steals the show with his powerful characterisation, while Sai Pallavi makes a strong impact..👏🏾 'Sreeleela' adds emotional depth to the story❤️🔥 Rajkumar Periasamy’s direction, Ezhil Arasu’s cinematography and Sai Abhyankkar’s background score elevate the cinematic experience..🤝 Slight lags and lengthy runtime are minor drawbacks. Otherwise Dhanush–Mammootty combination is the biggest highlight.. A gripping action thriller with solid performances and grand presentation! Good Watch👍🏽
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) November 20, 2026
ஓம் படத்தை பார்த்த மற்றொருவர் கூறுகையில், விறுவிறுப்பான முதல் பாதி மற்றும் அட்டகாசமான இடைவேளைக் காட்சியுடன் படம் தொடங்கினாலும், சிறப்பான கதைக்களத்திற்கான வாய்ப்பு இருந்தும் இரண்டாம் பாதி பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த ஒரு காட்சி மட்டுமே படத்திற்குப் பெரிய பலமாக அமைந்து, திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பியுள்ளது. மொத்தத்தில், நடிகை சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பும், சாய் அபயங்கரின் இசையுமே இப்படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளன” என்றார்.
ஓம் படத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒருவர், "ஓம் படத்தில் தனுஷ் திரையில் மிரட்டியுள்ளார். குறிப்பாக, படத்தின் சிங்கிள்-ஷாட் அறிமுகக் காட்சியும், நடனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தனுஷ் மற்றும் மம்மூட்டி இடையேயான கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. சாய் பல்லவி கதாபாத்திரம் மிக சிறப்பாக உள்ளது.
#OM : Review 🍿🎬 Quite engaging first half with a banging Interval block but unfortunately second half is the huge let down when it had a beautiful scope. This 👇 segment is the only boost just banged 💥 Sai pallavi and Sai Abhyankar show it is. Rating: 2.75/5 ⭐ https://t.co/Gdc5EQFok0
— Deon X (@umashankar82721) November 20, 2026
OM – Movie Review 🎬 #Dhanush rocks with his performance, especially the single-shot introduction and energetic dance sequences! 🔥 The chemistry between Mammootty and Dhanush is excellent, while Sai Pallavi gets a well-written character. The interval twist creates good hype for the second half. However, the second half travels along the same path as the first, making things predictable. The lengthy runtime also makes the film feel a bit dragging. Good BGM and technically brilliant filmmaking are definite positives. A film with good intent, attempting to bring to light true incidents that happened a decade ago. Despite its predictable moments and lengthy runtime, OM is a largely content oriented film with strong performances and an emotional core. #OM #Dhanush #Mammootty #SaiPallavi
— Sathish Kumar M (@sathishmsk) November 20, 2026
ஓம் படத்தை பார்த்த ஒருவர் கூறுகையில், “படத்தின் முதல் பாதியின் நடுப்பகுதியில் இருந்து இடைவேளை வரையிலான காட்சிகள் ஓரளவுக்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளன. காட்சிகளை இயக்குநர் கையாண்ட விதம் சிறப்பாக இருப்பதால், முதல் பாதி நிறைவாகவே தெரிகிறது. ஆனால், முதல் பாதி ஏற்படுத்திய அந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி முழுமையாகக் கோட்டை விட்டுள்ளது. இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள காட்டுப்பகுதி சண்டைக் காட்சி மட்டுமே ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளது. முன்னணி நடிகர்களின் மிகச் சிறப்பான நடிப்பு படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.
ஓம் படம் ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறுகையில், செம்மரக் கடத்தல் மற்றும் காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் கொண்ட சுவாரஸ்யமான கதைக்களம் இப்படத்தில் உள்ளது. ஆனால், நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும், சஸ்பென்ஸ் இல்லாத திரைக்கதையாலும் படம் சோர்வடையச் செய்கிறது. இடைவேளைக் காட்சி நன்றாக அமைந்துள்ளது; இரண்டாம் பாதியிலும் தனுஷ் மம்மூட்டி இடையேயான காட்சிகள் மற்றும் சாய் பல்லவியின் பகுதிகள் என சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஓரளவுக்கு ஒர்க்-அவுட் ஆகியுள்ளன.
#OM A Lengthy, Poorly Written Crime Drama That Barely Holds Your Interest…!!! The film has an interesting subject involving red sandalwood smuggling and the moral conflict between police and criminals, but the narration is filled with silly conveniences and hardly any suspense. The interval is good, and a few emotional portions in the second half work, especially the Dhanush-Mammootty equation and Sai Pallavi’s track. But the climax is poorly written, and the action fails to create any impact. #Mammootty and #SaiPallavi are good, while #Dhanush is okay. #Sreeleela is wasted. #Sai Abhyankkar’s songs are good, but their usage is ineffective, and the sound mixing is very poor. A major disappointment from #RajkumarPeriaswamy after #Amaran. The film had an interesting conflict to explore, but the writing and direction fail to make it engaging. Too long and largely uninteresting. Didn’t work for me at all. #OMreview
— Thyview (@Thyview) November 20, 2026
இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சுமாராக உள்ளன. நடிப்பைப் பொறுத்தவரை மம்முட்டி மற்றும் சாய் பல்லவி சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்; தனுஷின் நடிப்பு சுமாராக உள்ளது. சாய் அபயங்கரின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், படத்தில் அவை பொருந்தவில்லை. ‘அமரன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடமிருந்து வெளிவந்திருக்கும் இப்படம் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. கதை விறுவிறுப்பாகவே இல்லை. படம் நீளமாகவும், சுவாரஸ்யமின்றியும் இப்படம் இருக்கிறது" என்றார்.