• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

TN Weather Update: நவம்பர் 243ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Nov 23, 2026, 09:21 IST|Updated: Nov 23, 2026, 09:32 IST
joinshare
சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

2

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

3

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

4

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

5

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Weather Update: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில தினங்களாகவே மழையின் தாக்கமே இல்லை. வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டாவில் மழை பொழிவு இல்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. இதற்கிடையில், நேற்று நள்ளிரவில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்  முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "கிழக்கு திசை அலைகளுடன் தொடர்புடைய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, 2026 நவம்பர் 23 முதல் 27 வரை தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில், கிழக்கு திசைக் காற்றோட்டத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 27 வரை தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையக்கூடும். இது வலுவடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, இலங்கை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதி வழியாக நகர்ந்து செல்லக்கூடும்.

தற்போது வீசிக் கொண்டிருக்கும் வறண்ட, குளிர்ந்த வடதிசைக் காற்றுக்கு மாற்றாக, ஈரப்பதம் நிறைந்த வெப்பமான கிழக்குத் திசைக் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

DWM NOV 23–27 WET SPELL UPDATE -5 | DATED 23RD NOV, 7 AM| #Topic: Trough of low / low-pressure area associated with easterly wave likely to bring active Northeast Monsoon conditions across Tamil Nadu during 23rd–27th November 2026| Heavy to Very Heavy rain chances at isolated places| #Weathersynopsis: ==> A trough of low in the easterlies over southwest Bay of Bengal likely to bring active monsoon conditions over Tamil Nadu from 23rd to 27th November 2026. ==> It may intensify into a low pressure area and travel across Srilanka, Gulf of Mannar, Comorin sea and Lakshadweep sea. #Weatherforecast: Day 1 (23.11.2026) Watch out for dry-moisture line thunderstorm at Chennai. ==> Moisture filled warm easterlies are expected to replace the current dry northerly cool winds. ==> Under their influence, thunderstorm heavy rainfall activity expected over #Chennai, #Thiruvallur and #Chengalpet districts. ==> Moderate to rather heavy showers are likely over #Villupuram, #Pudhucherry, #Cuddalore, #Mayiladuthurai, #Karaikal, #Nagapattinam, #Thiruvarur, #Thanjavur dts during next 24 hrs. ==> North interior & central interior dts also will receive light rainfall activity during evening and night hours. Day 2 (24.11.2026) & Day 3 (25.11.2026) ==> Heavy to very heavy rainfall is likely over #Cuddalore, #Puducherry, #Mayiladuthurai, #Karaikal, #Nagapattinam, #Thiruvarur, #Thoothukudi and the coastal zones of #Rameswaram. ==> On and off showers with occasional heavy spells are expected over #Chennai, #Tiruvallur, #Kanchipuram, #Chengalpattu, #Villupuram, #Pudukkottai, #Tirunelveli and #Kanyakumari districts. ==> Interiors, western interiors and the Kongu region are likely to experience widespread rainfall activity. Day 4 (26.11.2026) & Day 5 (27.11.2026) ==> Moderate to rather heavy rains with isolated heavy spells are likely to continue over south coastal, cauvery delta and interior districts, with better activity expected over the interiors and Western Ghats. #ImportantNote: This is not a flooding rain or widespread very heavy rains alert. The expectation is for good, beneficial rains during 23rd–27th November, with only isolated very heavy spells. #KeyPoints: 1. The trough of low in the easterlies may organise into a low-pressure area. There is no possibility of it becoming a depression or cyclone. 2. Rains are expected to be occasional (on and off) and not continuous throughout the day. 3. Cauvery delta & parts of south TamilNadu region is likely to receive heavy to very heavy rains on 24th & 25th November 2026. 4. Interiors and Western Ghats are expected to see better rains on 25th & 26th November 2026. 5. This wet spell is expected to benefit farmers and help improve reservoir levels. Thanks & Regards R. Hemachander https://t.co/jAwt1q9Cyd., https://t.co/IlDnZwB43s., M.E., (PhD)., Independent Weather Blogger & Climate Activist #NortheastMonsoon #TamilNadu #NEM2026 #DWMUpdate #ChennaiRains #DeltaRains #CauveryDelta

— Deltaweatherman Hemachander (@Deltarains) November 23, 2026

அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான முதல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட உள்மாவட்டங்கள் மற்றும் மத்திய உள்மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மிக கனமழை அலர்ட்

மேலும், "நவம்பர் 24,25ஆம் தேதிகளில் கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் கடலோர மண்டலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்மாவட்டங்கள், மேற்கு உள்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

மேலும், நவம்பர் 26,27ஆம் தேதிகளில் தென் கடலோர, காவிரி டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் ஓரளவு கனமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம், உள் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. இது வெள்ளத்தை ஏற்படுத்தும் மழையோ அல்லது பரவலான மிக கனமழையோ குறித்த எச்சரிக்கை அல்ல. நவம்பர் 23 முதல் 27 வரை நல்ல,  மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மிக கனமழை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருக்கக்கூடும்" என கூறியுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather