SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மனைவியை பிரிந்த சின்னத்திரை பிரபலம்? பரபரப்பை கிளப்பிய பதிவு! என்ன ஆச்சு?

Nanjil Vijayan : சின்னத்திரை பிரபலமாக இருக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தனக்கு காதல் இருப்பதாக கூறி நடிகையும் திருநங்கையுமான வைஷூ சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை கிளப்பினார். தற்போது நாஞ்சில் விஜயன் வெளியிட்டிருக்கும் சில பதிவுகள், அவர் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டாரா என்கிற கேள்வியை கேட்க தூண்டுவது போல இருக்கிறது.

Written By Yuvashree M
Published: Aug 28, 2026, 16:55 IST | Updated: Aug 28, 2026, 17:06 IST
Image Credit: Nanjil Vijayan | X Page
Join

Nanjil Vijayan : சின்னத்திரையில் பிரபலமான கலைஞர்க்ளுள் ஒருவராக இருப்பவர், நாஞ்சில் விஜயன். இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் திருநங்கை சகோதரி, வைஷ்ணவியிடம் தோற்று விட்டதாக கூறியிருப்பதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

நாஞ்சில் விஜயன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம், இந்த பதிவினை வெளியிட்டிருக்கிறார். தான் திருநங்கை சகோதரி வைஷுவிடம் தோற்று விட்டதாகவும், அவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் எனும் காரணத்திற்காக தங்களுக்குள் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி, தன்னை பற்றி பலவாறான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வந்ததாக தெரிவித்திருப்பதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் தன்னையும் அவரையும் தொடர்புப்படுத்தி, தினந்தோறும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் தன்னுடைய மனைவி தன்னுடன் உறுதியாக இருந்ததால், தான் அதைப்பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை என்றும், அந்த விமர்சங்கள் எதையும் பெரிது படுத்தாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என நினைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனாலும் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது தன் மனைவியின் தாயார், ‘நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு தானே என் பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்’ என கேட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

”நான் தோற்றுவிட்டேன்..”

தான் சமூகத்தில் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்ட போதிலும், தன்னுடைய குடும்பம் தனக்கு உறுதுணையாக இருப்பதாக நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கை வீணாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டதாகவும் இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு (வைஷு) மகிழ்ச்சியை கொடுக்கும் என நம்புவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சிலர் தன்னுடைய கமெண்டில், ’திருநங்கையின் சாபம் உங்களை சும்மா விடாது’ என்றும், அந்த சாபம் பளித்து விட்டது என்றும் சந்தோஷமடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் இருந்தும் தான் எதுவும் இல்லாத ஒருவர் போல மீண்டும் தனிமையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இறுதியில், “நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்..நான் தோற்று விட்டேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையா?

நாஞ்சில் விஜயன் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டதாக சொல்லப்படும் இந்த பதிவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “புரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, எதையும் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்கள்” என்று இதயம் உடைந்த இ-மோஜியுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

என்ன பிரச்னை?

திருநங்கையான வைஷூ, சில தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். இவர், தானும் நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்ததாகவும் திருமணம் ஆன பிறகு நாஞ்சில் தன்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் சில நேர்காணல்களில் பேட்டி கொடுத்திருந்தார். இப்போதும் தன்னுடன் ஒரு தோழியாக கூட பேச விடாமல் அவருடைய மனைவி தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது, சர்ச்சையானதை தொடர்ந்து நாஞ்சில் தன்னுடைய மனைவியுடன் விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்போது அவருடைய மனைவி ‘நான் உங்களை நம்புறேங்க’ என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி நம்பிக்கையுடன் இருந்த தம்பதிக்குள், என்ன ஆனது என்பதை அவர்களே வாயைத்திறந்து கூறினால்தான் தெரியும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES