SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தேவாவின் கடைசி ஆசை.. நிறைவேறாமலே போனது! சான்ஸ் கொடுக்காத ரஜினி.. என்ன தெரியுமா?

Music Director Deva Last Wish: பிரபல இசைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா (75) காலமானார். தேவாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தேவாவின் கடைசி ஆசையாக ஒன்று நிறைவேறாமலே போனது. தேவாவின் கடைசி ஆசை என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 17, 2026, 12:30 PM IST | Updated: Oct 17, 2026, 12:49 PM IST
Join

Music Director Deva Passed Away: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தேவா இருந்து வந்தார்.  தமிழ் சினிமாவில் மனசுக்கேத்த மகராசா என்ற படத்தின் மூலம் 1989 ஆம் ஆண்டு தேவா இசையமைப்பாளராக  அறிமுகமானார்.  'தேனிசைத் தென்றல்' என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர்.

இசையமைப்பாளர் தேவா காலமானார்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் தமிழில் மட்டும் 375க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இன்று (அக்டோபர் 17) தேவா (75 வயது) காலமானார்.  இன்று  காலையில் தேவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினார். இவரது மறைவு ஒட்டுமொத்த ரசிகர்கள், திரையுலகிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இவரின் கடைசி ஆசை ஒன்று நிறைவேறாமலே போனது.

மேலும் படிக்க: தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; துக்கத்தில் திரையுலகம்

தேவாவின் நிறைவேறாத ஆசை

இசைப்பாளர் தேவா ரஜினி, கமல், கார்த்திக், விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். இதில் 1992ஆம் ஆண்டு ரஜினியின் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்து பெரும் புகழை பெற்றார். அப்போது, அண்ணாமலை படத்தின் ரஜினி பெயருக்கான டைட்டில் கார்டு இசையை போட்டவர் தேவா. தேவா இசையமைத்த ரஜினியின் டைட்டில் கார்டு தான் தற்போது வரை ரஜினியின் அனைத்து படங்களுக்குமே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

அண்ணாமலை மட்டுமின்றி, 1995ஆம் ஆண்டு பாட்ஷா, 1997ஆம் ஆண்டு அருணாச்சலம் ஆகிய மூன்று  ரஜினி படங்களுக்கு மட்டுமே தேவா இசையமைத்துள்ளார். அதற்கு பிறகு, எந்த ஒரு ரஜினி படத்திற்கும் தேவா இசையமைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால், பாட்ஷா படத்தை விட, சிறப்பாக இசையமைப்பேன் என தேவா கூறியிருக்கிறார். இதுவே இவரின் கடைசி ஆசையாக இருக்கிறார்.

பபிசி தமிழுக்கு பேட்டி அளிக்கும்போது, அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என ரஜினிக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்தீர்கள். அதற்கு பிறகு ஏன் ரஜினிக்கு இசையமைக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தேவா, "இந்த மூன்று படங்களுக்கு பிறகு,  ரஜினி படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு வரவில்லை. மூன்று படங்களின் பாடல்கள், பின்னணி இசை போன்றவை நன்றாகவே இருந்தன. இருந்தாலும் அந்த வாய்ப்பு திரும்பவும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: ரூ.4,000 கோடி வசூலித்த Obsession படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து ஹிட் கொடுத்தால், எனது ஓய்வு 10 ஆண்டுகள் தள்ளிப்போகும். ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், பாட்ஷா படத்தை விட சிறப்பாக செய்து தருவேன் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என கூறினார். ஆனால், இந்த மூன்று படங்களுக்கு பிறகு, ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கடைசி வரை தேவாவிற்கு கிடைக்கவில்லை. அவரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்ப்டுத்தி இருக்கிறது.  அதே நேரத்தல், 2025ல் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதபாத்திரத்தின் பெயர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாவுக்கு இருக்கும் வருத்தம்

வித்தியாசமான மெலடி பாடல்களை கொடுத்தீர்கள். இருந்தாலும், கானா பாடல்கள் உங்கள் அடையாளமாக இருக்கிறதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தேவா, "நான் வெவ்வேறுவிதமான மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறேன். அதை யாரும் சுட்டிக்காட்ட மாட்டார்கள் என்பது எனக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் கானா பாடல்கள் எனது சிறப்பம்சமாக இருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்கள் மெலடி பாடல்களை தருகிறார்கள். அவர்கள் ஒருவராகி இருப்பேன். ஆனால், கானா பாடல்கள் தான் என்னை தனித்துவமாக காட்டியிருக்கிறது. தமிழ் மக்கள் எனது கானா பாடல்களை மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் பயன்படுத்துவதை கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சியை தரும்" என தெரிவித்திருக்கிறார்.\

மேலும் படிக்க: Anirudh kavya Net Worth: காவ்யா மாறன் - அனிருத் திருமணம்! இருவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES