முதல்வர் விஜய் வெற்றிமாறன் படத்தில் நடிக்காதது ஏன்? ஜி.வி.பிரகாஷ் சொன்ன சீக்ரெட்!
முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவின் படங்களில் நடிக்க இருந்தாராம். ஆனால் அது நிகழவில்லை. அது ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!
முதல்வர் ஜோசப் விஜய், என்னதான் முதலமைச்சராக மாறிவிட்டாலும் அவருடைய சினிமா பயணம் குறித்து அனைவரும் இப்போது வரை பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். சமீபத்தில், அவர் இரண்டு பெரிய இயக்குநர்களுடன் கைக்கோர்க்க இருந்ததும், அது பிறகு ட்ராப் ஆனது குறித்த தகவலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வெற்றிமாறன் - விஜய் படம்!
தமிழ் திரையுலகில் தனித்துவமிக்க ஒரு இயக்குநராக இருக்கிறார், வெற்றிமாறன். இவர், இதுவரை நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில குறிப்பிட்ட ஹீரோக்களுடன் மட்டுமே கைக்கோர்த்திருக்கிறார். கமர்ஷியல் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி உள்ளிட்டோருடன் சேர்ந்து அவர் வேலை பார்த்ததே இல்லை. ஆனால், அவருக்கு விஜய்யுடன் சேர்ந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததாம்.
சமிபத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெற்றிமாறான் - விஜய் படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில், வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கராவுடன் சேர்ந்து விஜய் தலா ஒரு படம் செய்ய இருந்ததாகவும் ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அந்த இரண்டு படங்களும் ட்ராப் ஆகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த இரண்டு படங்களில், தான் இசையமைப்பாளராக வேலை பார்க்க இருந்ததாகவும் ஆனால் அந்த படம் ட்ராப் ஆனதால் அந்த வாய்ப்பும் நழுவியதாகவும் கூறியிருக்கிறார்.
பீஸ்ட்டுக்கு முன்னாடி..
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிக்க இருந்த படம்தான் பீஸ்ட். இந்த படம், 2022ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு பதிலாக வெற்றிமாறன் அல்லது சுதா கொங்கராவின் ஒரு படத்தில் நடிக்க இருந்தாராம் விஜய். இருவருமே இந்த படத்தில் நடிக்க ஒரு வருடம் கால்ஷீட் கேட்டார்களாம். அது முடியாத காரணத்தால், விஜய் அந்த படங்களை தேர்வு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்படங்கள் ட்ராப் ஆகி உள்ளது. அதன் பிறகு விஜய், பீஸ்ட், லியோ, வாரிசு, ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது முதல்வராகவே மாறி விட்டார்.
மகேஷ் பாபுவுக்கு சென்ற ஸ்கிரிப்ட்:
சுதா கொங்கரா, விஜய் தன் படத்தை ரிஜெக்ட் செய்ததோடு நின்று விடவில்லை. தொடர்ந்து, தென்னிந்தியாவின் இன்னொரு பெரிய ஹீரோவான மகேஷ் பாபுவிடம் அதே ஸ்கிரிப்டை கொண்டு போய் இருக்கிறார். ஆனால், அதன் ப்ரொடக்ஷன் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை. இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
மகேஷ் பாபு, தற்போது ராஜமௌலியின் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கிறார். இதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, இப்படத்திற்கு சமீபத்தில் வாரணாசி என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இப்படம், வரும் 2027ஆம் ஆண்டின் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது என்ன செய்கிறார்கள்?
விஜய் முதல்வர் ட்யூட்டியில் பிசியாக இருக்க, சுதா கொங்கரா பராசக்தி படத்தை இயக்கி முடித்த பறிகு தன்னுடைய அடுத்த கதைக்கான ஹீரோவை தேடும் பணியில் இருக்கிறார். வெற்றி மாறன், தற்போது சிம்புவை வைத்து ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த பின் அவர் வடசென்னை 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.