தண்ணீரில் வாழும் 16 வயது சிறுவன்! வெளியில் வருவதால் ஏற்படும் பிரச்சனை-என்ன விவரம்?
16 வயதான இக்பால் எனும் சிறுவன், தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் குளத்திலேயே காலை முதல் இரவு வரை வாழ்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
கொல்கத்தாவின் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர், தங்களின் வீட்டிற்கு அருகே இருக்கும் குளத்தில், இரவு பகல் பாராமல் தங்கியிருப்பது அவனது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த சிறுவனின் பெயர், இக்பால். தனக்கு தண்ணீரை விட்டு வந்தாலே உடம்பெல்லாம் எரிச்சலை தருகிறது என்கிற காரணத்தினால் அந்த சிறுவன் காலையில் இருந்து ராத்திரி வரை தன் வீட்டிற்கு அருகே இருக்கும் குளத்திலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறுவன், தான் தண்ணீரை விட்டு வெளியே வரும் போதெல்லாம், தன்னை பேய் பிடித்துக்கொள்வது போல உணர்வு ஏற்படுவதாகவும் இதனால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்படுவதாகவும் கூறியிருப்பது, மேலும் திகில் கிளப்பியிருக்கிறது.
உடல் எடை அதிகரித்து காணப்படும் இந்த சிறுவன், ஒரு நேரத்திற்கு ஒரு குட்டையில் இருக்கிறான். ஒரு சில சமயங்களில் நடு ராத்திரி வரை அங்கேயே இருக்கிறார். பின்னர், அங்கிருந்து வேறு குட்டைக்கு மாறுகிறான்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
கொல்கத்தாவில் இருக்கும் மருத்துவர்கள், அந்த சிறுவன் தண்ணீரிலேயே இருப்பதால், அது சருமம் அல்லது பூஞ்சை தொற்றிற்கு வழி வகுக்கலாம் என்றும், பிற உடல் பாதிப்புகள் வரலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.
”உடலில் ஏற்படும் அந்த எரிச்சலுக்கான காரணம் என்ன என்பதை மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும். இது குறித்து ஏற்படும் அசாதாரணமான பயம் குறித்து மனோரீதியான உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்குறிய தீர்வும் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
தன் மகன் குறித்து கவலை தெரிவிக்கும் மருத்துவர்கள், சிறுவனை ஏற்கனவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் ஆனால் எந்த முன்னேற்றமும் அதில் இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பம்!
தங்களின் மகனுக்கு நாள்பட்ட சிகிச்சை வழங்குவதற்காக உதவி கோரியிருப்பதாகவும், அந்த உதவி கிடைத்தால் அவரால் சரியான மருத்துவ உதவியை பெற முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுவனின் வாழ்க்கைமுறை..
அந்த சிறுவன், தண்ணீரில் இருக்கிறானே தவிர, மூன்று வேளையும் சரியாக சாப்பிடுகிறாராம். அக்கம்பக்கத்தினர் இக்பாலுக்கு வந்து உணவு கொடுக்கையில், அவர் அதை தண்ணீரில் இருந்தவாறே சாப்பிட்டு கொள்வாராம்.
இக்பாலை சிறுவயதில் இருந்தே பார்த்த ஒரு நபர் அந்த சிறுவன் பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். அப்போது, அந்த சிறுவன் தன்னுடன் பிறந்தவர்களை விட வெகு சீக்கிரத்தில் அதிக உடல் எடையுடன் காணப்பட்டதாகவும், அவனுக்கு ஏதோ உடல் நலப் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், வெகு நேரம் தண்ணீரிலேயே இருப்பதால் இக்பாலின் கால்களும் கைகளும் வெளரிப்போவதாக தெரிவித்துள்ளார்.
இக்பாலுக்கு சளி பிடித்து, இருமலும் வருகிறதாம். ஆனாலும் அவர் தண்ணீரை விட்டு வெளியே வர மறுப்பதாகவும் அவன் மீது அக்கறையுள்ள அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
தோல் மருத்துவர்கள் சொல்வது என்ன?
இக்பாலின் இந்த நிலை குறித்து தோல் மருத்துவர்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த சிறுவன் தண்ணீரிலேயே இருப்பதால் அவருடைய சருமத்தில் இருக்கும் மென்மையாதலை ஏற்படுத்தும் என்றும், இதனால் தோல் வெளிறி, மென்மையாகி, சேதம் மற்றும் தொற்றுநோய்க்கு எளிதில் ஆளாகும் என்றும் கூறியிருக்கின்றனர். தனியார் மருத்துவர் ஒருவர், அந்த சிறுவன் இப்படியே இருப்பது அவனுக்கும் அவனுடைய உடல் நிலைக்கும் நல்லதில்லை என்றே தெரிவித்திருக்கிறார்.