8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக்குழு, ஊழியர் சங்கங்களுடனும், சம்பந்தப்பட்ட பிற பிரதிநிதிகளுடனும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
இந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள், 8-வது ஊதியக் குழுவிடம் வருடாந்திர ஊதிய உயர்வு விகிதத்தை கணிசமாக உயர்த்துமாறு வலியுறுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கை மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால வருவாயை பெருமளவு அதிகரிக்கக்கூடும்.
ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளின் படி, வருடாந்திர ஊதிய உயர்வை 6%-ஆக (அதாவது இருமடங்காக) உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு உயரும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
| அம்சம் | லெவல் 10 ஊழியர்கள் | லெவல் 12 ஊழியர்கள் |
| அடிப்படை ஊதியம் (7வது ஊதியக் குழு - தொடக்கம்) | ரூ.56,100 | ரூ.78,800 |
| 2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிரனயிக்கப்பட்டால் | ரூ.1,17,810 | ரூ.1,65,480 |
| 6% வருடாந்திர ஊதிய உயர்வில் 10 ஆண்டு ஊதிய உயர்வு | ரூ.24.27 லட்சம் | ரூ.34.09 லட்சம் |
8-வது ஊதியக் குழு 2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை (fitment factor) ஏற்றுக்கொள்வதாகக் கொண்டால், 3% வருடாந்திர உயர்வுடன் ஒப்பிடுகையில்,
குறிப்பு: இந்த கணக்கீடுகள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இவை 8-வது ஊதியக் குழுவின் இறுதி ஊதியக் கட்டமைப்பைக் குறிப்பவை அல்ல. உண்மையான ஊதிய உயர்வு என்பது 'ஃபிட்மென்ட் ஃபாக்டர்', வருடாந்திர ஊதிய உயர்வு விகிதம் மற்றும் அரசாங்கத்தால் இறுதியில் அங்கீகரிக்கப்படும் பிற பரிந்துரைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.