SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஏர்போர்டில் பயணி திடீர் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் காயம்.. வாரணாசியில் நடந்தது என்ன?

Varanasi Airport Incident: வாரணாசி விமான நிலையத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தார். வாரணாசி விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written By Umabarkavi K
Published: Aug 16, 2026, 01:09 PM IST | Updated: Aug 16, 2026, 01:21 PM IST
Join

Varanasi Airport Incident: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. வாரணாசியில் உள்ள விமான நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், எப்போதுமே வாரணாசி விமான நிலையம் எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும். 

வாரணாசி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு, உள்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, வாரணாசி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் துப்பாக்கி வெடித்ததில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

வாரணாசி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணி ஒருவரை சோதனையிட்டபோது, அவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் விமான நிலைய பணியாளர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 

உத்தர பிரதேச மாநிலம் அசம்கரைச் சேர்ந்தவர் அந்த பயணி, தனது மனைவியுடன் ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அவர் தன்னுடன் துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாவை வைத்திருந்தார். மேலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, ஆயுத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தான், துப்பாக்ககிச் சூடு நடந்தது.

வாரணாசி விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தாவின் கூற்றுப்படி, துப்பாக்கியும், அதன் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துப்பாக்கி மற்றும் அதன் ஆவணங்களை சோதனையிட்டபோது, அதன் உரிமையாளரும் விமான நிலைய ஊழியர்களுடன் உடன் இருந்ததாக அவர் தெரிவித்தார். அப்போது தான், துப்பாக்கி வெடித்துள்ளது. 

2 பேர் காயம்

 

 

இந்த துப்பாக்கி குண்டு இரண்டு விமான நிலைய ஊழியர்கள் மீது பாய்ந்தது. இதில், இரண்டு பேர் காயம்  அடைந்தனர்.  ஆண்டு ஊழியருக்கு கையிலும், பெண் ஊழியருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. 

வாரணாசி விமான நிலைய இயக்குநரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 16, 2026 அன்று காலை சுமார் 9:30 மணியளவில், ஆயுதச் சோதனையின்போது பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்ததாக உறுதியளித்தார். இருவரும் சிகிச்சைக்காக நியூ லக்ஷ்மி ட்ராமா சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

உள்ளூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர். வாரணாசியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயணி யார், எப்படி துப்பாக்கி தானாகவே சுட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES