• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /இந்தியாவில் இந்த 3 முக்கிய இடங்களுக்கு போகவே முடியாது... என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் இந்த 3 முக்கிய இடங்களுக்கு போகவே முடியாது... என்னென்ன தெரியுமா?

Top 3 Restricted Areas In India : இந்தியாவில் உள்ள இந்த மூன்று இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுமக்களால் சாதாரணமாக இங்கு செல்ல இயலாது. இவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 02:32 AM IST|Updated: Aug 09, 2026, 02:39 AM IST
joinshare
இந்தியாவில் இந்த 3 முக்கிய இடங்களுக்கு போகவே முடியாது... என்னென்ன தெரியுமா?

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Top 3 Restricted Areas In India : இந்திய நாட்டு குடிமக்களும், வெளிநாட்டினரும் சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. பொதுமக்கள் எளிதாக சென்றுவர அனுமதியும் உள்ளன.

ஆனால், அதேபோல் எளிமையாக பொதுமக்கள் செல்ல முடியாத இடங்களும் இந்தியாவில் இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு, அணுசக்தி ஆராய்ச்சி,  பழங்குடியின மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், பொதுமக்களால் எளிதாக செல்ல முடியாத மூன்று இடங்களை இங்கு பார்க்கலாம்.

1. நார்த் சென்டினல் தீவு

  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நார்த் சென்டினல் தீவுகள் என்பது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினமான சென்டினலீஸ் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
  • முழு தீவும், அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ., கடல் பரப்பும் Tribal Reserve ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பழங்குடியின மக்களை வெளிப்புறத் தொடர்பில் இருந்து பாதுகாப்பற்றதற்காக இங்கு யாரையும் நுழையவிடாமல், தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகிறது.
  • எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

2. பாபா அணு ஆராய்ச்சி மையம்

  • மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுகுதியில்தான் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) அமைந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான அணுசக்தி ஆராய்ச்சி மையங்களில் ஒன்று.
  • சாராதணமாக செல்லக்கூடிய இடமில்லை. வளாகத்திற்குள் நுழைய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் என்ட்ரி பாஸ் தேவைப்படுகிறது.
  • நாட்டின் பாதுகாப்பு, அணு உலைகளின் ரகசியம் மற்றும் கதிர்வீச்சு அபாயங்கள் காரணமாக மத்திய ஆயுதப் படையினரின் பலத்த பாதுகாப்பில் இது இயங்கப்பட்டு வருகிறது. எனவே, இங்கு சாதாரண மக்களால் எளிதில் நுழைய முடியாது.

3. பொக்ரான்

  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தின் தார் பாலைவனத்தில் பொக்ரான் துப்பாக்கிச்சூடு மண்டலம் அமைந்துள்ளது.
  • இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும்.
  • 1974 இந்தியாவின் முதல் நிலத்தடி அணு ஆயுதச் சோதனை, 1998இல் ஐந்து நிலத்தடி அணு ஆயுதச் சோதனைகள் மீண்டும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதன்மூலமே இந்தியா முழுமையான அணு ஆயுத நாடாக மாறியது.
  • தற்போது இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையின் பயிற்சிகள், ஆயுத சோதனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப்படை தனது முழுமையான வான்வழித் தாக்குதல் திறன் மற்றும் துல்லிய இலக்குகளை அழிக்கும் வல்லமையை உலகிற்கே பறைசாற்றும் வகையில் வாயு சக்தி என்ற பிரம்மாண்ட வான்படைப் பயிற்சியை இங்கு இந்தாண்டு நடத்தியது. இந்த இடத்திற்கும் பொதுமக்கள் எளிதாக செல்ல முடியாது.

ஏன் சியாச்சின் பனிப்பாறை இல்லை

பலரும் லடாக் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்வான இடத்தில் அமைந்துள்ள இமயமலைப் பகுதி உள்ளி சியாச்சின் பனிமலையை பலரும் கட்டுப்பாடு மிகுந்த பகுதியாக கூறுவார்கள். 

மாறாக, சியாச்சின் பேஸ் கேம்ப் முதல் குமார் போஸ்ட் வரையிலான பகுதிகளில் அனுமதியுடன் சுற்றுலா நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, இந்த பட்டியலில் இது சேர்க்கப்படவில்லை.

இந்திய குடிமக்களாக இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த இடங்களை பொதுமக்கள் தங்களின் விருப்பம்போல் சுற்றி பார்க்க முடியாது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tour Travel