SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

1947-ல் 1 ரூபாய்க்கு லிட்டர் கணக்கில் பால், பெட்ரோல்... தங்கம் விலை எவ்வளவு இருந்தது தெரியுமா?

Independence Day: இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 1947ஆம் ஆண்டு ஒரு ரூபாயில் என்னெல்லாம் வாங்க முடிந்தது, அப்போது விலைவாசி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 16, 2026, 11:15 AM IST | Updated: Aug 16, 2026, 11:31 AM IST
Join

Independence Day: இந்தியாவில் விலைவாசி உயர்வு என்பது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.  

பணவீக்கம் போன்ற காரணங்களால் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 80வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த நேரத்தில், சுதந்திரம் கிடைத்த 1947ஆம் ஆண்டில் விலைவாசி எப்படி இருந்தது, 1 ரூபாய்க்கு அப்போது என்னெல்லாம் வாங்க முடிந்தது என்பது குறித்து பார்ப்போம். அந்த 1 ரூபாய் வைத்து 2026ல் என்ன வாங்க முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1947-ல் 1 ரூபாய்க்கு என்ன வாங்கலாம்?

1947ஆம் ஆண்டு 1 ரூபாயில் அரிசி, பால், பெட்ரோல்  போன்றவை வாங்க முடியுமாம். அதன்படி, 1947ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி 12 பைசாவாகவும், பால் லிட்டருக்கு 12 பைசாவாகவும் விற்பனை செய்யப்பட்டாகா கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால், 1947ஆம் ஆண்டு 1 ரூபாயில் சுமார் 8.3 கிலோ  அரிசி மற்றும் 8.3 லிட்டர் பால் வாங்க முடியுமாம்.

1947ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 27 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால், 1 ரூபாய்க்கு  3.7 லிட்டர் பெட்ரோல் வாங்க முடியுமாம். இன்றைய நிலைக்கு  மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

தற்போது நிலை எப்படி?

தற்போது விலைவாசி உயர்வால் அரிசி, பால் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. இன்றைய காலத்தில் 1 ரூபாய்க்கு சாக்லேட் கூட வாங்க முடியாத சூழல் இருக்கிறது. குறைந்தது 2 முதல் 5 ரூபாய்க்கு தான் சாக்லேட் கூட விற்பனை செய்யப்படுகிறது தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ரூபாய்க்கு கணக்கிட்டால் சுமார் 30 கிராம் அரிசி மட்டுமே வாங்க முடியும்.  தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு கணக்கிட்டால் 10 மில்லி லிட்டருக்கு குறைவாகவே பெட்ரோல் வாங்க முடியும். 

தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் தற்போது ரூ.6 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு ரூபாய்க்கு கணக்கிட்டால் சுமார் 14 முதல் 15 மில்லிலிட்டர் மட்டுமே பால் வாங்க முடியும்.

தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

1947ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு தோராயமாக 0.11 கிராம் தங்கம் வாங்க முடிந்தது. இன்று தங்கத்தை வாங்குவது என்பது எட்டாங்கனியாக மாறியுள்ளது. சென்னையில் 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14,220க்கு விற்பனை செய்யப்படுகிது.

ஒரு சவரன் தங்கம் ரூ.1.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.வேறுவிதமாகக் கூறினால், 1947-ல் ஒரு ரூபாய்க்கு வாங்க முடிந்த தங்கத்தின் இன்றைய விலை 16,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு ரூபாயில் ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடிந்தது. இன்று ஒரு ரூபாயில் ஒன்றுமையே வாங்க முடியாது.  ஆயினும், இந்தக் கதை பணவீக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது உயர்ந்து வரும் வருமானம், பெருமளவு உற்பத்தி, நகரமயமாக்கல், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES