LPG Cylinder e-KYC: LPG சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. LPG வாடிக்கையாளர்கள் தங்கள் e-KYC-ஐ செய்து முடிக்க ஆகஸ்ட் 16 வரை அவகாசம் உள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இது குறித்து SMS மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றன.
ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை செய்துமுடிக்காத வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நெரிடும். இவர்களது LPG இணைப்பு நிறுத்தப்படலாம் மற்றும் சிலிண்டர்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் LPG e-KYC -ஐ நிறைவு செய்ய தவறும் வாடிக்கையாகர்கள் நிர்ணயிக்கப்பட்ட வீட்டு உபயோக விலையில் LPG சிலிண்டர்களை வாங்க முடியாமல் போகலாம் என்றும், அதிக விலைக்கு அவற்றை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
e-KYC-யின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, தற்போதைய வீட்டு உபயோக LPG விலைகளையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.
LPG இணைப்பு தொடர்பான நடைமுறையைப் புறக்கணித்தால், அதிக விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நீங்கள் தள்ளப்படலாம். குறிப்பாக சமையலறைக்கு முழுமையாக LPG-யை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
LPG e-KYC செயல்முறையை செய்துமுடிக்க வாடிக்கையாளர்கள் கட்டாயம் LPG முகவர் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே e-KYC-ஐ முடிப்பதற்கான வசதியை வழங்கியுள்ளன.
இந்தியன் ஆயில் (Indian Oil) வாடிக்கையாளர்கள் 'Indian Oil One' செயலி (App) மூலம் e-KYC செயல்முறையை முடிக்கலாம். மாற்றாக, LPG விநியோகஸ்தரை நேரில் சந்தித்தும் இதைச் செய்யலாம். சிலிண்டரை விநியோகம் செய்ய வரும் ஊழியர் மூலமாகவும் e-KYC-ஐ முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளர்களுக்குப் பல வழிகள் உள்ளன. எனினும், வாடிக்கையாளர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே இந்தச் செயல்முறையை முடிப்பது பாதுகாப்பானது.
ஒரு குடும்பம் இயல்பாக செயல்பட உணவு அவசியம் என்றால், அந்த உணவு சரியான நேரத்தில் தயாராக LPG சிலிண்டர் முக முக்கியம். ஆகையால், LPG சிலிண்டருக்கான e-KYC செயல்முறையை புறக்கணிக்காமல் செய்துமுடிப்பது நல்லது.
ஒரு குடும்பத்தின் சமையலறை பட்ஜெட்டில், சிலிண்டர் சரியான நேரத்தில் முறையான நடைமுறையின்படி பெறப்படுவதற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், e-KYC-ஐ முடிக்கச் சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றாலும், அதை அலட்சியப்படுத்தினால் பிற்காலத்தில் LPG சிலிண்டரை மீண்டும் நிரப்புவதில் (refill) சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆகையால், இதுவரை இந்தச் செயல்முறையை முடிக்காத வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி என்ற காலக்கெடுவை நினைவில் கொள்வது அவசியம்.