LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 16 காலக்கெடு மிஸ் ஆனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?
LPG Cylinder e-KYC: ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை செய்துமுடிக்காத வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நெரிடும். இவர்களது LPG இணைப்பு நிறுத்தப்படலாம் மற்றும் சிலிண்டர்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
LPG Cylinder e-KYC: LPG சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. LPG வாடிக்கையாளர்கள் தங்கள் e-KYC-ஐ செய்து முடிக்க ஆகஸ்ட் 16 வரை அவகாசம் உள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இது குறித்து SMS மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றன.
ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் e-KYC செயல்முறையை செய்துமுடிக்காத வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நெரிடும். இவர்களது LPG இணைப்பு நிறுத்தப்படலாம் மற்றும் சிலிண்டர்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
LPG e-KYC காலக்கெடு: ஆகஸ்ட் 16
- LPG வாடிக்கையாளர்கள் தங்கள் e-KYC-ஐ முடிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- Indane, HP மற்றும் Bharat Gas வாடிக்கையாளர்களுக்கு இச்செயல்முறையைச் சரியான நேரத்தில் முடிக்குமாறு அறிவிப்புகள் வருவதாக கூறப்படுகின்றது.
- எண்ணெய் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்குச் செய்திகளை அனுப்பி வருகின்றன.
- மேலும், 'X' (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடகத் தளம் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு e-KYC-ஐ விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- காலக்கெடு முடிந்த பிறகு LPG-ஐப் பெறுவது கடினமாகிவிடும் என்று நிறுவனங்கள் வாடிக்கையாலர்களை எச்சரித்துள்ளன.
ஆகஸ்ட் 16 காலக்கெடுவிற்குள் LPG e-KYC -ஐ நிறைவு செய்ய தவறும் வாடிக்கையாகர்கள் நிர்ணயிக்கப்பட்ட வீட்டு உபயோக விலையில் LPG சிலிண்டர்களை வாங்க முடியாமல் போகலாம் என்றும், அதிக விலைக்கு அவற்றை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் LPG சிலிண்டரின் விலை என்ன?
e-KYC-யின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, தற்போதைய வீட்டு உபயோக LPG விலைகளையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.
- சென்னையில் 14 கிலோ வீட்டு உபயோக LPG சிலிண்டரின் விலை ₹957.50 ஆக உள்ளது.
- டெல்லியில் 14 கிலோ வீட்டு உபயோக LPG சிலிண்டரின் விலை ₹942 ஆகும்.
- கொல்கத்தாவில் அதே சிலிண்டரின் விலை ₹968 ஆக உள்ளது.
- மும்பையில் இதன் விலை ₹941.50.
LPG இணைப்பு தொடர்பான நடைமுறையைப் புறக்கணித்தால், அதிக விலையில் எல்பிஜி சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நீங்கள் தள்ளப்படலாம். குறிப்பாக சமையலறைக்கு முழுமையாக LPG-யை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
உஜ்வாலா (Ujjwala) வாடிக்கையாளர்களுக்கும் e-KYC ஏன் முக்கியம்?
- பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவின் (Pradhan Mantri Ujjwala Yojana) கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு LPG விலையின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது.
- அறிக்கைகளின்படி, இத்திட்டத்தின் பயனாளிகள் ஆண்டுக்கு நான்கு LPG சிலிண்டர் ரீஃபில்களுக்கு ₹300 நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) மானியத்தைப் பெறுகின்றனர்.
- உதாரணமாக, டெல்லியில் ₹942 விலை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ₹300 மானியம் வழங்கப்பட்ட பிறகு, 'உஜ்வாலா' (Ujjwala) திட்டப் பயனாளிகளுக்கு அதன் நிகர விலை ₹642-ஆகக் குறைகிறது.
- ஆகையால், சமையல் எரிவாயு செலவு ஏற்கனவே குடும்ப பட்ஜெட்டில் கணிசமான பங்கை வகிக்கும் சூழலில், எரிவாயு இணைப்புக்கான e-KYC நடைமுறைகளை உரிய நேரத்தில் முடிப்பது மிகவும் அவசியமாகும்.
வீட்டிலிருந்தபடியே LPG e-KYC-ஐ எவ்வாறு முடிப்பது?
LPG e-KYC செயல்முறையை செய்துமுடிக்க வாடிக்கையாளர்கள் கட்டாயம் LPG முகவர் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே e-KYC-ஐ முடிப்பதற்கான வசதியை வழங்கியுள்ளன.
இந்தியன் ஆயில் (Indian Oil) வாடிக்கையாளர்கள் 'Indian Oil One' செயலி (App) மூலம் e-KYC செயல்முறையை முடிக்கலாம். மாற்றாக, LPG விநியோகஸ்தரை நேரில் சந்தித்தும் இதைச் செய்யலாம். சிலிண்டரை விநியோகம் செய்ய வரும் ஊழியர் மூலமாகவும் e-KYC-ஐ முடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், வாடிக்கையாளர்களுக்குப் பல வழிகள் உள்ளன. எனினும், வாடிக்கையாளர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே இந்தச் செயல்முறையை முடிப்பது பாதுகாப்பானது.
எளிய செயல்முறை, ஆனால் சமையலறையில் நேரடி தாக்கம்
ஒரு குடும்பம் இயல்பாக செயல்பட உணவு அவசியம் என்றால், அந்த உணவு சரியான நேரத்தில் தயாராக LPG சிலிண்டர் முக முக்கியம். ஆகையால், LPG சிலிண்டருக்கான e-KYC செயல்முறையை புறக்கணிக்காமல் செய்துமுடிப்பது நல்லது.
ஒரு குடும்பத்தின் சமையலறை பட்ஜெட்டில், சிலிண்டர் சரியான நேரத்தில் முறையான நடைமுறையின்படி பெறப்படுவதற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், e-KYC-ஐ முடிக்கச் சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றாலும், அதை அலட்சியப்படுத்தினால் பிற்காலத்தில் LPG சிலிண்டரை மீண்டும் நிரப்புவதில் (refill) சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆகையால், இதுவரை இந்தச் செயல்முறையை முடிக்காத வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி என்ற காலக்கெடுவை நினைவில் கொள்வது அவசியம்.