SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஐபோன் EMI தகராறு: மலை உச்சியில் நின்ற மகன்.. காப்பாற்ற சென்றபோது சோகம்! வைரல் வீடியோ!

ஐபோன் இஎம்ஐ பணம் தொடர்பான தகராறில், மகனை சமாதானப்படுத்த சென்ற பெற்றோர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மலைப் உச்சியில் விழுந்து உயிரிழந்தனர்.

Written By R Balaji
Published: Aug 22, 2026, 07:12 AM IST | Updated: Aug 22, 2026, 07:20 AM IST
Join

மகாராஷ்டிராவில் ஐபோனுக்கு (iphone) இஎம்ஐ கட்ட பணம் கேட்டு தனது பெற்றோரிடம் தகராறு செய்து குணால் என்ற இளைஞரை தற்கொலை செய்வதாக மலை உச்சிக்கு சென்ற நிலையில், அவரை சமாதானம் செய்து அழைத்து வர பெற்றோர் சென்றபோது, மூவரும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபோனுக்கு இஎம்ஐ கட்ட பணம் கேட்டு தகராறு

மகாராஷ்டிரா மாநிலம் திஸ்காவ் பகுதியை சேர்ந்தவர் குணால். இவருக்கு வயது 18 ஆகிறது. இவர் சமீபத்தில் தவணை முறையில் ஐபோன் வாங்கி உள்ளார். ஆனால் அதற்கான மாதத் தவணையைச் செலுத்த முடியாமல் பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக தந்தை முரளிதர் சாந்துகுடேவுக்கும் மகன் குணால் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

இதில் கோபமடைந்த குணால், காலை 10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்று பணம் தராவிட்டால் தற்கொலை செய்துக்கொள்வதாக பெற்றோரை மிரட்டி உள்ளார்.

 சமாதானப்படுத்த சென்ற பெற்றோர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் மற்றும் பிரச்சனை குறித்து அறிந்த ஊர் மக்கள், போலீசார் ஆகியோர் குணாலிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வர சென்றுள்ளனர். அப்போது, ”உனக்கு ஐபோன் 15 ப்ரோ வாங்கி தருகிறோம்” என ஊர் மக்கள் கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். மேலும், ”அம்மாவின் முகத்தை பார்” எனவும் கூறி கொஞ்சி உள்ளனர். ஆனால் குணால், நான் இறந்துபோவதை தவிர வேறு வழியில்லை என கூறி பிடிவாதம் பிடித்து அங்கேயே நின்றுள்ளார்.

 தந்தையை காப்பாற்ற முயன்றபோது விபரீதம்

சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு மதியம் 1 மணி அளவில் மலையின் விளிம்பில் நின்ற குணாலை தந்தை முரளிதர் சாந்துகுடே மேலே சென்று கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நிலைதடுமாறி ஆழமான பள்ளத்தில் விழுந்தனர். கண்முன்னே கணவனும் மகனும் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் உடனடியாக மலையிலிருந்து கீழே குதித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வாளுஜ் எம்.ஐ.டி.சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரணமாக ஐபோனுக்கு இஎம்ஐ கட்ட பணம் கேட்டதில் எழுந்த பிரச்னை, ஒட்டுமொத்த குடும்பத்தின் உயிரையே பறித்துள்ளது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆசை மற்றும் அவசரமாக எடுக்கப்படும் விபரீத முடிவுகள் எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒரு சிறிய தகராறில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES