SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அதிவேகத்தில் மோதிய கார்... இளம்பெண் உயிரிழப்பு - எம்.பி. மகன் கைதாகவில்லை - ஏன்?

Hyderabad Aston Martin Accident: 26 வயதான இளம்பெண் மீது Aston Martin சொகுசு கார் மோதியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கியவர் மாநிலங்களவை எம்பியின் மகன் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Written By Sudharsan G
Published: Aug 21, 2026, 08:52 AM IST | Updated: Aug 21, 2026, 08:59 AM IST
Join

Hyderabad Aston Martin Accident: ஹைதராபாத்தில் மாநிலங்களவை உறுப்பினரான லிங்கமனேனி ரமேஷ் என்பவரது மகன் லிங்கமனேனி சஞ்சுஷ் (21) என்பவர், அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று, இளம்பெண் ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

லிங்கமனேனி சஞ்சுஷ் அவரது Aston Martin எனும் சொகுசு காரை வேகமாகவும், கண்முன் தெரியாத வகையிலும் இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உயிரிழந்த பாரதி முகி என்ற அந்த இளம்பெண், ஹைதராபாத் நகரின் பிரபல Inorbit Mall-ல் Lifestyle துணிக்கடையில் பணிபுரிந்து வந்தவர்.

காரை இயக்கியது யார்...?

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று மாதாப்பூரில் அவர் பணியாற்றும் மாலுக்கு அருகே சாலையை கடக்க முயற்சித்தபோது, சொகுசு கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

காரை இயக்கிய சஞ்சுஷிற்கு வயது 21 என்றும் தொழிலதிபரான அவரது தந்தை ஆந்திர துணை முதலமைச்சரான பவான் கல்யாணின் ஜன சேனா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். சுஞ்சுஷ்தான் காரை இயக்கியதாக போலீசார் உறுதிசெய்தாலும், இன்னும் அவரை கைது செய்யவில்லை.

இன்னும் கைது செய்யப்படவில்லை

குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மாதாப்பூர் காவல் துணை ஆணையர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், குற்றச்சாட்டுக்கு அவருக்கு பிணை வழங்கப்படும் என்றாலும், குற்றம் உறுதியாகும்பட்சத்தில் அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம் என்பதாலும் அவர் தற்சமயம் வரை கைது செய்யப்படவில்லை என்றார்.

வழக்குப்பதிவு

பாரதி மீது மோதியபோது, அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் பொறுப்பற்ற முறையிலும் காரை இயக்கியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு BNS பிரிவு 106(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவு குற்றவியல் கொலைக்கு நிகராகாத கவனக்குறைவான அல்லது பொறுப்பேற்ற செயலால் உயிரிழப்பை ஏற்படுத்துவது தொடர்பானதாகும்.

ஆகஸ்ட் 16இல் நடந்தது என்ன?

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, உயிரிழந்த பாரதியும், அவருடன் வேலை செய்யும் பூஜா அசோக் அலோன் (26) என்பவருடன் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மதியம் 3 மணிக்கு, மதிய உணவை வாங்குவதற்காக ITC Kohenur ஹோட்டல் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.

சாப்பிட்டுவிட்டு அவர்கள் வேலைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது,  மாலுக்கு எதிரே இருந்து சாலையை கடக்க பாரதி முயற்சித்துள்ளார். அப்போதுதான் ஒரு Aston Martin சொகுசு கார் அவரை மோதி உள்ளது. அந்த காரின் பதிவு எண்: TG-09-G-0666 ஆகும்.

பாரதிக்கு தலையில் பலத்த காயம்

கார் மோதியதில் பாரதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு கடுமையான ரத்த இழப்பும் ஏற்பட்டுள்ளது. உடனே அதே Aston Martin காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் பாரதி உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். உயிரிழந்த பாரதியின் தோழி பூஜை, அவரது கடை மேலாளர் அஸ்வின் குமார் என்பவரிடம் தகவல் சொல்லி உள்ளார். அஸ்வின் குமார்தான் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES