தேர்வுகள் ரத்து... உண்ணாவிரதத்தை முடித்த மாணவத் தலைவர் - CBI விசாரணை வருமா?
Jharkhand Exams Cancelled: ஜார்க்கண்டில் 24 நாட்கள் மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக அரசுத் தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ 16வது நாள் உண்ணாவிரதத்தை நேற்று முடிவு செய்தார்.
Jharkhand Exams Cancelled: ஜார்க்கண்டில் 24 நாட்கள் மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக, ஜே.எஸ்.எஸ்.சி - சி.ஜி.எல் தேர்வையும், டி.எஸ்.ஆர் டேட்டா பிராசஸிங் பிரைவேட் லிமிடெட் (TDPL) நிறுவனம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து, ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சதர் மருத்துவமனையில் மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ, சதர் மருத்துவமனையில் நேற்று (ஆகஸ்ட் 17) அவரது 16வது நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
பிரச்சாரம் தொடரும்
அரசின் ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் போராட்டம் நடத்தினர். தேர்வுகளை ரத்து செய்யப்பட்டதாக மாநில அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சார் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால், அதேநேரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்களின் முக்கிய கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாக போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் வேலை தேடி வரும் இளைஞர்களின் போராட்டங்களை தேவேந்திரநாத் மஹ்தோ, அரசின் இந்த முடிவை போராட்டக்காரர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி என குறிப்பிட்டு பேசினார். அதேநேரத்தில், தேர்வு முறையில் சீர்த்திருத்தங்கள் செய்வதற்கான தனது விரிவான பிரச்சாரம் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
வருங்காலத்தில் என்ன செய்யப்பட வேண்டும்?
செய்தியாளர்களிடம் பேசிய மஹ்தோ, "முதலமைச்சர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங், இர்பான் அன்சாரி, சக மாணவர்ள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஆதரவிற்காக நன்றி" என்றார்.
JSSC-CJL தேர்வுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஏற்கெனவே பணியில் சேரும் நிலையை எட்டியிருந்ததால் இது ஒரு எளிதான முடிவு அல்ல. எனவே, தேர்வை ரத்து செய்ததற்காக மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் மற்றும் விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மஹ்தோ தெரிவித்தார். அனைத்து தேர்வுகளும் கண்காணிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும்; ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை தேவை
இது வெறும் முதல் படிதான் என்றும் 11ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையிலான பிரச்சினையும் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்த பியூஷ் குமார் தெரிவித்தார். மேலும், சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டால், மாணவர்கள் தங்கள் பக்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014 முதல் விசாரணை...
இதற்கிடையில் TDPL மூலம் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும், அந்நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார்.
TDPL நடத்திய அனைத்து தேர்வுகளும், அதுவெளியிட்ட தேர்வு முடிவுகளும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன. TDPL மூல் நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு ரத்து செய்யப்படுகின்றன. மேலும் 2014ஆம் ஆண்டுமுதல் TDPL நடத்திய அனைத்துத் தேர்வுகளையும் குற்றப் புலனாய்வுத்துறை (CID) விசாரிக்கும்" என்றார்.