டிவியில் இனி ரொம்ப நேரம் விளம்பரம் வரும்! 12 நிமிட ரூல்ஸை நீக்கிய மத்திய அரசு..
2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கான மத்திய அரசின் புதிய ரூல்ஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் பரிணாம வளர்ச்சியை கொஞ்சம் திரும்பி பார்த்தால், கடந்த 30 ஆண்டுகளில் எவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறோம் என நினைக்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.
ரொம்ப உன்னிப்பாக ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென விளம்பரம் இடையே வந்தால் அனைவருக்கும் செம எரிச்சல் ஆகும். அந்த விளம்பரம் எப்போதான் முடியுமோ என காத்திருந்து, 2 மணி நேர படத்தை மூன்றரை மணி நேரமாக பார்த்திருப்போம். இந்த விளம்பரங்களை, உண்மையில் எத்தனை நிமிடங்கள் போட வேண்டும்? அதில் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் மாற்றம் என்ன? இது குறித்து முழுமையாக இங்கு தெரிந்து கொள்வோம்.
12 நிமிட விளம்பர லிமிட் இல்லை!
சமீபத்தில், இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களுக்கான 12 நிமிட கட்டுப்பாட்டை, மத்திய அரசு நீக்கியிருக்கிறது. இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமன TRAI அமைப்பு, இதுவரை ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும் என்கிற வரம்பை விதித்திருந்தது. இந்த 12 minute per hour ad capஐ, இந்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கியிருக்கிறது. இந்த கட்டுப்பாடு, வர்த்தக சுதந்திரத்தை முடக்குவதாகவும் வருவாயை பெருமளவில் பாதிப்பதகவும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்த்து வந்தனர். ஆனால், அரசு இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளதால் இனி சேனல்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப விளம்பர நேரத்தை திர்மானித்து கொள்ள முடியும். அதோடு, அவர்களின் விளம்பர வருவாயும் பெருமளவில் அதிகரிக்கலாம்.
2006ல் கொண்டு வரப்பட்ட லிமிட்!
தொலைக்காட்சிகளில், விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கான வரையரை, 2006ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்தியாவின் தொலைக்காட்சி சந்தை என்பது மிகவும் குறைவுதான். அதிலும் பெருமளவில் ஆனலாக் கேபிள் நெட்வர்க்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. அப்போது வெறும் 62 சேனல்கள் மட்டுமே இருந்தன. ஆனால், 20 வருடங்களுக்கு பின், இப்போது இருக்கும் நிலையே வேறு. இப்போது இதற்கான மார்கெட் பெரிதாக வளர்ந்து விட்டது. இப்போது கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கின்றன. இது வளர்ந்தது, DTH, HITS மற்றும் IPTV உள்ளிட்டவற்றின் வளர்ச்சிகளுக்கு பிறகுதான். இப்படி சேனல்கள் பெரிதாக பெருகி விட்டதாலும், நேயர்களின் தேர்வு பெருகி விட்டதாலும் இதற்கான போட்டியும் பெருகி விட்டது.
டிஜிட்டல் மீடியா..!
டிவியின் பரிணாமம் ஒரு புறம் இருக்க, அடுத்து டிஜிட்டல் மீடியாவும் வேகமாக உருவெடுக்க தொடங்கியது. அதில், டிவி சேனல்களை போல விளம்பரங்கள் கொடுக்க பெரிய தடைகள் ஏதும் இல்லை.