SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explainer : இந்தியாவின் வளர்ச்சிக்காக..பிரதமர் மோடி வகுத்த 7 திட்டங்கள்! என்னென்ன தெரியுமா?

80வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் இந்தியா வளர்ச்சியடைய 7 திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 15, 2026, 12:10 PM IST | Updated: Aug 21, 2026, 04:28 PM IST
Join

நாட்டின் 80வது சுதந்திர தினம், இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொது வெளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் இருக்கும் செங்கோட்டையில் சுதந்திர தின விழா அணிவகுப்பு, கொடியேற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைப்பெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரை:

பிரதமர் மோடி, நாட்டு மக்கள் மத்தியில் பேசுகையில், இன்றைய நாளை வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை நாம் கொண்டாடுவதாகவும் நினைவு கூர்ந்தார். செங்கோட்டையில் இன்று முதன்முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டதாகவும், பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், அரிய வகை தனிமங்கள் துறையில், தற்சார்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும், vocal for local மூலமாக மக்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Sapta Dhara என்றால் என்ன?

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல இப்போது ஒரு புதிய சக்தி தேவை என்று கூறியதோடு, அதனை 'சப்த சிந்து' (ஏழு நதிகள்) என்ற பண்டைய கருத்துடன் அதை ஒப்பிட்டு பேசினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 5 முதல் 7 வருடங்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல தசாப்தங்களில் செய்ய முடியாததை இந்தியாவால் வரும் சில ஆண்டுகளில் செய்து காட்ட முடியும் என்றும் தெரிவித்தார். இதில், நாட்டு இளைஞர்கள் இணைவதும் மிக மிக அவசியம் என சுட்டிக்காட்டினார்.

ஒன்று:

முதல் கட்டமாக, இந்தியாவின் உற்பத்தி திறனை கூறிய அவர், நம் நாடு நுண்கூறுகள் முதல், முழு பொருட்கள் தயாரித்து முடிப்பது வரை உற்பத்தி திறனை விரிவு படுத்த வேண்டும் என்று கூறினார்.

பொருட்களின் தரம் என்று வரும் போது அதில் எந்த குறையும் இருக்க கூடாது என்றும், பயன்பாட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் Zero Defect உடன் ஒவ்வொரு பொருளையும் தயாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இரண்டு:

இரண்டாவதாக, நாட்டின் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி குறித்து பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சந்தைகளை இந்திய விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், விவசாய உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயான இடைவெளியை நாடு குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மூன்று:

மூன்றாவதாக பிரதமர் மோடி தொழில்நுட்பம் மற்றும் புதுமை வளர்ச்சிக்கு உதவும் என்று பேசினார். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில் நுட்பம், ரோபாட்டிக்ஸ் மற்றும் தரவு மையங்கள் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா அதன் பயன்பாட்டாளராக இருப்பதோடு நிறுத்தி விடக்கூடாது என்றும் அதற்கான உலகளாவிய மையமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நான்கு:

நான்காவதாக, Gati Shakti எனும் அதி விரைவு சக்தி குறித்து பேசிய அவர், இந்தியா உள்கட்டமைப்பு மற்றும் சாலை இணைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். நாடு முழுவதும், அதிக வேகமுள்ள ரயில், நவீன நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழித்தடங்கள், மேம்பட்ட விமான நிலையங்கள் உள்ளிட்டவை வளர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம், நாட்டில் பயணங்கள் விரைவாக நடக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்து:

பிரதமர் மோடி ஐந்தாவதாக ரக்‌ஷா சக்தி எனப்படும் பாதுகாப்பு சக்தி குறித்து பேசினார். இதில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். பாதுகாப்பு தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்க முடியாது என்று கூறிய அவர், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தற்சார்பு அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆறு:

ஆறாவதாக, பசுமை மற்றும் நீல பொருளாதாரம் குறித்து பேசினார். கிரீன் ஹைட்ரோஜன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை உற்பத்தி ஆகியவற்றில், உலகளாவிய அளவில் இருக்கும் வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏழு:

ஏழாவதாக இந்தியாவின் மென்மையான சக்தி (Soft Power) குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இந்தியாவின் இந்த சக்தி மிகவும் பெரியது என்று குறிப்பிட்ட அவர், நம் யோகா மொத்த உலகையும் இணைத்திருப்பதாகவும் நம் நாடுதான்,  யோகா மனிதகுலத்திற்கு ஆற்றல் மூலமாகவும், இந்தியாவில் நம்பிக்கையின் முக்கிய தூணாகவும் மாறி வருகிறது என்றும் கூறினார்.

விக்சித் பாரத் 2047:

இந்த அறிவிப்புகள் யாவும், Viksit Bharat@2047எனும் இலக்கின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் முன்பு, நாட்டை முழுமையாக வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட பொருளாதார நகரமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தின் நான்கு முக்கிய தூண்களாக இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதே போல, இந்தியாவின் வருமானத்தை பெருக்கவும், வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கிலும் இது தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின், தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும் திட்டத்தை மேம்படுத்த, அனைவரும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் நாட்டு  மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES