அமேசான் வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..இதுதான் உலக வளர்ச்சியா?
அமேசானில் Awa எனும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
சமீபத்தில்தான் நாசாவின் வாயேஜர் 1 எனும் விண்கலம், விண்வெளியில் 49 ஆண்டுகள் பயணித்து, பூமியில் இருந்து ஒரு ஒளி நாள் அதாவது 2,600 கிலோ மீட்டர் தொலைவை கடந்து வரலாற்று சாதனை படைத்திருந்தது. இதை கேள்விப்பட்ட பலரும், “மனித இனத்தின் புதிய சாதனை..” என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது அதை கேள்வி கேட்கும் விதமாக, அமேசான் காடுகளில் ஆடைகளின்றி, வெளியுலகுடன் தொடர்பே இல்லாத பழங்குடியின மக்களை பற்றி தெரிய வந்துள்ளது. இதில், நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பிற மனிதர்களுடன் தொடர்பே இல்லாமல் வாழ நினைக்கும் இவர்களின் இருப்பிடத்திற்குள்ளும் ஊடுறுவுவதுதான். விண்வெளிக்கெல்லாம் செல்லும் நாம், நம் உலக மக்கள் அனைவரையும் சம அளவு கோலில்தான் பார்க்கிறோமா? எனும் கேள்வியை இந்த சம்பவம் எழுப்பி இருக்கிறது.
அமேசான் காடுகளில் பழங்குடியினர்..!
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட பழங்குடியினர், அமேசான் மழைக்காடுகளின் விளிம்பில் இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இது, அப்பழங்குடியினரின் இருப்பிடத்தின் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது குறித்த எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
அவா பழங்குடியின மக்கள், தாங்களாகவே முடிவெடுத்து தனியாக வெளியுலகின் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இவர்கள், சமீபத்தில் ஒரு கிராமத்திற்கு வந்து அரசாங்கத்தை தொடர்பு கொண்டிருப்பது வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
அதிகரிக்கும் ஊடுருவல்கள்..!
இந்த கிராமம், Arariboia எனும் பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் அமைந்திருபப்தாக கூறப்படுகிறது. இந்த கிராம மக்களை Guajajara என்று குறிப்பிடுகின்றனர்.
உள்ளூர்வாசிகள் இது குறித்து பேசும் போது, கிராம மக்கள் அந்த பழங்குடியின மக்களுக்கு உணவு கொடுத்ததாகவும் அதை அவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்ப எடுத்து சென்றதாகவும் கூறியிருக்கின்றனர்.
அவா மக்கள், வேட்டையாடி தாங்கள் கொண்டு வருவதை குழுக்களாக சாப்பிடுவார்கள் என்பது தெரிகிறது. ஆனால், சமீப நாட்களாக அவர்கள் இருப்பிடத்திற்கும் சட்டவிரோத மர வியாபாரிகள், வேட்டைக்காரர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாத இவர்கள், தற்போது முதன்முறையாக அரசாங்கத்தை தொடர்புகொள்ள முயற்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பார்க்க எப்படி இருப்பார்கள்..?
இந்த பழங்குடியின மக்கள், ஆடை உடுத்த மாட்டார்கள். நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். கழுத்தில் ஒரு மணி அணிந்திருப்பார்கள். இதில் இருக்கும் ஆண்கள் எப்போதும் ஒரு வில்லும் அம்பும் வைத்திருப்பார்கள்.
அவர்களை சமீபத்தில் நேரில் பார்த்தவர்கள், அந்த குழுவை சேர்ந்த குழந்தைகள், வயதானவர்கள் ரொம்பவே மெலிந்து காணப்பட்டதாக கூறுகின்றனர். பழங்குடியின மக்களுக்கு பொறுப்பாளராக விளங்கும், Funai இந்த சூழலை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது குறித்து பேசும் அதிகாரிகள், தனிமையிலிருந்து வெளிவர அக்குழு எடுத்த முடிவு, "தொடர்பற்ற மக்களின் காடுகள் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, தன்னிறைவு பெற்ற பழங்குடி மக்களை உண்மையான ஆபத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கான ஒரு கவலைக்குரிய அறிகுறியாகும்" என் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | எரிந்த காரில் இந்திய இளைஞரின் உடல்: குறிவைத்து தாக்கப்பட்டாரா?... கனடாவில் பரபரப்பு