வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டி மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியம் மிகவும் குறைந்த அளவில் இருப்பதாகவும், வேலைக்கேற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என இந்த தொடங்கிய இந்த போராட்டம் இப்போது சாலை மறியல், போலீஸ் மோதல், தொழிற்சாலைகள் மூடல் என உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இதனால், உலக ஆடை உற்பத்தி சந்தையிலும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. அதேநேரத்தில் வங்கதேசத்தின் இந்த நிலைமை இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கும், குறிப்பாக திருப்பூருக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
Fresh political unrest grips Bangladesh BNP and Awami League activists clash in Bangladesh's Pabna district; minister blames Awami League, warns of legal action @kripatistic shares more https://t.co/TmLxdxewif
— WION (@WIONews) November 21, 2026
Bangladesh: Garment workers clash with police in Ashulia over minimum wage, dozens of factories declare holidays Read @ANI Story | https://t.co/jfpRef6Cc9 #Bangladesh #Garmentworkers #Protest https://t.co/Xc14evqlaw
— ANI Digital (@ani_digital) November 21, 2026
வங்கதேசத்தில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து தொழிற்சாலை உற்பத்தியையும் ஏற்றுமதியையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மறுபுறம், மாற்று உற்பத்தி மையங்களைத் தேடும் சர்வதேச நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது திரும்புவதால் திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு புதிய வாய்ப்புகல் உருவாகி உள்ளன. வங்கதேசத்தின் தொழிலாளர் போராட்டம் அங்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் திருப்பூருக்கு இது ஒரு புதிய ஏற்றுமதி வாய்ப்பின் தொடக்கமாக அமையும் என்பதுதான் இப்போது எழும் முக்கியக் கேள்வியாகும்.