SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

அமெரிக்காவில், கிரிஸ்ட கெயில் எனும் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் அவர் 2 முறை விஷ ஊசி செலுத்தியும் சாகவில்லை. இது, மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யார் இந்த் கிரிஸ்டா? எதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 01, 2026, 05:57 PM IST | Updated: Oct 01, 2026, 06:08 PM IST
Join

“மரண தண்டனை நாள்: விஷ ஊசியை செலுத்தி விட்டார்கள்..இன்னும் சில நிமிடங்களில் உயிர் பிரிந்து விடும். திக்..திக் திக்..ஒவ்வொரு நொடியும் எப்போது மரணம் வரும் என்கிற பயம் தலை முதல் கால் வரை உடல் முழுவதும் ஆட்கொள்கிறது. திக்..திக்..திக்..ஒரு நிமிடம்..எனக்கு இன்னும் மூச்சு இருக்கிறது, ஆனால் கொஞ்சம் மயக்கமாக இருக்கிறது. எனக்கு ஏற்கனவே விஷ ஊசி செலுத்தி விட்டார்களே..ஏன் இன்னும் உயிர் இருக்கிறது? இன்னொரு விஷ ஊசி செலுத்தப்படுகிறது. ஆனால் ஏன் இன்னும் உயிர் பிரியவில்லை..?” என்பதுதான், இங்கே நாம் பார்க்கப்போகும் கிரிஸ்டா கெயில் பைக் எனும் பெண்ணின் உணர்வாக இருந்திருக்க கூடும். இவர் 2 முறை விஷ ஊசி செலுத்தப்பட்டும் உயிரிழக்காதது ஆச்சரியமான விஷயம் என்றாலும், இவருக்கு விஷ ஊசி செலுத்தும் முன்னரே பல ஆயிரம் பேர், அந்த மரண தண்டனையை எதிர்த்து போராடினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

யார் இந்த கிரிஸ்டா பைக்?

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதிதான் கிரிஸ்டா பைக். 1995ஆம் ஆண்டில், தன்னுடைய 18 வயதில், சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை, கொடூரமான முறையில் சித்தரவதை-கொலை செய்து அதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 1996ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில், மிக இளம் வயதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் எனும் பெயரை பெருகிறார், கிரிஸ்டா பைக். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது, அதன் பிறகு இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இவர் கொலை செய்ததற்கான காரணம் போன்ற பல விஷயங்கள், அமெரிக்காவின் டெனசியில் இப்போது வரை பேசு பொருளாக இருக்கிறது.

கொலை செய்த்தற்கான காரணம் என்ன?

தன்னுடன் படித்த சக மாணவியை, கிரிஸ்டா கொலை செய்தது ஏன்? என்று அவரிடம் விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், தொழிற்பயிற்சி மையத்தில் தான் படித்துகொண்டிருந்த போது, இவர் Tadaryl Shipp என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதில், தன்னுடன் இருக்கும் கொலீன் ஸ்லெம்மர், தன்னுடைய காதலனை கவர முயல்வதாக கூறி, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, கொலீனை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, கொடூரமாக கொலை  செய்திருக்கிறார். பின்னர், அவருடைய மண்டை ஓட்டில் ஒரு பகுதியை, Trophy ஆக அதாவது, கொலை செய்ததன் நினைவு சின்னமாக எடுத்து வைத்துக்கொண்டு, தன்னுடைய பிற நண்பர்களிடம் இவர் காண்பித்ததாக தெரிகிறது.

கிரிஸ்டா பைக்கின் காதலராக சொல்லப்படும் Tadaryl, சம்பவம் நடந்த நாளன்று 17 வயது மட்டுமே நிரம்பியவர். இதனால், அந்த மாகாணத்தின் சட்ட விதிகளின் படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இப்போதும் டென்னசியில் உள்ள Northwest Correctional Complex எனும் இடத்தில் அவர் சிறைக்கைதியாக இருக்கிறார். 30 வருட சிறை தண்டனையை அனுபவித்த பின்னர், அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் பரோலுக்காக விண்ணப்பித்தார். ஆனால், அவர் செய்த குற்றங்களை அடிப்படையாக வைத்து, நீதிமன்றம் அவருக்கு பரோல் வழங்க மறுத்து விட்டது. இதன் பிறகு அவர், 2031ஆம் ஆண்டில்தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும் படிக்க | நேபாளத்தில் மீண்டும் நிலச்சரிவு : 21 பேர் உயிரிழப்பு ; தொடர் கனமழை

கிரிஸ்டா மரண தண்டனை: கிளம்பிய எதிர்ப்பு!

கிரிஸ்டா, இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட போது அவருக்கு வயது 18. சிறு வயதில் இருந்து அவர் தன்னுடைய தாயாரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஆளாக இருந்திருக்கிறார். தொடர்ந்து, அவருக்கு தன்னுடைய வீட்டில் பாலியல் வன்கொடுமைகள், உடல் மற்றும் மன ரீதியாக பாதுகாப்பாக உணராது இருத்தல் உள்ளிட்டவை இருந்திருக்கின்றன. இவை, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறி, அவருக்கான மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி, பலரும் பேரணி நடத்தினர்.

போராட்டக்காரர்கள், பிற வழக்கறிஞர்கள் பலர் கிரிஸ்டாவிற்கு கொடுக்கப்பட்டது நியாயமான தண்டனை இல்லை என்றும் வாதிடுகின்றனர். இந்த குற்றத்தில் மொத்தம் மூன்று பேர் ஈடுபட்டதாகவும்,   இதில் கிரிஸ்டாவிற்கு மட்டும் மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், இது மனித நேயமற்ற செயல் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

மரண தண்டனைக்கு முந்தைய நாள்..

மரண தண்டனை வழங்குவதற்கு முந்தைய நாள், அவருக்கு கடைசி உணவு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பின்பு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். தன்னை Execute செய்யும் போது, அதற்குரிய அதிகாரிகள் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தனக்கு சிறு வயதிலும், சிறையிலும் ஏற்பட்ட எதிர்மறை அனுபவங்களால் ஆண்களை நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

2 முறை விஷ ஊசி செலுத்தியும் இறக்கவில்லை..!

தற்போது 50 வயதாகும் கிரிஸ்டாவிற்கு, செப்டம்பர் 30ஆம் தேதி மரண தண்டனை நாளாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில், அதாவது நேற்று அவருக்கு ஒருமுறை விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது அவர் எதிர்பார்த்தபடி உயிரிழக்கவில்லை. 3 நிமிடம் கழித்து திரையை விலக்கிய போது, அவரிடம் இருந்து குறட்டை சத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மீண்டும் இன்னொரு முறை விஷ ஊசியை செலுத்தியிருக்கிறார்கள். இது, பெண்டொப்ர்பிடல் (Pentobarbital) எனப்படும் நச்சு ஊசியாகும். இந்த ஊசி செலுத்தப்பட்ட போதும், அவர் உயிரிழக்கவில்லை. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இப்படி இருமுறை ஒரு மரண தண்டனை தோற்றுபோனது, பலர் மத்தியில் வினோதமாய் பார்க்கப்படுகிறது. அதையும் தாண்டி, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படப்போகும் அடுத்த தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஊசி ஏன் வேலை செய்யவில்லை என்பது இப்போது பெருங்கேள்வியை எழுப்பியுள்ளது. Executionக்கு முன்பாகவே அவருடைய உடலில், நரம்பை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், மருந்து செலுத்தும் நடைமுறையில் பிரச்சனைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறுக்ன்றனர். மேலும் இந்த விஷ ஊசியின் தரம் குறித்த சந்தேகமும் எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | மிகப்பெரிய எண்ணெய் வயலைத் தாக்கும் ஈரான்.. ஒரு பெரிய போரை நோக்கி நகரும் அபாயம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES