Nepal Landslide: நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, நிலச்சரிவும் ஏறப்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவு காரணமாக 24 பேர் உயரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 14 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
இடைவிடாது பெய்து வரும் மழை நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி உள்ளதுடன், வீடுகளை அடித்துச் சென்று சாலைப் போக்குவரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் குறைந்தது 1,453 பேர் உயிரிழந்ததும், 5000 பேருக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்தே இன்னும் நேபாளம் முழுமையாக மீளாத நிலையில், தற்போது இந்த பாதிப்பும் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதாலலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தொடர் மழையால் பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மணாங், மியாக்தி, பாக்லுங், பர்பத், பால்பா உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு பகுதியில் உள்ள தெராய் சமவெளிப் பகுதிகளில் கடுமையான நீர் தேக்கமும் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளன.
பேரிடரின் தீவிரத்தை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அழற்றில் ஒரு வீடியோவில், வீடுகளுக்கு மிக அருகில் உள்ள பெரிய மலைக்குன்று சில வினாடிகளிலேயே அப்படியே இடிந்து சரிந்து விழுகிறது. இதை பார்த்து மக்கள் அலறி ஓடினர்.
கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நேபாளத்தின் கால்கோட்டில் ஆற்றங்கரையோரம் உள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று, பெருக்கெடுத்து ஓடும் தரம் ஆற்றில் சரிந்து விழுந்தது.
Flooding in Galkot, Nepal, following heavy rainfall has washed away several houses, with no casualties reported. Our prayers are with everyone affected. pic.twitter.com/ekKhDRaca2
— I Love Siliguri (@ILoveSiliguri) September 27, 2026
தொடர்ச்சியான கனமழையால் ஆற்றங்கரையில் அரிப்பு ஏற்பட்டது. கட்டடத்திற்கு அடியில் இருந்த மண் சரிந்தது. வார்டு அலுவலகக் கட்டிடம் உட்பட ஆற்றங்கரையோரம் இருந்த பல சொத்துக்களும் உள்ளூர் உள்கட்டமைப்புகளும் தரம் ஆற்றால் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும் உடனடி எச்சரிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தனிப்பட்ட முறையில் உறுதிசெய்யப்படவில்லை.
காளிகண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சியாங்ஜா மற்றும் குல்மி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய கான்கிரீட் பாலம் அடித்துச் செல்லப்பட்டு இரு மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால் 144 மெகாவாட் திறன் கொண்ட காளிகண்டகி 'ஏ' நீர்மின திட்டத்தின் மிர்கி அணையின் மூன்று மதகுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டு அங்கு மின் உற்பத்த்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மின்கோபுரங்கள் மற்றும் மின் கடத்தும் வழித்தடங்கள் சேதமடைந்ததால் குஷ்மா - நியூ புட்வால் வழித்தடத்தில் 358.2 மெகாவாட் மின் உற்பத்தி உள்பட பல நீர்மின் நிலையங்களில் மின்விநியோகம் முடங்கியுள்ளது.