SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : “வரலாற்றில் இல்லாத வெப்பம்..” ஐ.நா கொடுத்த வார்னிங்! எல் நினோவுக்கு End-ஏ இல்லையா?

எல் நினோ தாக்கத்தால் புவி வெப்பமடைதல் தொடரும் என்று, ஐநா தற்போது எச்சரித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

Written By Yuvashree M
Published: Nov 10, 2026, 10:01 AM IST | Updated: Nov 10, 2026, 10:03 AM IST
Image Credit: El Nino Global Heat Threat | X Page
Join

நவம்பர் 9ஆம் தேதியான நேற்று, துருக்கியில் ஐநா காலநிலை மாற்ற மாநாடு (COP31) நடைப்பெற்றது. இதில், பல அதிர்ச்சிக்குரிய ரிப்போர்ட்களை காண்பித்து ஐநா அதிகாரிகள் பேசியுள்ளனர். இந்த மாநாட்டில் அவர்கள் பேசியது என்ன என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஐநா தெரிவித்தது என்ன?

துருக்கியில் நடைப்பெற்ற இந்த காலநிலை உச்சமாநாட்டில், 2026ஆம் ஆண்டு வரலாற்றிலேயே அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பேசிய ஐநாவின் தற்போதைய பொது செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், எல் நினோவின் தாக்கம் ஏற்கனவே பூமியை அதிகம் வெப்பமடைய செய்துள்ளதாகவும், நாம் இன்னும் பெரிய காலநிலை மாற்றத்திற்கும் நுழைய போகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, புதைப்படிவ எரிபொருட்களில் இருந்து உண்மையான மாற்றத்தை விரைவுபடுத்துவதன் மூலமும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு தேவையனா நிதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதன் மூலமும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு தேவையான நிதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதன் மூலமும் தீவிரமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, இது மனித வரலாற்றிலேயே இல்லாத வெப்பமாக இருக்கும் எனவும் கூறி இருக்கிறார்.

இதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றி, 2026ஆம் ஆண்டிலும், உலகளாவிய வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக இருப்பதும், பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும் தொடர்ந்து கொண்டிருபப்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 12 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் இதுவரை பதிவான மிக வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்றும், இந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

உலக வானிலை அமைப்பின் தலைவர் சொலஸ்டே சௌலோ ஜெனீவாவில் இந்த கால நிலை மாற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இப்போது நாம் காண்பது ‘அள்வீடுகளுக்கு அப்பாற்பட்டது-Off The Charts' எனும் சொற்றொடருக்கு புதிய பொருளை தருவதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது நிலவும் மிக தீவிரமான எல் நினோ நிகழ்வு, அடுத்த ஆண்டு வரை அதிக வெப்பத்தையும் தீவிர வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார். 2027ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு புதிய சாதனையை இது படைக்கலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையில்னான உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை, தொழில்மயமாதலுக்கு முந்தைய காலத்தின் சராசரியை விட சுமார் 1.47 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும், 1950ஆம் ஆண்டுக்கு பிறகு மிக வலிமையானதாக, இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ கருதப்படுகிறது. இதனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த வெப்ப அளவை இது அதிகரிக்க செய்யலாம் என கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டு, இதுவரை பதிவான மிக வெப்பமான நான்கு ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என ஆரம்பக்கட்ட தரவுகள் தெரிவிப்பதாக உலக வானிலை அமைப்பின் காலநிலை தகவல் பிரிவு தலைவர் ஜான் கென்னடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எல் நினோ இன்னும் உருவாகி வருவதால், இறுதியான புள்ளி விவரங்கள் வருவதற்குள்லாகவே நாம் மிகவும் உயர்ந்த வெப்பநிலையை நெருங்கியிருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க | அமாரா, தேவி, சாரதி.... : உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் கலக்கும் AI அவதாரங்கள்

எல் நினோ எப்படி நிகழ்கிறது?

இயற்கையாகவே நிகழும் இந்த வானிலை நிகழ்வு, பெருங்கடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றுகிறது. இந்த ஆண்டு பெருங்கடல் வெப்பநிலை, இதுவரை அளவிடப்பட்டதிலேயே மிக அதிக வெப்பமான நிலையை எட்டி இருப்பதாக சௌலோ சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தொடர்ந்து, வெப்ப மண்டல பசிபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட, அரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது, எல் நினோ நிகழ்வு அறிவிக்கப்படுவதாகவும், ஆனால் தற்போது முதல் ஜனவரி மாதம் வரை இந்த வெப்பநிலை சராசரியை விட 3.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் என்று உலக வானிலை அமைப்பு கணித்திருக்கிறது.

கடல் மட்டம் உயர்வு?

உலகளாவிய கடல் மட்டமானது, இதுவரை பதிவான அளவிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டியிருப்பதாகவும், நன்னீர் இருப்பு குறித்த தகவல்களையும் உலக வானிலை அமைப்பு வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பசிபிக்கின் வெப்பமண்டல பகுதியில், தற்போது முதல் ஜனவரி மாதம் வரை, வெப்பநிலை சராசரியை விட 3.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் என்று, உலக வானிலை ஆய்வு அமைப்பு கணித்திருக்கிறது.

இந்த கணிப்பில், கடல் மட்டம் உயர்தல், நன்னீர் இருப்பு குறைவது உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கூடவே, பனிப்பாறைகள் தொடர்ந்து பின்வாஙி வருகின்றன என்றும் இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

2025ஆம் ஆண்டில், பனி இழப்பின் அளவு அதிகமாக இருந்தது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டும் சொல்லப்பட்டது. அதாவது அந்த ஆண்டில்,ஒவ்வொரு நொடியும் ஐந்து ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய அளவுக்கு பனி உருகியுள்ளதாக ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது.

அதே சமயத்தில், ஏற்கனவே மனிதர்களான நாம் நம்முடைய வானிலை அமைப்புகளை தீவிரமடைய செய்து கொண்டிருக்கிறோம் என்றும், இதில் எல் நினோ நிகழ்வு அபாயத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் சௌலோ தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, வெப்ப அலைகள், வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் பெருமழை போன்றவை நாம் இதுவரை கண்டிராத வேகத்தில் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்தார்.

ஒரே ஒரு பாசிடிவான விஷயம்..!

இத்தனை ஆபத்துகளை ஐநா லிஸ்ட் போட்டாலும், ஒரே ஒரு பாசிடிவான விஷயத்தையும் கூறியிருக்கிறது. பல வகையான இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை, உலக வானிலை ஆய்வு அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. 2015ஆம் ஆண்டிலி, 55 நாடுகளாக இருந்த இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு 136 நாடுகளாக உயர்ந்துள்ளதாகவும், இத்தகைய எச்சரிக்கையானது, அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான உலகளாவிய கண்காணிப்பு, தரவு சேகரிப்பு மற்றும் முன்னறிவிப்பு பணியில் கூடுதல் முதலீடுகலை உறுதி செய்யுமாறு, COP 31 மாநாட்டை அந்த அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க | Explained : சீன பெண் உளவாளியுடன் உறவு வைத்த ட்ரம்ப் நண்பர்! கசியும் அமெரிக்க ரகசியம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES