SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : El Nino-வை அடுத்து La Nina தாக்குமா? இதனால் ஏற்படும் மாற்றம் என்ன?

உலகின் பல்வேறு பகுதிகள், El Nino தாக்கத்தால் மழை குறைவாக பாெழிவது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எற்பட்டுள்ளன. இந்த நிலையில், எல் நினோவை அடுத்து லா நினா தாக்கம் இருக்குமோ என அஞ்சப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 30, 2026, 08:23 PM IST | Updated: Oct 30, 2026, 08:28 PM IST
Join

காலநிலை குறித்த விவாதங்களில், ‘எல் நினோ’ தான் இப்போது முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. வெயில் காலத்தின் போதும், வெயிலுக்கு பிறகும் வெப்பம் அதிகரித்தல், அதிக மழை பொழிவு, குறைவான மழைப்பொழிவு என காலநிலை ஆட்டம் கண்டுள்ளதற்கு இந்த எல் நினோ முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ‘கண்ணா இது சும்மா ட்ரெயிலர் தான்மா..மெயின் பிக்சரே இனிமேதான்..’ என்பது போல எல் நினோவின் உச்சநிலை இனிதான் அடையும் என்றும், இதன் தாக்கம் 2027 பிப்ரவரி வரை இருக்கும் என்றும் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இங்குதான் நம் அனைவருக்கும் ஒரு கேள்வி எழுகிறது. சர், எல் நினோ முடிந்ததற்கு பிறகு என்ன நடக்கும்? என்பதுதான் அது.

El Nino vs La Nina :

3-7 வருடத்தில் ஏற்படும் எதிர்மாறான வானிலை மாற்றங்கள்தான் எல் நினோவும் லா நினாவும். இதை ஒன்றினைத்து பலரும் ENSO என குறிப்பிடுகின்றனர். El Nino என்பது ஸ்பேனிஷ் வார்த்தை ஆகும். இதை தமிழில் மொழி பெயர்த்தால் ‘சின்ன பையன்’ என பொருள். அதே போல La Nina என்பதும் தமிழில் மொழி பெயர்த்தால், ‘சின்ன பெண்’ என்றாகும்.

இவை இரண்டும் பசிபிக் பெருங்கடலில்தான் நிகழ்கின்றன. இருப்பினும் இதன் தாக்கம் உலகளவில் தெரிகிறது. இதன் தாக்கமாகத்தான், உலகளவில் ஏற்படும் வானிலையிலும் மாற்றம் உண்டாகிறது. பசிபிக் பெருங்கடலில் ஒரு சின்ன வெப்பநிலை அளவு மாறினாலும், அது இந்தியாவில் பெருமழைக்கு காரணமாக இருக்கலாம். அது மட்டுமல்ல, ஆப்ரிக்கா உள்ளிட்ட சில உலகின் முக்கிய பகுதிகளிலும் புயல் பாதிப்பு ஏற்படலாம். இந்த வருடத்தின் El Ninoதான் கடந்த 10 ஆண்டுகளில் அதிக தாக்கத்தை கொண்டதாக இருக்கின்றன. இதனால் உலக விஞ்ஞானிகள் அடுத்தௌ என்ன நடக்குமோ என்று இதனை உற்றுநோக்கி வருகின்றனர்.

லா நினா என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் கடல் நீர் வழக்கத்தை விட குளிராக மாறும் ஒரு இயற்கை வானிலை நிகழ்வாகும். இது எல் நினோ நிகழ்வுக்கு முற்றிலும் எதிர்மறையான நிலையாகும்.

பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் நீரின் வெப்பநிலை இயல்பை விட குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேல் குறையலாம். லா நினா, பொதுவாக இந்தியாவிலும் தமிழ்நாடிட்லும் நல்ல பருவமழையை ஏற்படுத்த உதவுகிறது.

எல் நினோ - லா நினா எப்படி காலநிலையை மாற்றுகின்றன?

எல் நினோ வழக்கமாக வெப்பகாலம் என சொல்லப்படுகிறது. இது, வழக்கமான கிழக்கு நோக்கிய வர்த்தகக் காற்றுகள் பலவீனமடைகின்றன அல்லது திசை மாறுகின்றன. இதனால், வெப்பமான மேற்பரப்பு நீர் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் முழுவதும் கிழக்கு நோக்கி நகர்கிறது.

இதன் குளிர்ச்சி வடிவமான லா நினா, இயல்பை விட வலுவான காற்றுகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தக் காற்றுகள், வெப்ப நீரை ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள மேற்கு பசிபிக் பகுதிக்கு வெகுதூரம் தள்ளுகின்றன, அதே நேரத்தில் குளிர்ந்த, ஊட்டச்சத்து நிறைந்த நீர் தென் அமெரிக்காவின் கடற்கரையோரமாக மேல்நோக்கிப் பாய்கிறது.

மேலும் படிக்க | 53 vs 48... தேவை 61.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை இஸ்ரேலை ஆளப்போவது யார்? -தீர்மானிக்கும் அரபு கட்சிகள்

எல் நினோவும் லா நினாவும் மாறி மாறி வர வாய்ப்பிருக்கிறதா?

ENSO சுழற்சியின் ஒரு அங்கமாக எல் நினோவும் லா நினாவும் மாறி மாறி வரலாம். ஆனால், இதுவரை கணிக்கப்பட்டுள்ள கணிப்புகளின் படி அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த கணிப்புகள் மாறும் போது காலநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு ஒரே நிலை மீண்டும் மீண்டும் வரலாம். உதாரணத்திற்கு La Nina மீண்டும் மீண்டும் வருவது.

பெரும்பாலும், எல் நினோதான் அடிக்கடி லா நினாவை விட அதிகமாக வருகிறது. உலக சுகாதார மையத்தின் கூற்றின் படி, 2025ஆம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் வலுவடைந்த லா நினோ உருவானதாகவும், அது 2026ஆம் ஆண்டின் முந்தைய சில மாதங்களில் மறைந்து போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால், 2026ஆம் ஆண்டின் மத்தியிலேயே, இது மிக் வலுவான எல் நினோவாக உருவானது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் முகப்பின் (NOAA) ஆய்வாளர் நதானியல் ஜான்சன், 2026ஆம் ஆண்டு தன்னுடைய வானிலை குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தற்போதைய எல் நினோ ENSOவின் சம நிலைக்கு, வரும் 2027 வெயில் காலத்தில் அல்லது வசந்த காலத்தில் வழிவகுக்கலாம் என்று கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த கணிப்பில் குறிப்பிட்டுள்ள காலம் நீட்டவும் படலாம், குறைவாகவும் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லா நினாவால் இந்தியாவிற்கு என்ன தாக்கம் ஏற்படும்?

2023ஆம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ காரணமாக இந்தியாவின் பருவமழை 6% ஆக குறைந்தது. அடுத்த ஆண்டிலும் கூட இதன் தாக்கம் நீட்டித்தது. ஆனால், அதே ஆண்டில் ஜூன் மாதத்திற்குள் எல் நினோ முடிந்து லா நினோ தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அது போலவே லா நினா காரணமாக தென் தீபகற்ப மற்றும் மத்திய இந்தியாவில் இயல்பை விட அதிக மழையும், வடமேற்கு இந்தியாவில் சாதாரண மழையும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் சராசரிக்கும் குறைவான மழையும் பதிவானதாக தெரிகிறது. இதனால் வேளான்மைக்கும் பயனுள்ளதாக இருந்தது. இனி வரும் காலத்திலும் லா நினா வருவதால் இந்தியாவிற்கு நல்ல மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES