• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

பின்லாந்து அரசு, சிங்கிளாக இருப்பவர்களை Blind Date ஆக ட்ரிப்பிற்கு அழைத்து செல்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 30, 2026, 06:00 PM IST|Updated: Oct 30, 2026, 06:09 PM IST
joinshare
சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..
Image Credit: Finland Blind date | பினலாந்து சிங்கிளாக இருப்பவர்களுக்கு ட்ரிப்

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

2

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

3

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படம்! இயக்குநர் யார்..? இதோ முழு விவரம்

4

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

5

53 vs 48... தேவை 61.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை இஸ்ரேலை ஆளப்போவது யார்? -தீர்மானிக்கும் அரபு கட்சிகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நீங்கள் சிங்களாக இருக்கும் ஒரு ஆளாக இருந்தால், 'Date' எனும் வார்த்தையை கேட்டவுடன் ‘எப்போ? எங்கே? எப்படி?’ எனும் ஆர்வம் உடனடியாக எழலாம். சிங்கிளாக இருப்பவர்களுக்கு மறுபக்கமும் இருக்கிறது. அனைத்து டேட்டிங் செயலிகளையும் பதிவிறக்கி, Left, Right ஸ்வைப் செய்து, "Hi-Bye" என்று பேசி, அதில் எதுவும் செட் ஆகாமல் ரொம்பவே மனதளவில் களைப்பானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பின்லாந்து அரசின் திட்டம் உண்மையாாகவே ஒரு வரபிரசாதம்தான்.

பின்லாந்து அரசின் திட்டம்!

ஒரு காதலுக்காக நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள்? பின்லாந்து வரை போவீர்களா? அதுதான் உலகின் மிகவும் மகிழ்ச்சியான தேசம் என்பது தெரியும், ஆனால் அங்கு சென்றால் காதலையும் கைப்பிடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது பின்லாந்து அரசு அப்படியொரு அறிவிப்பைதான் வெளியிட்டுள்ளது.

பின்லாந்து அரசு, சர்வதேச அளவில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு என்று ஒரு இலவச ட்ரிப்பை ஏற்பாடு செய்கிறது. இந்த ட்ரிப்பிற்கு பெயர், Finnish Dinner Date என்பதாகும்.

ஒரு கேண்டில் லைட் டின்னர், இடையில் போன் பார்க்காமல், இருவரும் மொருவருக்கொருவர் மட்டும் கண்ணோடு கண் பார்த்து அந்த அழகிய பிரம்மாண்ட உணவகத்தில் பேசிக்கொண்டிருப்பது போல..கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கிறது? இதற்கிடையில் ஸ்னோ, அந்த உள்ளூருக்கான சிறந்த உணவுகள், பேசுவதற்கான வாய்ப்புகள் எல்லாமே கிடைக்கும்.

மேலும் படிக்க | இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய திட்டம்: எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கும் நெதன்யாகு?

இதற்கு எப்படி விண்ணப்பிப்பது?

பின்லாந்து அரசு, இதற்கு விண்ணப்பிப்பது குறித்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. அதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் “ஒரு டின்னர் டேட்டில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏன் அதை செய்வீர்கள்?” என்பதை விவரித்து ஒரு வீடியோவை ஆங்கிலத்தில் பேசி இன்ஸ்டாகிராம், டிக்டாக் அல்லது யூடியூப் உள்ளிட்ட தளங்களில் #FinnishDinnerDate எனும் ஹேஷேக்கை உபயோகித்து @ourfinland எனும் இன்ஸ்டா பக்கத்தை டேக் செய்ய வேண்டும்.

பின்னர், FinnishDinnerDate.com எனும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த லிங்கை உங்கள் போஸ்டில் இணைக்க வேண்டும்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by VisitFinland (@ourfinland)

இதனை, நவம்பர் 10, 2026ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.59 (Finnish Time)மணிக்குள்ளாக முடித்திருக்க வேண்டும்.

இதிலிருந்து மொத்தம் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் அனைத்து செலவுகளும் ஏற்கப்பட்டு 4 நாட்கள் பின்லாந்தில் ட்ரிப் செல்லலாம். அவர்கள் இங்கு தங்கும் இந்த 4 தினங்களில், பல்வேறு ஆக்டிவிட்டீஸும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 8 பங்கேற்பாலர்களை Helsinki எனும் இடத்திற்கு இந்த அரசு அனுப்பி வைக்கும். அதே போல பிற 8 பேரை, Tampere எனும் இடத்திற்கு அனுப்பி வைபர். இதில், உள்ளூரில் இருக்கும் 2 சிங்கிள் நபர்கள் க்ரூப்பாக நடக்கும் டின்னரில் கலந்து கொள்வர். உங்கள் பார்ட்னர் யார் என நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு, பல சர்ப்ரைஸ்கள் காத்துக்கொண்டுள்ளது.

எப்போது நடக்கும்?

2027 பிப்ரவரி 9ஆம் தேதி இந்த ட்ரிப் நிகழ்கிறது. இது, உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 53 vs 48... தேவை 61.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை இஸ்ரேலை ஆளப்போவது யார்? -தீர்மானிக்கும் அரபு கட்சிகள்

Add Zee News as a Preferred Source
TAGS:
World