• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன், தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய போட்டியாளர் ஒருவருக்கு ரெட் காார்ட் வழங்க வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 30, 2026, 06:57 PM IST|Updated: Oct 30, 2026, 07:03 PM IST
joinshare
பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!
Image Credit: Bigg Boss 10 Tamil Red Card | பிக்பாஸ் 10 தமிழ் ரெட் கார்ட்

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

2

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

3

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

4

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படம்! இயக்குநர் யார்..? இதோ முழு விவரம்

5

அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு கிரீன் சிக்னல்? பசும்பொன்னில் ஸ்டாலின் சொன்ன பதில்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் மக்களிடையே முக்கிய இடத்தை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில், டிடிஎஃப் வாசன் சமீபத்தில் வைல்ட் கார்ட் மூலம் உள்நுழைந்தார். இவர் வீட்டிற்குள் வந்ததில் இருந்து கேம் சற்று மாறியுள்ளது. அதே சமயத்தில், அவரை தாக்கியதால் ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

குக்கர் மூடியால் தாக்கிய போட்டிாளர்!

பிக்பாஸ் போட்டியில் அவினாஷ் மற்றும் அவரது தங்கை அக்‌ஷிதாவின் டுயோ குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். அக்‌ஷிதாவும் தன்னுடைய கேமில் கவனத்துடன் இருக்கிறார். இந்த சமயத்தில்தான், அவருக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் இடையே நடந்த ஒரு மோதல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸில் சமீபத்தில் நடந்த ஒரு உடல் தகுதியுடை டாஸ்கில், வாசனை அக்‌ஷிதா குக்கர் மூடியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், வாசன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், அவருடைய ரசிகர்கள், இது குறித்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு கண்டிப்பாக அக்ஷிதாவிற்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இருப்பினம் வார இறுதியில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு சிலர், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படாது என்றும், பிக்பாஸ் குழுவே அவரை எவிக்ட் செய்து அவரை வெளியேற்றி விடுவர் என்றும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | இறுதி சடங்குகளில் இளையராஜா ஏன் கலந்து கொள்வதில்லை? அவரே சொன்ன காரணம்!

டிடிஎஃப் வாசனின் ஆதரவாளராக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், கண்டிப்பாக அக்ஷிதாவிற்கு ரெட் கார்ட் வழங்க வேண்டும் என்று கூறி பதிவிட்டிருக்கிறார்.

இதுவரை ரெட் கார்ட் வாங்கியவர்கள்..

பிக்பாஸில் இருந்து இதுவரை வெகு குறைவானர்கள் மட்டுமே ரெட் கார்ட் வாங்கி இருந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஏதேனும் ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்பதை பிக்பாஸ் குழு கடைப்பிடித்து வருகிறது. நடிகர் மகத் ரெட் கார்ட் வாங்கியதை அடுத்து, சீசன் 7ல் நடிகர் பிரதீப் ரெட் கார்ட் வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதன் பிறகு, கடந்த 9வது சீசனில் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ரெட்கார்ட் வாங்கினர். சக போட்டியாளர் சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டதற்காகவும், வெளியில் இவர்களுக்கு இருந்த எதிர்ப்பை காரணமாக வைத்தும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களுக்கு இருவரும் சியர் அப் செய்தனர்.

டிடிஎஃப் வாசனின் கேம் ப்ளானா இருக்குமோ?

பிக்பாஸ் 10 நிகழ்ச்சிக்குள் டிடிஎஃப் வாசன் நுழைந்ததில் இருந்து, அவரை பிறர் மட்டம் தட்டுவது வழக்கமாக இருந்தது. அதாவது, அவருக்கு வீக் பாய்ண்ட் எது என்று கண்டு பிடித்து அதில் அடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருந்தனர். இதை வைத்து, அவரை ட்ரிகர் செய்து, அவரை வெளியேற்ற வேண்டும் எனவும் நினைத்தனர். அதற்கு ஏற்றார் போல டிடிஎஃப்பும் தன் சக போட்டியாளர்களான அவினாஷ், ஜேசன் உள்ளிட்டாேருடன் சண்டை வரை சென்றார். ஆனால் அது கைகலப்பாக மாறாமல் அவர் பார்த்துக்கொண்டார். இப்போதும் அது தொடர்ந்தாலும், அவரை அக்ஷித முதன்முறையாக தாக்கியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை அக்ஷிதாவை ட்ரிகர் செய்தது, டிடிஎஃபின் கேம் பிளானாக இருக்க கூடுமோ எனும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கும் படம்! இயக்குநர் யார்..? இதோ முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Bigg Boss