SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மரண தண்டனையில் இருந்து தப்பித்த இலங்கை தமிழர்.. சவுதி அரேபியா அரசு எடுத்த முடிவு.. பின்னணி என்ன?

Sivarasa Anojan Case Explained: சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்புவார் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளாது. எனவே, யார் இந்த சிவராசா அனோஜன்? இவர் மீது என்ன வழக்கு பதியப்பட்டது என்பது குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 12, 2026, 03:33 PM IST | Updated: Nov 12, 2026, 04:29 PM IST
Join

Sivarasa Anojan Case Explained:  பேஸ்புக்கில் இந்து கடவுள் குறித்து சர்ச்சையாக பேசிய ஒருவரிடம் விவாதிக்கும்போது, முகமது நபி குறித்து  இலங்கை தமிழர் சிவராசா அனோஜா அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் கருத்தை பலர் சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா அரசு இலங்கை தமிழரான அனோஜனுக்கு மரண தண்டனை விதித்தது தீர்ப்பளித்தது.  தற்போது இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.

என்ன பிரச்னை?

இலங்கையில் கடந்த ஜூன் மாத இறுதியில், பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு நாட்டின் வடக்கு பகுதியில் இருந்து குழு ஒன்று ஆன்மீக யாத்திரையின் சென்றிருக்கிறது. அப்போத போது நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த பாத யாத்திரையின்போது, பக்தர்களைப் பின்தொடர்ந்து  ஒரு நாயை வந்து கொண்டிருந்தது. அங்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் நாயை உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

சுப்பிரமணியன் என்று அழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரை சென்றவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள். இந்த நாய் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நபர் நாய் மீது தாக்குதல் நடத்தும் புகைப்படம், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இது இணையவாசிகள் மத்தியில் கடும் விவாதத்தையும் சண்டையையும் ஏற்படுத்தியது.    இந்த விஷயம் இலங்கையில் பெரும் பிரச்னையாக வெடித்தது.  

குறிப்பாக, நாயை எட்டி உதைத்த இஸ்லாமிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து, பொதுமக்களிடம் தான் அறியாமல் செய்யததாக கூறி, பகிரங்க மன்னிப்பு கோரினார்.

மேலும் படிக்க: உலகம் முழுவதும் பரவும் புதிய கொரோனா PJ.2.1 வைரியண்ட்.. WHO தீவிர கண்காணிப்பு -அறிகுறிகள் என்ன?

அனோஜன் வெளியிட்ட பதிவு

இந்த சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அப்போது, இந்து மத கடவுளை தவறாக பிரதிபலிக்கும் வகையில் ஒருவர் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். இந்த கருத்துக்கு அனோஜன் என்பவர் பதிலளித்தார். அனோஜன் முகமது என்பவர் முகமது நபியை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கமெண்ட் ஒன்றை வெளியிட்டார்.

கமெண்ட் வெளியிட்ட சிறுநேரத்திலேயே அதை அனோஜன் நீக்கினார். ஆனால், அனோஜன் வெளியிட்ட கமெண்டை பலரும் ஸ்கிரின் ஷாட் எடுத்தனர். பலர் அதனை சவுதி அரேபியாவிற்கு அனுப்பினர்.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து, சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன்  அந்நாட்டு போலீசார் கைதாகினார்.  

சவூதி அரேபியாவில் அனோஜன் பணிபுரிந்த நிறுவனத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் இலங்கையைச் சேர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்டதாக அனோஜனின் சகோதரர் தெரிவித்ர். சவூதி அரேபியாவில் உள்ளவர்களுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. இலங்கையைச் சேர்ந்த தனிநபர்கள்தான் என் சகோதரர் பணிபுரிந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல்களை அனுப்பினர் என கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து சவுதி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அனோஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரது தனிப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரது சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அந்த இளம் தொழிலாளிக்கு, முகநூல் கருத்துக்காக, ஜூலை 15 அன்று அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூன்று மில்லியன் சவூதி ரியால்கள், அதாவது சுமார் 800,000 டாலர் அபராதமும் விதித்தது.  

மேலும் படிக்க: சவுதியில் ஷாக்! திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண்.. 100 கசையடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

5 ஆண்டு சிறை டூ மரண தண்டனை

அனோஜூக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை குறைக்கக் கோரி அவர் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் சவூதி அரசு வழக்கறிஞர்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். நாட்டின் இணையவழிக் குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்குப் பதிலாக, அனோஜன் மீது ஷரியா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

செப்டம்பர் 17ஆம் தேதி நீதிமன்றம் அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று, அவரது தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்து தீர்ப்பளித்தது. இது அனோஜன் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், வி. ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் செப்டெம்பர் 24 அன்று சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு கருணை கோரி கடிதம் எழுதி இருக்கின்றனர்.  அந்தச் சம்பவம் அனோஜனின் இயல்பான குணம் அல்ல என்றும், அவர் வேண்டுமென்றே அத்தகைய குற்றத்தைச் செய்ய எண்ணவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இலங்கை தமிழர் விடுதலை

இந்த நிலையில், அனோஜன் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட சிவராசா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இலங்கை வெளியூறவுத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார்.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், மற்ற தண்டனையில் இருந்து அவர் கடந்த நவம்பர் 9ஆம் தேதி விடுவித்தது சவுதி அரேபியா அரசு. இதனை அடுத்து, அனைத்து வழக்குகளில் இருந்து அனோஜன் விடுதலையான நிலையில், இன்னும் சில நாட்களில் அனோஜன் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து, அனோஜன் குடும்பத்தினர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) தகவல்படி, சிவராசவின் குடும்ப உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து, அவரது முயற்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். சந்திப்பின் போது, ​​எல்லா நேரங்களிலும் இலங்கை குடிமக்களுக்காகக் குரல் கொடுப்பது தனது பொறுப்பு என்று ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்தார். 

மேலும் படிக்க: சீன பெண் உளவாளியுடன் உறவு வைத்த ட்ரம்ப் நண்பர்! கசியும் அமெரிக்க ரகசியம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES