• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..

இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..

கேரளாவின் எர்ணாக்குளத்தை சேர்ந்த ஜாய் எனும் பெண் ஒருவர், கனடாவில் லாட்டரி வென்றுள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 24, 2026, 16:09 IST|Updated: Nov 24, 2026, 16:19 IST
joinshare
இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..
Image Credit: Indian Woman Woman Kerala Lottery | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..

இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..

2

தமிழகத்தில் நவம்பர் 27 வரை கனமழை வெளுத்து வாங்கும்! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

3

Explained | ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியா CEO ஆனது எப்படி? சீன காதலி எங்கே?

4

CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

5

Explained: உடல்நலக்குறைவு, மகப்பேறு... இனி விண்ணப்பிக்காமலேயே பணம் கிடைக்கும்!! ESIC புதிய விதிகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

“அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆடர்..” என்று நம்மில் ஒரு சிலருக்குதான் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். அப்படி கேரள பெண் ஒருவருக்கு ஓஹோவென செம லக் அடித்துள்ளது.

5 மில்லியன் டாலர்கள் ஜாக்பாட்!

கேரளாவை சேர்ந்த ஜாய் எனும் பெண், கனடாவில் எட்மாண்டன் எனும் இடத்தில் வசித்து வருகிரார். இவர், சில நாட்களுக்கு முன்பாக Lotto 6/49 லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். இதில், இவருடைய லாட்டரி டிக்கெட்டின் 6 டிஜிட் நம்பரும் தேர்ந்தெடுக்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டின் நம்பராக இருந்துள்ளது. எனவே இந்த பெண்ணிற்கு , சுமார் 5 மில்லியன் டாலர்கள் லாட்டரி பணமாக கிடைத்திருக்கிறது.

அக்டோபர் 21ஆம் தேதி சினேகா ஜாய் எனும் இந்த பெண், லாட்டரியை வென்றுள்ளார். இவர் லாட்டரியில் வென்ற அந்த பணம், சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தொகை, இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 32 கோடி ஆகும்.

எப்படி செலவு செய்யப்போகிறார்..?

தான், அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை சினேகா ஜாய் இப்போதே முடிவு செய்து விட்டார். தன் வீட்டிற்காக வங்கியிருக்கும் கடனை முதலில் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கும் அவர், அதன் பிறகு அந்த பணத்தை வைத்து தன் குடும்பத்தினருடன் உலகம் சுற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | 2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

முதல் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது..?

தான் லாட்டரியை வென்ற அந்த தருணம் எப்படி இருந்தது என்று தெரிவித்த ஜாய், தான் வெற்றி பெற்று விட்டோம் என்பதை நம்பவே முடியவில்லை என்றும், முதலில் ஷாக் ஆனதாகவும், பின்னர் சந்தோஷப்பட்டதாகவும் அதன் பிறகு நிம்மதி உணர்வு பிறந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு வரும் லாட்டரி பணத்தில் கொஞ்சம் தன் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சினேகா ஜாய்..?

சினேகா ஜாய், கேரளாவின் எர்ணாக்குளத்தில் உள்ள வெங்கூர் எனும் பகுதியை சேர்ந்தவர். அவர், அந்த ஊரின் காங்கிரஸ் தலைவரான பிபி ஜாய் என்பவரின் ஒரே மகள் என கூரப்படுகிறது. இவரது தாயார் பெயர் ஜாலி ஜாய். தன் கணவர் விஜில் வர்கீஸுடன் 5 வருடத்திற்கு முன்பாக, சினேகா ஜாய் கனடாவின் எட்மாண்டன் நகருக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

வெளிநாட்டிற்கு குடிபெயரும் முன்பு, உள்ளூர் அரசியலில் சினேகா ஜாய் ஈடுபட்டுள்ளார். 2020ஆம் ஆண்டில் இவர் வெங்கூர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் லாட்டரியை வென்றிருப்பதால், அவர் குறித்து சமூக வலைதளம் முழுக்க பலரும் பேசி வருகின்றனர்.

நெட்டிசன்கள் பேசிக்கொள்வது என்ன..?

ஜாய், சுமார் 5 மில்லியன் டாலர்களை லாட்டரியில் பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதிர்ஷ்டத்தால் இந்த அதிசயம் நடந்ததாக ஒரு சிலர் கூற, ஒரு சிலர் இந்த லக்கிற்கு பின் பல உறவினர்கள் இவருடன் பாசம் காட்ட முயல்வார்கள் என தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், இந்தியாவில் இதற்கு விதிக்கப்படப்போகும் வரி குறித்தும் பேசி வருகின்றனர்.

மேலும் படிக்க | திடீரென வைரலாகும் முத்தையா முரளிதரன் மனைவி! 46 வயதில் இப்படியா? வைரல் போட்டோஸ்..

Add Zee News as a Preferred Source
TAGS:
World