• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /நிதி நெருக்கடி.. சாப்பாட்டுக்கே கஷ்டம்! விந்தணு உறுப்பை விற்கும் அவலம்.. கண்ணீர் விடும் மக்கள்

நிதி நெருக்கடி.. சாப்பாட்டுக்கே கஷ்டம்! விந்தணு உறுப்பை விற்கும் அவலம்.. கண்ணீர் விடும் மக்கள்

Iran Financial Crisis: நிதி நெருக்கடி காரணமாக ஈரான் மக்கள் கிட்னி, கண்கள், விதைப்பை போன்றவற்றை விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போர் சூழல் காரணமாக, ஈரானில் கடுமையாக நிதி நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில், கிட்னி விற்றும் கூட அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் நிலவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 16:48 IST|Updated: Nov 16, 2026, 17:59 IST
joinshare
நிதி நெருக்கடி.. சாப்பாட்டுக்கே கஷ்டம்! விந்தணு உறுப்பை விற்கும் அவலம்.. கண்ணீர் விடும் மக்கள்
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Iran Financial Crisis: மத்திய கிழக்கில் போர் பதற்றம் இருந்து வருகிறது.  ஈரானில் பல மாதங்களாகவே போர் பதற்றம் இருந்து வருகிறது. ஈரான் - அமெரிக்கா  - இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது. அதோடு  இல்லாமல் அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால், ஈரான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. போர் சூழல் காரணமாக அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.  

நிதி நெருக்கடியில் ஈரான்  மக்கள்

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் சவாலாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். நிதி நெருக்கடியில் இருந்து மீள ஈரான் மக்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   மே மாதம் இறுதியில் இருந்து அக்டோபர் மாதம் கடைசி வரை ஒரு டெலிகிரம் சேனலில் 600க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்கள் உடல் உறுப்பு விற்பனை தொடர்பாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விளம்பரங்களில் கிட்னி, எலும்பு மஜ்ஜை, விதைப்பை, கருவிழி விற்பனை தொடர்பான விளம்பரங்கள்  இருந்துள்ளன. சிலர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பணம் திரட்டுவதற்காக பல உடல் பாகங்களை விற்கத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மகளுக்கு தெரிந்தே பிற பெண்களுடன் காதல் வளர்த்த ஜென்சன் ஹுவாங்? வெளிவந்த உண்மை!

விந்தணு உறுப்பு, கண்களையும் விற்கும் அவலம்

வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும், வீடுகளை இழப்பதைத் தவிர்க்கவும் தொழிலாளர்கள் உடல் உறுப்புகளை விற்பனை முன்வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில்  கிட்னி விற்பனை தொடர்பான விளம்பரங்கள் 498 இருந்துள்ளன. எலும்பு மஜ்ஜை விளம்பரங்கள் 279 விளம்பரங்கள், கல்லீரல் விற்பனை 51 விளம்பரங்கள், விதைப்பை விற்பனை 15 விளம்பரங்கள், கருவிழி விற்பனை 2 விளம்பரங்கள் இருந்துள்ளன.  

மேலும் படிக்க: மீண்டும் என்விடியாவின் CEO ஆகிறாரா ஜென்சன் ஹுவாங்? எலான் மஸ்க் ஆதரவுடன் தீவிர முயற்சி!!

மேலும், 142 விளம்பரங்களில் சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை இரண்டும் விற்பனைக்கு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. 26 விளம்பரங்களில் சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மூன்றயும் விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விளம்பரங்கள் மூலம் அந்நாட்டு எந்தளவுக்கு வறுமையிலும், கடனிலும் இருக்கின்றன என்பதை காட்டுகிறது.

தனது மகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தனது முக்கிய உறுப்புகளை கூட விற்க தயாராக இருப்பதாக ஈரான் நாட்டைச்  சேர்ந்த ஒருவர் கூறினார்.  மற்றொருவர், ஆடை விற்பனை செய்பவராக அவர், நிதி நெருக்கடியால் கடன் அதிகமானதாக கூறினார். இதனால், ஒரு உறுப்பை விற்பது தனது கடன்களில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது திருப்பிச் செலுத்த உதவும் என்று அவர் நம்பினார். மற்றவர்கள் அடிப்படை செலவுகளை சமாளிக்க ஒரு உறுப்பை விற்க தயாராக இருப்பதாக கூறினார். 

மருத்துவமனையில் நிதி நெருக்கடிகள் காரணமாக மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  விலை இரத்த வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. இதில் அரிதான இரத்த வகைகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. அதாவது, ஓ பாசிட்டிவ் ரத்தத்திற்கு சுமார் 3100 டாலர்கள் விற்கப்படுகிறது. 33 வயதான ஒரு கட்டுமானத் தொழிலாளி தனது எலும்பு மஜ்ஜைக்கு 15,300 டாலர் கேட்கிறார் என்றும் மேலும் தனது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் திசுக்களுக்கும் வாங்குபவர்களைத் தேடுவதாக தகவல் வெளியாக உள்ளது. மற்றொருவர் தனது சிறுநீரகம், விதைப்பை விற்பனைக்கு தேடுவதாக கூறுகிறார். 

மேலும் படிக்க: AI உலகின் அரசனுக்கு என்ன ஆனது? ஜென்சன் ஹுவாங் இல்லாமல் Nvidia இயங்குமா? The Real Story
 

Add Zee News as a Preferred Source
TAGS:
World