SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனப்படுகொலை: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கிடைத்த நீதி.. காசா மக்களுக்கு பொருந்துமா?

Myanmar Rohingya Verdict Explained: ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலையில் மியான்மர் அரசு ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மியான்மர் இந்த குற்றங்கள் தொடர்பாக ஒரு நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்கிறது. இந்த தீர்ப்பின் பின்னணி குறித்தும், காசா வழக்கில் எப்படி தாக்கத்தை என்பது குறித்தும் தொகுப்பில் பார்ப்போம்

Written By Umabarkavi K
Published: Nov 22, 2026, 13:20 IST | Updated: Nov 22, 2026, 16:36 IST
Join

Myanmar Rohingya Verdict Explained: இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ராகைன் (Rakhine) மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் தான் ரோஹிங்கியா (Rohingya) இஸ்லாமியர்கள். 1982ஆம் ஆண்டு மியான்மரில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி, அவர்களுக்கு குடியுரிமை நிராகரிக்கப்பட்டது.  

ரோஹிங்கியா இனப்படுகொலை

இதனை அடுத்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அகதிகளாக வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவங்களின் அனைத்து உரிமைகளும் அரசு மறுத்து, அவர்களை வெளியேற்ற ராணுவ நடவடிக்கையை கையில் எடுத்தது. அதாவது சிறுபான்மையினர் முஸ்லிம்கள் வாழ்ந்த ராக்கைன் பகுதியை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா ஆயுதக் குழு மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியது. இதன் காரணமாக வைத்து மியான்மர் ராணுவம் ராக்கைன் மாநிலத்தில் மிக தீவிரமான தாக்குதலை தொடங்கியது. 'தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’ என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் ஏகப்பட்ட கொடூரங்களை செய்து இருக்கிறது.

இந்த ராணுவ நடவடிக்கையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்கள் தீயில் எரிக்கப்பட்டு, பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரங்கள் அரங்கேறி இருக்கிறது. மேலும் சிறுமிகள் ஆற்றில்  வீசப்பட்டதும், அப்பாவி மக்கள் மீது ராணுவ துப்பாக்கி குண்டுகள் வீசப்பட்ட கொடூரங்களும் நடந்துள்ளன. இது போன்ற கொடூரங்களிலிருந்து அப்பாவி மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்றும் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர்.

7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

மியான்மரில் இந்த கொடூர நடவடிக்கையில் சுமார் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஐந்து வயதுக்குட்பட்ட 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த உலக நாடுகளை உலுக்கி எடுத்தது.  உலகின் பல்வேறு நாடுகளும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு இனப்படுகொலை செய்வதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐநா அமைப்பும் இந்த செயலை இனப்படுகொலை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் தான், ரோஷிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலை நிகழ்த்தியதாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நவம்பர் 19ஆம் தேதி அன்று சர்வதேச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. ரோஷிங்கியா முஸ்லிம்கள் மக்களை அழிக்கும் நோக்கில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, 2019 ஆம் ஆண்டு காம்பியா நாடு சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.  

இந்த மியான்மர் சம்பவத்திற்கு தொடர்பில்லாத காம்பியா, 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவுடன் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சர்வதேச நீதிமன்ற தலைவர் நீதிபதி யுஜி இவாசாவா தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 3 மணி நேரம் தீர்ப்பை வாசித்தது. 9ல் 6 என்ற வாக்கு வித்தியாசத்தில் மியான்மர் அரசு ஹோஹிங்கியா மக்களை அழிக்கும் நோக்கத்துடன் இனப்படுகொலை செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பபட்டது.  இந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு நடந்து வந்த நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது  பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க: “கல்யாணம் பண்ணிக்கலாமா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மேலும் ரோஹிங்கியா அல்லாத பொது மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தடுக்க மியான்மர் அரசும், பாதுகாப்பு படையும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், இன மற்றும் மத ரீதியிலான பதற்றங்களை மேலும் தூண்டும் வகையில் செயல்பட்டதாகும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

மியான்மர் அரசு தீர்ப்புக்கு கட்டுப்படுமா?

ஐநா சாசனத்தில் 94வது பிரிவின்படி நியாபகர் இந்த தீர்ப்பு கட்டுப்பட வேண்டும். மேல்முறையீடு கிடையாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு மியான்மர் அரசு கட்டுபடுமா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்திருக்கிறது. ஐநாவின் மிக உயரிய சர்வதேச நீதிமன்றத்தின் 80 ஆண்டுகால வரலாற்றில் ஒரு நாடு இனப்படுகொலை நடத்துவது என்று தீர்ப்பளித்தது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த தீர்ப்பை மியான்மர் அரசு  மீறுமா என்ற கேள்வி எழுகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவும் தண்டனையும் அமல்படுத்த குறிப்பிட்ட எந்த அமைப்பும் இல்லாத காரணத்தால், இந்தத் தீர்ப்பு எந்த அளவுக்கு நீதியை நிலைநாட்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும் படிக்க: Explained: 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ பணி விலகலுக்கான ஆஃபரை அளித்தது ஏன்? Microsoft CEO சத்யா நாதெல்லா விளக்கம்

காசா வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஹமாஸுக்கு எதிரான பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காசாவிலும் இஸ்ரேல் இதே போன்ற நடவடிக்கைகளைப் பன்மடங்கு பெரிய அளவில் நிகழ்த்தியுள்ளது.  இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த ஐநா  சர்வதேச விசாரணை ஆணையம், டிசம்பர் 2023 முதல் காசாவில் இஸ்ரேலால் குறைந்தபட்சம் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

இதனை அடுத்து, 2023 டிசம்பர் 29 அன்று, காசா பகுதியில் இஸ்ரேல் 1948 இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறி இனப்படுகொலையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி தென்னாப்பிரிக்கா இந்த வழக்கைத் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) காசா விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

உள்நாட்டு நீதி அமைப்புகளில் பின்பற்றப்படுவதைப் போல, சர்வதேச நீதிமன்றம் (ICJ) தனது முந்தைய தீர்ப்புகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம் கிடையாது.  அதாவது, தனது பழைய தீர்ப்புகளுக்கு அது கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. சர்வதேச நீதிமன்றச் சட்டத்தின் 59-வது பிரிவின்படி, அதன் தீர்ப்புகள் குறிப்பிட்ட அந்த வழக்கிற்கும், அதில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் மட்டுமே பொருந்தும்; மற்ற வழக்குகளை அது கட்டுப்படுத்தாது.

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 1948 இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளில் குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் நேரடியாக இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்டுள்ள வழக்கில்  இந்தத் தீர்ப்பு எந்தவொரு முன்முடிவையும் அல்லது நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை. மியான்மர் வழக்கை இஸ்ரேலுக்கு எதிரான வழக்குக்கான ஒரு ஒத்திகையாகப் பார்ப்பது தவறு என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: உச்சமடையும் வங்கதேச தொழிலாளர் போராட்டம்... திருப்பூருக்கு நல்ல செய்தியா...? Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES